இஸ்லாம் பற்றியும் முஸ்லிம்கள் குறித்தும் நிறையக் கற்றுக்கொண்டோம்..! யாழ் தமிழ் மாணவி
என். மணிவானன்
விரிவுரையாளர் - இலங்கை இதழியல் கல்லூரி
சமாதானத்தைக் கட்டியெழுப்புவதில் மாணவர்களின் பங்கும் பணியும் மிக வரையறுக்கப்பட்ட நிலையிலேயெ பெறப்பட்டுள்ளன. வன்முறைகளின் போதும் யுத்தத்தின் போதும் பாதிக்கப்படும் தரப்பினராக மாணவர்கள் காட்டப்படுமளவுக்கு அவர்கள் மீளுருவாக்கத்தின் பிரதான பங்காளின் என்பது பெரும்பாலும் வெளிப்படுத்தப்படுவதில்லை. அந்தவகையில், மாணவர்களின் ஆக்கத்திறனுக்கு வாய்ப்பளித்து, அவர்களின் சிந்தனா சக்தியை மீளுருவாக்கத்திற்கும் பன்மைத்துவ விழுமிபங்களை ஊக்குவிப்பதற்கும் பயன்படுத்தும் வகையிலான வானொலி நாடகச் செயற்றிட்டம் ஒன்று அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
ஜனநாயத்தை பேணுதல், மனித உரிமைகளுக்கு மதிப்பளித்தல், தொடர்ச்சியான உரையாடல், பல்வகைமையில் ஈடுபடுதல், வித்தியாசங்களைப் புரிந்துகொள்தல், வித்தியாசங்களைக் கற்றல் மற்றும் வித்தியாசங்களுக்கு இடமளித்தல், நீதியை நிலைநாட்டுதல், பல்வகைமையை ஏற்றுக்கொள்ளல், அகிம்சை வழித் தீர்வை நம்புதல், பொது இலக்கினை அடைதல், சமாதானத்தைக் கட்டியெழுப்புதல் போன்ற விழுமியங்களில் ஒஸ்மானியாக் கல்லூரி மாணவர்களும் பயிற்றப்பட்டனர். செயற்றிட்டத்தின் முடிவில் இத்தகைய பன்மைத்துவ விளுமியங்களை அடிப்படையாகக் கொண்டு மாணவர்கள் பத்து நாடகங்களை எழுதினர். இதில் ஒஸ்மாணியாக் கல்லூரி மாணவிகள் எழுதிய மூன்று நாடங்கள் இடம்பெற்றன.
முரண்பாட்டு நிலைமாற்றத்தில் பிரச்சனையை புரிந்துகொள்தல், அவற்றை உரையாடுதல், விவாதித்தல், சமரசம் செய்தல் என்பன சில கதைகளில் முக்கிய இடம்பெற்றன. இனம், மொழி, சாதி, பால், மதம், சமூக அந்தஸ்து மற்றும் தொழில் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே வித்தியாசங்கள் மனிதர்களின் உயர்வு தாழ்வை தீர்மானிப்பதில்லை என்பதை யாழ்மாணவர்கள் மிகவும் நேர்த்தியாக எடுத்துக்காட்டியுள்ளார்கள். இத்தகைய வித்தியாசங்கள் மனிதர்களில் எத்தகைய உயர்வதாழ்வையும் குறிப்பதில்லை என்பதை மாணவர்கள் மிகவும் நேர்த்தியாக எடுத்துக்காட்டியுள்ளனர். காவியனின் ஓவியம், அவர்தான் ஆனால் அவரில்லை மற்றும் மாமனும் மாறினான்; போன்ற நாடகங்களில் இத்தன்மையை காணலாம்.
