உயர் கல்வியமைச்சரே வீட்டுக்கு ஓடு - ஐ.தே.க. வலியுறுத்துகிறது
இசெட் (Z) புள்ளி முறைமை தொடர்பில் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புடன் உயர் கல்வி அமைச்சர் தமது பதவியில் இருந்து விலக வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சி கோரியுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது.
புதிய மற்றும் பழைய பாடத்திட்டங்களுக்கு அமைய பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கான இசெட் புள்ளி வேறாக கணிக்கப்பட வேண்டும் என தமது கட்சி முன்னர் சுட்டிக்காட்டியிருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு அமைய உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பில், தமது கட்சி மகிழ்ச்சி அடைந்துள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த வருடத்திற்கான உயர் தர பரீட்சைகள் நடைபெறுவதற்கு இரண்டு மாதங்களே எஞ்சியுள்ள நிலையில், உயர் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ள இந்த தீர்ப்பின் பின்னர் கல்வித் துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளுக்கு அரசாங்கம் எவ்வாறான தீர்வுகளை முன் வைக்கப் போகின்றது என தமது கட்சி கோரிக்கை விடுப்பதாக ஐக்கிய தேசிய கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.

Post a Comment