பலஸ்தீனை இஸ்ரேல் ஆக்கிரமித்தது போல, தமிழர் நிலத்தை இராணுவம் ஆக்கிரமிக்கிறதாம்
தினக்குரல்
இராணுவத்தினர் முகாம்களை அமைப்பதற்கும் பிக்குமார் விகாரைகளை அமைப்பதற்கும் நிலம் இல்லாத நிலையில் தமிழர்களுடைய நிலங்கள் ஆக்கிரமிக்கப்படவில்லை. இந்த ஆக்கிரமிப்பு இலங்கை அரசின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாகவே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றதெனத் தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரமேச்சந்திரன் இதை ஒரு போதும் அனுமதிக்கப் போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
வடக்கில் இடம்பெற்று வரும் சிங்களக் குடியேற்றம் மற்றும் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்படும் நில ஆக்கிரமிப்பு ஆகியவற்றுக்கு எதிராக முறிகண்டியில் செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
இன்று தமிழர் பிரதேசங்களில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் சம்பவங்கள் பலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேலியர்கள் மேற்கொண்டிருந்த ஆக்கிரமிப்பை நினைவுபடுத்துகின்றது. அங்கு எவ்வாறு பலஸ்தீனியர்கள் துரத்தப்பட்டு அவர்களின் இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டனவோ அவ்வாறான ஆக்கிரமிப்பையே இன்று சிங்கள இராணுவமும் செய்து கொண்டிருக்கின்றது.
முல்லைத்தீவில், மன்னாரில், கிளிநொச்சியில் என தமிழரின் வாழ்விடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதுவொன்றும் இராணுவத்தினருக்கோ பௌத்தர்களுக்கோ வேறு இடமில்லாத நிலையில் மேற்கொள்ளப்படவில்லை. இது அரசாங்கத்தினால் நன்கு திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி நிரலின் கீழ் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
இதற்கு நாம் அனுமதிக்க முடியாது. வட,கிழக்கு பிரதேச தமிழ் மக்களுக்குச் சொந்தமானது தமிழர்கள் தமது மண்ணில் ஜனநாயக சூழலில் வாழ வேண்டும். இன்று இராணுவப் புலனாய்வாளர்கள் எங்கள் சமூகத்துடன் நீக்கமற நிறைந்திருக்கின்றார்கள். அதுமட்டுமல்லாமல், ஆள் கடத்தல்கள், ஆட்களை இல்லாமல் செய்தல், கழிவு ஒயில் வீசுவது, அச்சுறுத்துவது என அனைத்தையும் குத்தகைக்கு எடுத்திருக்கின்றார்கள்.
இது மாற்றப்பட வேண்டும். சுதந்திரமாக பேசவும் எழுதவும் வாழவும் தமது சுயத்தை பேணவும் சுதந்திரமான சூழல் பிறக்க வேண்டும். அதுவரையில் இந்தப் போராட்டம் தொடரும். அடக்கப்பட்ட தமிழர்கள் வாழும் இடங்களில் எல்லாம் முஸ்லிம் , மலையக மக்கள் தமிழர்கள் இணைந்து போராடுவோம். இன்று நாங்கள் முறிகண்டியில் உடைக்கவுள்ள சிதறுதேங்காய் இலங்கை அரசை சிதறடிப்பதற்காக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
அட,அட இங்கப்பாரடா!யூதர்கள் போல் முஸ்லீம்களின் சொத்துகளை பறித்துக்கொண்டு துரத்தியதை வசதிக்கு ஏற்றால் போல் மறந்து விட்டு,தற்போது தங்களை பாலஸ்தீனர்களுடன் ஒப்பிட்டு யூதர்களை சிங்களவர்களுடன் ஒப்பிடுகிறார்
ReplyDeleteமண்டையன் குழு சுரேஷ் பிரேமச்சந்திரன்.எப்பிடிடா இப்படியெல்லாம் கதைக்க தோணுகிறது.அதற்காக அரசு செய்வது சரியென்று சொல்வதற்கில்லை.இதே பலஸ்தீனர்களிடமும்,லெபனான்காரர்களிடமும் முஸ்லீம் பெயர்களை உங்களுக்கு நீங்களே சூட்டி பயிற்சி பெற்றதையும் மறந்துதானே வட,கிழக்கு முஸ்லீம்களுக்கு ஆப்பு வைத்தீர்கள்.அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்.
Meraan
ஒங்கட தல இருக்கும் போது சுதந்திரமாக மூச்சு கூட விடமுடியாமல் இருந்தீங்களே,அப்ப தலையிடம் சுதந்திரம்
ReplyDeleteகேட்டிருந்தால் தெரிந்திருக்கும் சுதந்திரத்தின் விலை என்ன என்று.இப்பவும் பாரு வட,கிழக்கு தமிழருக்குத்தான்
சொந்தம் என்கிறார்.இலங்கை முழுவதும் எல்லோரும் வாழலாம் பலாத்கார குடியேறைதான் நாங்கள் எதிர்க்கிறோம்
என்று சொல்லியிருக்கலாம் .
யாழ் ஒலி
எதை விதை தீர்களோ அதையே அறுவடை செய்வீர்கள் நேரசூசிகை போடப்பட்டு விட்டது அதன் படியே எல்லாம் நடக்கும் அது உங்களுக்கு எங்களுக்கு,,குடும்பங்களுக்கு எல்லாம் பொருந்தும் இன்றைய உலகில் இதை கண்டு கொண்டு இருக்கிறோம்
ReplyDeleteINTHE TAMIL SIELAM ?? KATHAI VEPPA MARATHTHI PEI IRUKKIRATHU ENRU PAADDI SONNA KATHAI POLATHTHAAN NAMBI YLLAANUKAL.
ReplyDeleteIVANUKAL EPPOTHU THAANKAL KOLAI SEITHA KUTTANKALAYUM SIRUVARKALAI SUICIDE BOMBARAAGA KONDATHAYUM PIRA MATHATHTHAVARKALAI SINNAPINNAPPADUTTI SITTIRAVATHAI SEYTHU KONDATHAYUM OTTUKKOLVAANUKALO ANRU THAAN IVANUKAL MUDDAAL THANATHTHILIRUNTHU VIDUPADAMUDIYUM
PIRAPAKARA CANCER MUTTAAKA SUDDU POSUKKAPADDUVIDDATHU MICHCHA MIKUTHI THUUL VISUKOTHTHUKAL IPPADITHTHAAN ULAI IDUM KANDUKKAATHEERKAL