விரிவுரையாளர் - இலங்கை இதழியல் கல்லூரி
பன்மைத்துவத்தை ஊக்குவிக்கும் யாழ் மாணவர்களின் வானொலி நாடகங்கள்
அறிமுகம்
அறிமுகம்
சமாதானத்தைக் கட்டியெழுப்புவதில் மாணவர்களின் பங்கும் பணியும் மிக வரையறுக்கப்பட்ட நிலையிலேயெ பெறப்பட்டுள்ளன. வன்முறைகளின் போதும் யுத்தத்தின் போதும் பாதிக்கப்படும் தரப்பினராக மாணவர்கள் காட்டப்படுமளவுக்கு அவர்கள் மீளுருவாக்கத்தின் பிரதான பங்காளின் என்பது பெரும்பாலும் வெளிப்படுத்தப்படுவதில்லை. அந்தவகையில், மாணவர்களின் ஆக்கத்திறனுக்கு வாய்ப்பளித்து, அவர்களின் சிந்தனா சக்தியை மீளுருவாக்கத்திற்கும் பன்மைத்துவ விழுமிபங்களை ஊக்குவிப்பதற்கும் பயன்படுத்தும் வகையிலான வானொலி நாடகச் செயற்றிட்டம் ஒன்று அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
யாழ் மத்திய கல்லூரியை தளமாகக்கொண்டு இடம்பெற்ற இப்பயிற்சிநெறியில் யாழ் மத்திய கல்லூரி, புனித திருக்குடும்ப கண்ணியர் மடம், ஒஸ்மானியா கல்லூரி ஆகிய பாடசாலையைச் சேர்ந்த 18 தமிழ், முஸ்லிம் மற்றும் கிருஸ்தவ மாணவர்கள் கலந்துகொண்டார்கள். பன்மைத்துவம் மற்றும் பல்வகைமைச்சார் ஒழுக்கவிழுமியங்களை வானொலி நாடகத்தின் ஊடாக ஊக்குவிப்பதே இப்பயிற்சிநெறியின் பிரதான நோக்கமாகும். நீலன் திருச்செல்வம் நம்பிக்கை பொறுப்பின் உதவியுடன் இத்திட்டத்தை இலங்கை அபிவிருத்திக்கான ஊடகவியலாளர் மன்றம் நடத்தியது.
இத்தகைய நாடகச் செயற்றிட்டம் ஒன்றில் கலந்து கொள்ளும் வாய்ப்பினை யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரி மாணவிகள் 83ஆம் ஆண்டு கலவரத்தின் பின்னர் முதல்தடவையாகப் பெற்றுள்ளனர்.
யுத்த சூழ்நிலையில் கல்விக்கான வளங்களை இழந்த நிலையில் செயற்படும் இப்பாடசாலை மாணவர்களுக்கு தமது ஆற்றலை வெளிப்படுத்துவற்கான வாப்புக்கள் பெரும்பாலும் இதுவரை வரையறுக்கப்பட்டிருந்தன. யாழ்ப்பாணத்தைப் பொறுத்ளவில் சகோதர இனத்தைச் சேர்ந்த மாணவ நண்பர்களுடன் இணைந்து படைப்பாக்கங்களில் ஈடுபடும் வாய்ப்பும் இதுவரை கிட்டவில்லை. தமிழ் முஸ்லிம் சமூகங்களுக்கிடையில் ஏற்பட்ட விரிசல் இன்றைய இளய தலைமுறையை அதிகம் பாதித்துள்ளது. இந்த நிலையில் தமிழ் முஸ்லிம் சமூகங்களுக்கிடையிலான தொடர்பாடலும் வளர்ச்சியடைந்திருக்கவில்லை. இதன் தொடர்ச்சியாக மாணவச் சமூகமும் தமக்குள் தொடர்பாடலை வளர்த்துக்கொள்ளவில்லை. இப்பயிற்சிநெறியில் கலந்துகொண்ட ஹிந்து மற்றும் கிருஸ்தவ மாணவிகள் முஸ்லிம் மாணவிகளுடன் ஆரத்தழுவி அழும்வரை இந்த மாணவர்களுக்குள் இருந்த விரிசல் பற்றி புரியவே இல்லை.
திருக்குடும்பக் கன்னியர் மடத்தைச் சேர்ந்த மாணவி மிதுஸா தனது அனுபவத்தை பகர்ந்து கொண்டபோது 'இதுவரை முஸ்லிம்கள் பற்றி எமக்கு எதுவும் தெரியாது. எங்களுக்கு முஸ்லிம் நண்பர்களும் கிடையாது. அவர்களின் பண்பாடு மற்றும் வாழ்க்கை முறைபற்றி நாங்கள் எதுவும் அறிந்திருக்கவில்லை. இந்தப் பயிற்சி நெறியின் பின்னர்தான் இஸ்லாம் பற்றியும் முஸ்லிங்கள் பற்றியும் நிறையக் கற்றுக்கொண்டோம். இப்போது முஸ்லிம் தோழிகள் எம்மோடு மிகவும் நெருங்கிவிட்டார்கள். இவர்களை சந்திக்கக் கிடைத்ததும் அவர்களுடன் பழகக் கிடைத்ததும் பெரியதொரு வாயப்பாகும். இல்லாவிட்டால் முஸ்லிம்கள் பற்றி தெரியாதது ஒரு புரமிருக்க அவர்களைப் பற்றித் தப்பான கண்ணோட்டத்துடன் இருந்திருப்போம். இனிமேல் நாம் சகல மதத்தவர்களுடனும் சேர்ந்து நடப்போம்' என்றனர்.
