Header Ads



காணி அபகரிப்புக்கு எதிரான போராட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் பல்டி அடித்ததா..?

GTN

அரசாங்கம் பலவந்தமாக மக்களின் காணிகளை அபகரித்து வருவதாக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினால் மேற்கொள்ளப்பட்டு வரும் பிரச்சாரங்களுக்கு ஆதரளிக்கவில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்துள்ளது.

காணி அபகரிப்பிற்கு எதிரான கூட்டமைப்பின் போராட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூம் இணைந்து கொண்டுள்ளதாக சில ஊடகங்களில் தகவல் வெளியாகியிருந்தது.

எனினும், இந்தத் தகவல்களில் உண்மையில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் பசீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார். இவ்வாறான முக்கிய விடயங்களில் கட்சியின் அதி உயர் பீடமே தீர்மானம் எடுக்கும் எனவும், அவ்வாறான எவ்வித தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை எனவம் அவர்சுட்டிக்காட்டியுள்ளார்.

கிழக்கு மாகாண முஸ்லிம் மக்கள் காணிப் பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாகவும்அவற்றுக்கு அரசாங்கம் காத்திரமான தீர்வுகளை வழங்கும் என எதிர்பார்ப்பதாகவும் பசீர்சேகுதாவூத் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. இவர் பதவிக்காக எதுவும் செய்வார் பல தடவை இலக்சனில் மன் கவ்வியும் பின் வலியால் பாராலுமன்ட்ரம் சென்ட்ர இவர் முச்லிம் மக்கலின் உரிமை பெருவார் என னினைபது முட்டால் தனம்

    ReplyDelete

Powered by Blogger.