தமிழ் பேசும் மக்களின் சிந்தனைக்கு..!
Babagee - London
இலங்கை வாழ் முஸ்லிம்களை குழப்புவதற்கும் அவர்களது ஏக போக உரிமைகளை பரிப்பதட்கும் அரசாங்கத்தின் கைப்பிள்ளைகளான சில சிங்கள இனவாத அமைப்புகள் அண்மைக்காலமாக பல வழிகளில் முயற்சித்தும் கைகூடாத நிலையில் தற்போது நடைபெறப்போகும் கிழக்கு மாகாண சபை தேர்தலை அவர்கள் ஓர் பெரும் ஆயுதமாக பயன்படுத்தப் போகுரார்கள், இலங்கை வாழ் தமிழர்களினதும் முஸ்லிம்களினதும் உறவை சிதரடிக்கப் போகின்றர்கள், என்பதில் எந்த விதமான ஐயமும் இல்லை.
இலங்கை வாழ் தமிழ் முஸ்லிம் மக்கள் சிந்தித்து செயற்படவேண்டிய ஓர் தருணமிது கிழக்கின் முதலமைச்சர் ஒர் முஸ்லிம்தான் என்று முஸ்லிம்களிடமும், கிழக்கின் முதலமைச்சர் தமிழர்களுக்குத்தான் என்று தமிழர்களிடமும் கூறி இரு இனங்களையும் முட்ட விட்டு வேடிக்கை பார்பதற்கு அரசாங்கமும் பௌத்த பேரினவாத அமைப்புக்களும் திட்டமிட்டுக்கொண்டிருப்பதை கிழக்கு வாழ் மக்கள் நன்கு புரிந்துகொண்டு செயற்படவேண்டிய தருணம் இது.
வடகிழக்கு மாகாணம் தமிழ் பேசும் மக்களின் தாயகம் என்றால் வடகிழக்கில் வாழும் முஸ்லிம்கள் என்ன அரபு மொழியா பேசிக்கொண்டிருக்கின்றார்கள் இல்லேயே, வரதராஜ பெருமாள் முதலமைச்சராக இருக்கும் போது முஸ்லிம்கள் எதிர்கவில்லை, சந்திர காந்தன் முதலமைச்காரக இருக்கும் போது முஸ்லிம்கள் எதிர்கவில்லை ஆகவே நாளை ஓர் முஸ்லிம் முதலமைச்சர் வந்தால் நிச்சயமாக தமிழர்களின் எதிர்ப்பு வரப்போவதில்லை ஆனால் பௌத்த பேரினவாத சூழ்ச்சிகளில் இருந்து இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ளவேண்டும்.
யார் இந்த
ReplyDeleteதிரும்ப திரும்ப வட,கிழக்கு தமிழர்களின் தாயகம் என்று கூறியே காலத்தை ஓட்டப்போகிறீர்களா?இலங்கை முழுவதும் வாழும் முஸ்லீம்களின் தாய் மொழி தமிழ் தான்.ஒரு சிலர் சிங்கள,ஆங்கில மொழி மூலம் படித்தாலும் வீட்டில் பேசும் மொழியாக தமிழைத்தான் பேசுகிறார்கள்.ஆனால் எல்லா இனத்திலிருந்தும் இறை நம்பிக்கையின் அடிப்படையில் நாங்கள் தனித்துவமானவர்கள் இதன் மூலமாக எங்களை பிரித்துப்பார்க்காமல் நாம் ஒற்றுமையுடன் செயல் படவேண்டிய காலமிது.நாங்கள் வந்தேறு குடிகள் அல்ல என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.சாதீய வெறிக் கொடுமையினால் தப்பிப்பதற்காக இஸ்லாத்தை எங்கள் முன்னோர்கள் தெரிவு செய்தார்கள்.சகல கொள்ளைக்கார இயக்கங்களும் வந்த பிறகுதான் கருத்து வேறுபாடுகளும்,மனக் கசப்பும் வந்தது.முஸ்லீம்கள் தரப்பிலும் தவறுகள் இல்லாமல்லில்லை.அந்த சந்தர்ப்பத்தை ஒவ்வொரு அரசும் தங்களுக்கு சாதகமாக மாற்றி அறுவடை செய்து கொண்டார்கள்.ஒரு தடவை தமிழரும்,ஒரு தடவை முஸ்லீமும் ஆளுவதற்கு,அரசை தவிர்த்து தமிழ்,முஸ்லீம் தலைமைத்துவம் பேச்சு வார்த்தையின் மூலமாக ஒரு முடிவுக்கு வரலாமே.மூவினத்திலும் இனவாதம் இருக்கிறது அதை தவிர்த்து பார்த்தால் எல்லோரும் நல்லவரே.இனவாதத்தை வைத்துத்தானே ஆட்சி,அதிகாரம் நடக்கிறது.ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து தயாராக இருந்தால் பௌத்த இனவாதத்தை வெற்றிகொள்ளலாம்.காலம் பதில் சொல்லும்.
ReplyDelete