முதலில் வடமாகாண சபைத் தேர்தலை நடத்துங்கள் - அரசாங்கத்திடம் ரணில் கோரிக்கை
முதலில் வடமாகாண சபைக்கான தேர்தலையே நடத்த வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற பொது எதிர்கட்சிகளின் செய்தியாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
வடக்கில் தேர்தலை நடத்துவதன் மூலமே அங்கு ஜனநாயகத்தை ஏற்படுத்த முடியம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வடக்கில் மாகாண சபைக்கான தேர்தலை நடத்த வேண்டிய நிலையில், ஏனைய மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவது, ஏற்புடையது இல்லை.
அரசாங்கம் வடக்கில் வாழும் தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து அங்கு, பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கான மாகாண சபைத் தேர்தல்களை நடத்தவேண்டும். 1987ம் ஆண்டு வடக்கு மக்களின் கோரிக்கையை ஏற்று மாகாண சபை சட்டம் கொண்டுவரப்பட்டது.
எனினும் அவர்களை கவனத்தில் கொள்ளாது, ஏனயை மாகாண சபை தேர்தல்களை நடத்துவது ஏமாற்று நடவடிக்கை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த நிலையில், விடுதலைப் புலிகள் தேர்தலை தடுத்தமையும், கூட்டமைப்பு அரசாங்கம் தேர்தலை நடத்தாமல் விடுவதும் ஒரேமாதிரியான விடயம் என்றே கருதவேண்டி இருப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.

Post a Comment