பள்ளிவாசல்கள், மத்ரஸாக்களை உடனடியாக பதிவுசெய்யுமாறு ஆலோசனை
ஏ.ஆர்.ஏ.பரீல்
முஸ்லிம் சமய கலாசார பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் இதுவரை பதிவு செய்யப்படாத முஸ்லிம் தர்ம ஸ்தாபனங்கள், பள்ளிவாசல்கள் மற்றும் மத்ரஸாக்கள் அனைத்தையும் காலம் தாழ்த்தாது பதிவு செய்துகொள்ளுமாறு சம்பந்தப்பட்டவர்களிடம் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுகுறித்து உலமா சபையின் செயலாளர் எம்.எம்.ஏ. முபாரக் மௌலவி மேலும் குறிப்பிட்டிருப்பதாவது,
நாட்டிலுள்ள பல பள்ளிவாசல்கள் பிரதேச செயலகங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு பதிவு செய்யப்பட்ட பள்ளிவாசல்களும், பதிவு செய்யப்படாத பள்ளிவாசல்களும் கட்டாயம் முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தில் பதிவுசெய்ய வேண்டும். இது எதிர்காலத்தில் பிரச்சினைகள் உருவாகாது இருப்பதற்கு உதவியாக இருக்கும் எனவும் என குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறே முஸ்லிம் சமய கலாசார திணைக்கள பணிப்பாளர் அஷ்ஷெய்க் நவவியும் இந்த வேண்டுகோளை வலியுறுத்தி கருத்து தெரிவித்துள்ளார்.
Post a Comment