பாராளுமன்றத்தில் யாழ்ப்பாணம் ஒஸ்மானியா, கதீஜா பாடசாலைகள் குறித்து பேச்சு
விடிவெள்ளி
யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரி மற்றும் கதீஜா பெண்கள் பாடசாலை உட்பட வடக்கிலுள்ள அனைத்து பாடசாலைகளும் முதல்நிலை பாடசாலைகளாக மாற்றப்படுமென பிரதி கல்வியமைச்சர் விஜிதமுனி சொய்சா பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வரின் வாய்மொழி மூலமான கேள்வியொன்றுக்கு பதிலளித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் முஸ்லிம்கள் உட்பட வடக்கில் மீள்குடியேற்றங்கள் துரிதமாக இடம்பெற்று வருகின்றன. இவ்வாறே தேசமடைந்த பாடசாலைகள் புனரமைக்கப்பட்டு கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. யாழ் ஒஸ்மானியா கல்லூரி 6.77 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்பட்டு வருகிறது.
Post a Comment