வவுனியா சிறைச்சாலை பணயக்கைதிகள் விவகாரம் முடிவு (படங்கள்)
வவுனியா சிறைச்சாலையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க சந்தேக நபர்களான கைதிகளால் பணயக்கைதிகளாக்கப்பட்டிருந்த சிறையதிகாரிகள் மூவர் சற்றுமுன் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நேற்று மாலை முதல் மேற்படி அதிகாரிகள் மூவரும் பணயக்கைதிகளாக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இவர்கள் இராணுவம், விசேட அதிரடிப்படை மற்றும் பொலிஸாரின் கூட்டு நடவடிக்கை மூலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா சிறைச்சாலையில், அரசியல் கைதிகளால் பணயமாக பிடித்து வைக்கப்பட்டிருந்த
சிறைக் காவலர்கள் மூவரும் மீட்கப்பட்டுள்ளதாக விசேட அதிரடிப் படையினர்
தெரிவித்துள்ளனர்.
இராணுவத்தினர், பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட கூட்டு முயற்சியின் மூலமாக இவர்கள் மூவரும் மீட்கப்பட்டுள்ளனர்.
வவுனியா சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அரசியல் கைதிகளில் மூன்று பேர் கடந்த செவ்வாய்க்கிழமை பூஸாவில் உள்ள பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுக்குக் கொண்டு செல்லப்பட்டதையடுத்து, அவர்களை மீண்டும் வவுனியா சிறைச்சாலைக்கே கொண்டுவர வேண்டும் எனக் கோரி, இந்த சிறைக்கைதிகள் புதன்கிழமை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையிலேயே சிறைக் காவலர்கள் மூவரை அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் பணயமாகப் பிடித்து வைத்திருந்தனர்.

Post a Comment