ஜனநாயத்தை பேணுதல், மனித உரிமைகளுக்கு மதிப்பளித்தல், தொடர்ச்சியான உரையாடல், பல்வகைமையில் ஈடுபடுதல், வித்தியாசங்களைப் புரிந்துகொள்தல், வித்தியாசங்களைக் கற்றல் மற்றும் வித்தியாசங்களுக்கு இடமளித்தல், நீதியை நிலைநாட்டுதல், பல்வகைமையை ஏற்றுக்கொள்ளல், அகிம்சை வழித் தீர்வை நம்புதல், பொது இலக்கினை அடைதல், சமாதானத்தைக் கட்டியெழுப்புதல் போன்ற விழுமியங்களில் ஒஸ்மானியாக் கல்லூரி மாணவர்களும் பயிற்றப்பட்டனர். செயற்றிட்டத்தின் முடிவில் இத்தகைய பன்மைத்துவ விளுமியங்களை அடிப்படையாகக் கொண்டு மாணவர்கள் பத்து நாடகங்களை எழுதினர். இதில் ஒஸ்மாணியாக் கல்லூரி மாணவிகள் எழுதிய மூன்று நாடங்கள் இடம்பெற்றன.
நாடகங்களின் பேசு பொருள்
முரண்பாட்டு நிலைமாற்றத்தில் பிரச்சனையை புரிந்துகொள்தல், அவற்றை உரையாடுதல், விவாதித்தல், சமரசம் செய்தல் என்பன சில கதைகளில் முக்கிய இடம்பெற்றன. இனம், மொழி, சாதி, பால், மதம், சமூக அந்தஸ்து மற்றும் தொழில் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே வித்தியாசங்கள் மனிதர்களின் உயர்வு தாழ்வை தீர்மானிப்பதில்லை என்பதை யாழ்மாணவர்கள் மிகவும் நேர்த்தியாக எடுத்துக்காட்டியுள்ளார்கள். இத்தகைய வித்தியாசங்கள் மனிதர்களில் எத்தகைய உயர்வதாழ்வையும் குறிப்பதில்லை என்பதை மாணவர்கள் மிகவும் நேர்த்தியாக எடுத்துக்காட்டியுள்ளனர். காவியனின் ஓவியம், அவர்தான் ஆனால் அவரில்லை மற்றும் மாமனும் மாறினான்; போன்ற நாடகங்களில் இத்தன்மையை காணலாம்.
சட்டம், ஒழுங்கு, ஜனநாயக விழுமியங்கள் ஒழுங்காகப் பேணப்படாத சமூக சூழ்நிலையில் மீளிணக்கமும், சுபீட்சமான சகவாழ்வும் வாழ முடியாது என்பது மிகவும் சிறப்பாக எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. பயிற்சிநெறியின் தொடக்கத்தில் அடையாளங்களை அடிப்படையாகக் கொண்ட வித்தியாசங்கள் தேவையில்லை என்றும் அவை இருப்பதல்தான் சமூகத்தில் முரண்பாடும், யுத்தமும் ஏற்படுகின்றன எனவும் கூறிய மாணவர்கள் தமது கதைகளில் வித்தியாசங்கள்தான் மக்களிடையே தனித்துவத்தை எடுத்துக்காட்டுகின்றன என்பதையும் காத்திரமான முறையில் எடுத்துக்காட்டியுள்ளனர். வித்தியாசங்களை கற்றல், அவற்றில் ஈடுபடுதல், வித்தியாசங்களுக்கு இடமளித்தல், வித்தியாசங்களை ரசித்தல் என்பவற்றின் மூலம் ஐக்கியமிக்க சமூகத்தை உருவாக்க முடியும் என்பதை சிவா என்கிற முதலாளி, இப்படியும் ஆசீர்வாதம் போன்ற நாடகப் பிரதிகள் நயமுற எடுத்துக் கூறிகின்றன.
