தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு உதவ குவைத் இணக்கம் - ஹக்கீமிடம் உறுதியளித்தது
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தில் சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ பீடமொன்றை ஆரம்பிப்பதற்கு குவைத் பொருளாதார நிதியம் இணக்கம் தெரிவித்துள்ளது.
குவைத்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையிலான உயர்மட்டத் தூதுக் குழுவினரிடமே குவைத் பொருளாதார நிதிய பிரதிநிதிகள் இந்த இணக்கத்தை வெளியிட்டுள்ளனர்.
இவர்கள் குவைத் பொருளாதார நிதியத்தின் பணிப்பாளர் நாயகம் அப்துல் வஹாப் அல்பதீன், நிதியத்தின் ஆசிய விவகாரப் பணிப்பாளர் வலீத் அல் ஹைதர் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு முதற் கட்டமாக ஆயிரம் மில்லியன் டொலரையும் இரண்டாம் கட்டமாக ஆயிரம மில்லியன் டொலரையும் ஒதுக்கீடு செய்து உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கு பாரியளவில் உதவி வருகின்ற குவைத் நிதியம் மூன்றாம் கட்டமாக இப்பல்கலையில் சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ பீடமொன்றை ஆரம்பிப்பதற்கு உதவ வேண்டும் என்று ரவூப் ஹக்கீம் அவர்கள் முன்வைத்த கோரிக்கையை முழுமையாக ஏற்றுக் கொண்ட குவைத் நிதிய பிரதிநிதிகள் அதற்கான பூர்வாங்க ஏற்பாடுகளை உடனடியாக மேற்கொள்வதாக உறுதியளித்தனர்.
Post a Comment