Header Ads



ஜம்இய்யத்துல் உலமா வருடாந்த மாநாட்டில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்



கண்டி அல் மஸ்ஜிதுல் கபீர் லைன் மஸ்ஜிதில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொதுக் கூட்டம்  நடைபெற்றது. இதில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வருகைதந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட உலமாக்கள் கலந்துகொண்டன. இதன்போது நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் கீழ்வருமாறு..!

1. பல்லின மக்களைக் கொண்ட நமது தாய் நாட்டில் சகவாழ்வும், சமய சமூக நல்லிணக்கமும் நிலவ சமூக சமயத் தலைவர்கள் உட்பட அனைத்துத் தரப்பினர்களும் இணைந்து உழைக்கவேண்டும் என இச்சபை கோரிக்கை விடுக்கின்றது.

2. சகல சமயங்களைச் சார்ந்தவர்களும் தத்தமது சமயங்களை சுதந்திரமாக அனுஷ்டிப்பதற்கு சகலமட்டங்களிலும் ஒத்துழைப்பு வழங்கப்பட வேண்டுமென இச்சபை வேண்டிக் கொள்கின்றது.

3. ஆயிரம் வருடங்களுக்கு மேலாக இந்நாட்டில் வாழுகின்ற முஸ்லிம் சமூகம் அடுத்த இன மக்களோடு ஐக்கியமாகவே வாழ்ந்துவருகின்றது. இந்நிலை எக்காலத்திலும் தொடர வேண்டுமென்பது ஜம்இய்யாவின் பிரார்த்தனையாகும்.

4. சில தீயசக்திகள் இன முறுகல்களை ஏற்படுத்த முனைப்புடன் செயற்படுகின்றன. அவற்றை இனங்கண்டு தவிர்க்க அனைத்துத் தரப்பினர்களும் விழிப்புடன் இருக்கவேண்டியது அவசியமாகும் என இச்சபை கருதுகின்றது.

5. சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கென்று சவூதி அரசினால் வழங்கப்பட்ட வீடுகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரியமுறையில் வழங்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கவேண்டுமென இச்சபை மாண்புமிகு ஜனாதிபதியை வேண்டிக் கொள்கின்றது.

6. பாடசாலைகளில் நிலவுகின்ற அரபு ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்திசெய்ய அரபு ஆசிரியர் நியமனம் வழங்கப்படவேண்டுமென கல்வி அமைச்சை இச்சபை கேட்டுக் கொள்கின்றது.

7. முஸ்லிம் அரச பாடசாலைகளில் நிலவுகின்ற பௌதீகவளங்களை வளப்படுத்த ஆவனசெய்ய வேண்டுமென அரசாங்கத்தை இச்சபை விநயமாக வேண்டிக் கொள்கின்றது.

8. சில அரசாங்கப் பாடசாலைகளில் விதிக்கப்பட்டுள்ள ஹிஜாபுக்கு எதிரான தடைகள் அகற்றப்பட சம்பந்தப்பட்டவர்கள் உரியநடவடிக்கை எடுக்கவேண்டுமென இச்சபை எதிர்பார்க்கின்றது.

9. இந்நாட்டில் ஆலிம்கள் வேற்றுமையில் ஒற்றுமை கண்டு பரஸ்பர புரிந்துணர்வுடனும் விட்டுக் கொடுப்புணர்வுடனும் ஒத்துழைப்போடும் நடந்துகொள்ள வேண்டுமென இச்சபை கேட்டுக் கொள்கின்றது. 

10. முஸ்லிம் அரசியல் தலைவர்கள் தங்களுக்கிடையிலான அரசியல் முரண்பாடுகளை மறந்து முஸ்லிம் சமூகம் என்ற உணர்வோடு ஐக்கியமாகவும் ஒற்றுமையாகவும் முஸ்லிம் சமூகத்தின் எழுச்சிக்காகவும் இந்நாட்டின் மேம்பாட்டிற்காகவும் ஒன்றுபட்டு செயற்படவேண்டுமென இச்சபை வேண்டுகோள் விடுக்கின்றது.

11. ஊடகவியலாளர்கள் சமூகங்களுக்கிடையே நல்லிணக்கத்தையும் ஒருமைப்பாட்டையும் உருவாக்கும் வகையில் பொறுப்புணர்ச்சியுடன் செய்திகளை வழங்கவேண்டுமென இச்சபை அன்பாகக் கேட்டுக் கொள்கின்றது. 

12. இலங்கையில் தொடர்ந்துகொண்டிருக்கின்ற இன முறுகல் நிலமைகளை கழைவதற்காக அரசாங்கம் காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என இச்சபை எதிர்பார்க்கின்றது.

13. யுத்தம் முடிந்த பின்னரும் இதுவரை மீள் குடியேற்றப்படாத மக்கள் தமது சொந்த இடங்களுக்கு மீள் குடியேற்றப்படுவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்படவேண்டும்

14. ஒருங்கிணைப்பிற்கும் ஒத்துழைப்புக்குமான அமைப்பின் குறிக்கோள்கள் நிறைவேறும் வகையில் இந்நாட்டு முஸ்லிம்கள் அனைவரும் கட்சி, இயக்கம், தரீக்கா என்ற பாகுபாடின்றி ஒன்றுபடவேண்டுமென இச்சபை அழைப்புவிடுக்கின்றது.

15. முஸ்லிம் சமூகத்தை வழிநடத்துகின்ற பாரிய பொறுப்பை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மேற்கொண்டுவருவதை அனைத்து முஸ்லிம்களும் அங்கீகரித்து ஒத்துழைப்பு நல்கிவருவதற்காக நன்றி செலுத்துவதோடு தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கவேண்டுமென கேட்டுக் கொள்வதோடு அதற்கு அல்லாஹ் உதவ வேண்டுமென இச்சபை பிராத்திக்கின்றது.

 

5 comments:

  1. நாம் இன்று எமது மொழியை தொலைத்து நிற்கின்றோம் (அரபு).
    முக்கியமாக அரபு மொழி குர்-ஆணை ஓதவும் விளங்கவும் அவசியமானதாகும்
    முஸ்லிம் பாடசாலைகளில் அரபு மொழியை கட்டாய பாடமாக ஆக்கவேண்டும்
    இது தான் இன்றைக்கு எமக்கு அவசியமாகும்.

    ReplyDelete
  2. இந்த விடயங்கள் நிறைவேற ஓன்றுபட்டு உழைப்போம்.

    ReplyDelete
  3. sariyane karuttu

    ReplyDelete
  4. nalla vidayam .. ottrumai avasiyam ...

    ReplyDelete
  5. nalla vidayam ..

    ReplyDelete

Powered by Blogger.