கொக்கோகோலா + பெப்ஸி பானங்களில் மதுபானம் கலப்பு - ஆய்வில் அம்பலமாகியது
கொக்கோ கோலா, பெப்ஸி ஆகிய பானங்களில் சிறிய அளவில் ஆல்கஹால் கலந்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
பிரபலமான பானங்களில் ஆல்கஹாலின் அளவை கண்டறிய பாரிஸை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் நேசனல் இன்ஸ்ட்யூட் ஆஃப் கன்ஸம்ப்ஸன் நடத்திய ஆய்வுகளில் இந்த உண்மை தெரியவந்துள்ளது.
ஒரு லிட்டர் பானத்தில் 10 மில்லிகிராம் அளவில் ஆல்கஹால் அடங்கியுள்ளது. இது கிட்டத்தட்ட 0.001 சதவீதம் ஆகும். சிறிய அளவில் ஆல்கஹால் கலந்திருந்தாலும் அதிகமாக இந்த பானங்களை குடிப்பவர்களுக்கு பாதிப்பை உருவாக்கும் என்று டெய்லி மெயில் பத்திரிகை கூறுகிறது.
19 கோலா பானங்களை ஆய்வு செய்ததில் ஒன்பது பானங்கள் ஆல்கஹால் கலக்காதவை என்பது உறுதியானது. கொக்கோ கோலா, பெப்ஸி கோலா, கொக்கோ கோலா க்ளாஸிக் லைட், கோக் ஸீரோ உள்பட 10 வகையான கோலா பானங்களில் ஆல்கஹாலின் அளவு கண்டறியப்பட்டுள்ளது. சர்வதேச பானங்களான ஒவ்சான், கோரா, க்யாஸினோ, லீடர்ப்ரைஸ்மான், யூ கோலா ஆகியவற்றில் ஆல்கஹால் கலக்கவில்லை.
ஆல்கஹால் நேரடியாக பானங்களில் கலக்கப்படுவதில்லை என்றும், பானங்களின் சேர்க்கப்படும் சேர்மானங்களில் இருந்து ஆல்கஹால் உருவாகியிருக்கலாம் என்றும் மேற்கண்ட பானங்களை தயாரிக்கும் நிறுவனங்கள் கூறும் பதிலாகும்.
கோலா தயாரிக்கும் முறைதான் ஆல்கஹால் அதில் சேர்வதற்கு காரணம் என்று கோலா பிரான்சு சயிண்டிஃபிக் டைரக்டர் மைக்கேல் பெபின் கூறுகிறார். தூது
அஸ்ஸலாமு அலைக்கும், இந்த செய்தி ரொம்ப சுணக்கம் ஏன்???
ReplyDeleteOk itharkkuththaan munpu pala vakaikalil ithai verukkach chonnoom ethu eppadiyoo emathu Dr tharum marunthil kooda Alcohol ullathu vera vidayam munbu Iraq Afghanistaan thaakkuthalin pothu intha araikooval vidappaddathu ithu pillaikalin brain kku paathippu tharum Cola
ReplyDelete