தொழில், சமூகம் அந்தஸ்து, பால்நிலை மற்றும் கல்வித் தகுதி மற்றும் சமயம் ஆகியவற்றை அடிப்படையாகக்கொண்டு மனிதர்கள் ஏற்ற இறக்கத்துடன் பார்க்கப்படுவது இன்றைய சிக்கலான சமூக சூழ்நிலையில் உள்ள பொதுவாகன பிரச்சனையாகும். இந்தப் பிரச்சினைகளுக்கான மிகசும் சொகுசான தீர்வினை பன்மைத்துவம் மற்றும் பல்வகைமை ஆகியவற்றினூடாக மாணவர்கள் எடுத்துக்காட்டியுள்ளனர். கண்ணனின் கதிரை மற்றும் காவியனின் ஓவியங்கள் ஆகிய நாடகங்கள் எடுத்துக்கூறுகின்றன. பாரதி சொல்வது போல் ஆயிரம் தொழில்கள் செய்வீர் என்பதை மிகக்காத்திரமாக மாணவர்கள் சிந்தரித்தள்ளனர்.
உலகத்தின் இயற்கையான இயக்கத்திற்கு வித்தியாசமான தொழில்களைச் செய்பவர்கள் இருத்தல் வேண்டும் என்பது மாணவர்களின் புரிதல்களின் வாயிலாக வெளிப்பட்டது. எந்தத் தொழிலும் அது அவரவர் பண்பாண்டு வரம்புக்குள் அமைகின்றபோது மதிக்கப்பட வேண்டும் என்ற உண்மை பிரதிகளில் சிறப்பாகத் தெரிகின்றன. செய்யும் தொழிலால் மனிதர்கள் என்ற அடிப்படையிலான அந்தஸ்து வழங்கப்படக்கூடாது மாறாக மனிதத்தன்மைக்கும் பல்வகைமையை ஏற்றுக்கொள்கின்ற பக்குவத்திற்கும்தான் உயரிய அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்றும் பிரதிகள் சொல்கின்றன. வித்தியாசங்கள் மதிக்கப்ட்ட ஒரு ஐக்கிய சமூகத்தைப் பற்றி பத்து நாடகங்களும் பேசுகின்றன. நாடகத்தில் அதிகமாற விழுமியங்கள் சொல்லப்படவில்லை ஆனால் காட்டப்பட்டுள்ளன.
இறுதியாக வழங்கப்பட்ட மதிப்பீட்டுப் பாத்திரத்தில் 'இதற்கு முன்னர் தாம் பெண் தோழிகளை ஒழுங்காக மதிப்பதிலலை. ஆனால் இனிமேல் மதிப்போம்' என பல மாணவர்கள் குறிப்பிட்டிருந்தனர். பால்நிலைப் பல்வகைமை பற்றிக் கற்ற இம்மாணவர்களின் பிரதிகள் பல இடங்கிளல் சமத்துவம் பற்றிப் பேசியுள்ளனர். மனிதர்களுக்கு சிறப்பை வழங்குவதும், உயர்வை வழங்குவதும் அவர்களுக்குள் இருக்கும் அழகிய குணாம்சங்களும் வித்தியாசங்களுடன் கைகோர்த்துச் செல்ல விரும்பும் ஆற்றலும் என்பதை மாணவர்கள் புரிந்து எழுதிய பிரதியாக கவரிமான் அமைந்துள்ளது.
சமய மற்றும் கலாசாரப் பன்மைத்துவம் பற்றியும் குறிப்பிட்ட சில நாடகங்கள் பேசியுள்ளன. நோயினை குணமாக்க வைத்தியர் பரிந்துரைத்த மருந்தினை வியாதியை அதிகரிக்கப் பயன்படுத்துவது போல சமூகவாழ்கையை ஒற்றுமையால் செழுமைப்படுத்த வழங்கப்பட்ட சமயம் மற்றும் கலாசாரம் என்கின்ற கருவிகள் இன்று பிரிந்து செல்தலுக்கான கருவியாகப் பயன்படுகின்றன. மக்களை துண்டாடுவற்கான ஆயுதங்களாக இவை பயன்டுகின்றன. ஆனால் இவற்றை மதிப்பதன் வாயிலாக, இவற்றில் உள்ள வித்தியாசங்களில் ஈடுபடுவதன் வாயிலாக இவற்றுக்கு இடமளிப்பதன் வாயிலாக மிகவும் பயணுறுதிவாய்ந்த சமாதானத்தை அடைய முடியும் என்பதை அகல்விளக்கு, கண்ணனின் கதிரை மற்றும் தத்தார் தாத்தா ஆகிய கதைகளில் மாணரவர்கள் எடுத்துக்காட்டியுள்ளனர்.
