பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்த மூத்த அமைச்சர் பிணையில் விடுதலை
பொதுச்சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தார் என்று குற்றஞ்சாட்டப்பட்ட மூத்த அமைச்சர் அதாவுட செனவிரட்ன ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் இன்று விடுவிக்கப்பட்டுள்ளார். அமைச்சர் அதாவுட செனவிரட்ன வரக்காபொல நீதிமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை சரணடைந்ததைத் தொடர்ந்து சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை தோறும் வராக்காபொல பொலிஸ் நிலையத்திற்கு அமைச்சர் சமூகமளிக்க வேண்டும் எனவும் அமைச்சருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அமைச்சரவைப் பாதுகாப்புப் பிரிவின் இரு அதிகாரிகள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் உட்பட 17 பேர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுகின்றது.
எதிர்வரும் ஜுலை மாதம் 20ஆம் திகதி விசாரணைக்காக அனைவரையும் நீதிமன்றத்திற்கு சமூகமளிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
Adade ithu enna Ilankayila? may be he is an opposition M P polum irukkalaam
ReplyDeleteஏன்னா அறிவு?
ReplyDeleteஎதிர்க்கட்சி MP யாரும் அமைச்சராக இல்லை.