பல்வகைத்தன்மை, பன்மைத்துவம்சார் விழுமியங்களைக் கற்ற மாணவர்கள் அவற்றை அடிப்படையாகக் கொண்ட பாத்திரங்களை உருவாக்கி, அப்பாத்திரங்கள் நடமாடும் களமாக தாம் வாழும் பிரதேசங்களான யாழ்ப்பாண நகரம், கைதடி, மானிப்பாய், நாவற்துறை போன்றவற்றை வரைபடத்தில் கொண்டுவந்தனர். பின்ன்ர் கதைக்கருக்களை உருவாக்கி, தேர்ந்தெடுத்த பத்து விழுமியங்களை அடிப்படையாகக் கொண்டு கதைகளை எழுதினர். தாம் எழுதிய கதைகளில் மூத்த வானொலி கலைஞர்களுடன் நடிக்கும் வாய்ப்பினையும் பெற்றுக்கொண்டனர்.
இதுவரை நாடக ஒலிப்பதிவு வெளிகலையத்தில் நடந்ததில்லை. சுமார் இருபது மாணவக்கலைஞர்களும் மூன்று மூத்த கலைஞர்களும் பங்குகொள்ளும் ஓரளவுக்குப் பிரமாண்டமான ஒலிப்பதிகள் செப்பனிடப்படான கலையகத்திலன்றி நடிக்கப்பட்டதும் இல்லை. மாணவர்களும் மூத்த கலைஞர்களும் சேர்ந்து நடித்ததும் இல்லை. பன்மைத்துவ விழுமியங்கள் தொடர்பாக இத்தகைய முறையில் பிரதிகள் எழுதப்பட்டதும் இல்லை. ஒரு திருப்பத்தை ஏற்படுத்திய வெற்றிகரமான வெளிக்கள ஒலிப்பதிவில் மாணவர்கள் மூத்த கலைஞர்களான ஜீ. பீ. வேதனாயம் மற்றும் லூக்கஸ் திருச் செல்வம் ஆகியோருக்கு நிகராக நடித்தனர். மாணவர்களுக்குள் இருந்த நடிப்புத்திறன் வேதாவையும், லூக்கஸையும் வியக்க வைத்தது. முதல் நாளிரவு பன்னிரண்டு மணிவரை இவர்கள் இருவரும் மாணவர்களின் திறமையைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தனர்.
ஒஸ்மானியாக் கல்லூரியைச் சேர்ந்த நஸ்ரியாபேகம், அஸ்ரிபா ஆகியோருடன் நடித்தப்போது இலங்கை வானொலி முஸ்லிம் சேவையின் பிரபல பெண் கலைஞர் சில்மியா ஹாதியுடன் நடிப்பது போல தோன்றியதாக வேதா சொன்னார். இவை எல்லாவற்றையும் கேட்டப்போது இந்த வெளிக்களத்தில் எவ்வளவு கலைஞர்கள் இருக்கின்றார்கள் என்பதும் ஏன் இவர்களை யாழ் சேவை பயன்படுத்தக்கூடாது என்ற கேள்வியும் இத்தகைய ஆற்றலுள்ள எத்தனை நூறு மாணவர்கள் வெளியிலிருப்பார்கள் என்பதும் கேள்விக்குறியாக தோன்றியது. எமது இலங்கையின் ஒலிபரப்புக்கு வயது அதிகமாகிறது. அதன் சமூக அறுவடை சுருங்கிப்போகின்றது என நினைக்க வேண்டியிருந்தது.
பயிற்சிநெறியில் கலந்துக்கொண்ட 19 மாணவர்களும், பிரதி எழுதுதலில் பங்களிப்புச் செய்தனர். சகலரும் நாடகத்திற்கு குரல் கொடுத்தனர். சிலர் ஒரு சில நாடகங்களைத் தவிர ஏனையவற்றில் முழுமையாக நடித்தனர்.
பத்து நாடகங்களையும் ஒலிப்பதிவு செய்ய இரண்டு நாட்கள் தேவைப்பட்டன. ஒலிப்திவு நேரத்தில் மெய்மறந்து ஒலிப்பதிவைப் பார்த்துக் கொண்டிருந்த மாணவர்கள் மாலையானதும் நண்பர்களை, பயிற்றுவிப்பாளர்களை பிரிந்து செல்ல நேரிட்டப்போது கலங்கிப்போய் நின்றனர். தமிழ், முஸ்லிம் மாணவிகள் ஆற்றாமையால் வாய்விட்டழுதனர். சிலர் ஒதுக்குப்புறமாக நின்று அழுதுக்கொண்டிருந்தனர். ஒலிப்பதிவின் நிறைவோடு சில மாணவர்களும் மாணவிகளும் மறைவாக இடங்களில் தனியாக நின்று அழுது கொண்டிருந்தனர். அத்தனை நாளும் கலகலப்பாகப் பேசி, சிரித்துக்கொண்டிருந்த மாணவர்கள் பயிற்றுவிப்பாளர்களை கட்டியணைத்துக்கொண்டு அழுதனர். இனத்தால் பிரிந்திருந்த மாணவாகளை வானொலி நாடகம் எவ்வளவு இறுக இணைத்திருக்கின்றது என்பது அப்போதுதான் தெரிந்தது. அன்று இறுதிநாளன்று இடம்பெற்ற சான்றிதழ் வழங்கலில் சகல மாணவர்களும் பங்கேற்றனர். குறுகிய அழைப்பினை ஏற்று பாடசாலை அதிபர்களும் சமூகமளித்தனர்.
நான் இதுவரை வானொலி நாடகத்தைக் கேட்டதும் இல்லை. வானொலி நாடகப் பிரதியைக் கண்டதும் இல்லை. சாதாரணதரம் கற்கும் போது ஓரிருநாள் இது பற்றி ஆசிரியர் சொல்லித்தந்தார். அப்போதும் நான் நினைத்தேன் இதுவும் மேடை நாடகத்தைப் போன்ற ஒரு கலையென்று. இப்போது வானொலி நாடகத்தின் சக்தியை நான் அறிகின்றேன்.
பன்மைத்துவம் தொடர்பான கற்றையை மேற்கொள்ள முன்னர் முஸ்லிம் நண்பர்களுடன் நான் பழகியதில்லை. அவர்களுடன் பழக வேண்டும் என்றும் நான் எண்ணியதில்லை. எனது பாடசாலைக் காலத்தில் முஸ்லிம் பெண் பிள்ளைகளுடன் பேசியதே இல்லை. இப்போது நான் அவர்களுடனும் சிறந்த உறவைப் பேணிக்கொள்ள வேண்டும் என்று நினைக்கின்றேன். சமய வித்தியாசங்களைக் களைந்து மனிதர்கள் என்ற வகையில் எல்லோரையும் சமமாக மதிப்பது எவ்வாறு என்பதை இந்த பயிற்சி நெறி எனக்குச் சொல்லித்தந்தது. இனி என்னால் நாடகம் எழுத முடியும். பிரதிகளைத் திருத்த முடியும். நாடகத்தை தயாரிக்கவும் முடியும். என்போன்ற மற்ற மாணவர்களுக்கு இதேபோன்ற பயிற்சியை நடத்தும் ஆற்றல் இப்போது என்னிடம் இருக்கின்றது என நம்புகின்றேன். யாழ்ப்பாணத்தில் உள்ள ஏனைய சமூகப் பிரச்சனைகளை வெளிக்கொணர்வதற்கு வானொலி நாடகத்தை நான் சிறந்த கருவியாகப் பயன்படுத்துவேன் என்றார் பயிற்சிநெறியில் கலந்து கொண்ட யாழ். மத்திய கல்லூரி மாணவன் கவிராஜ்.
இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த யாழ்.ஒஸ்மானியாக் கல்லூரியின் அதிபர் இன்றைய மாணவர்களுக்குத் தேவை வெறும் புத்தகக்கல்வி மாத்திரமன்று. பல்வகைமை நிறைந்த சூழ்நிலையில் கொண்டும் கொடுத்தும் வாழும் இயலுமையுடன் கூடிய கல்வி. மதத்தால், மொழியால், சமயத்தால், மற்றும் வேறும் காரணிகளால் நாம் வித்தியாசமானவர்கள் என்றாலும் மனிதர்கள் என்ற அடிப்படையில் நாம் யாவரும் சமமானவர்கள் என்ற பிரக்ஞை மாணவர்களிடம் வரவேண்டும். இத்தகைய மனப் பதிவினை இந்த நாடகப் பயிற்சிப் பட்டறை ஏற்படுத்தியுள்ளது என்றார்.
Post a Comment