Header Ads



சவூதி அரேபியாவில் புத்தரை வழிபட சுதந்திரம் இல்லை - ரஞ்சன் ராமநாயக்க எம்.பி.

gtn

அரேபியாவில் தொழில்புரிந்து வரும் இலங்கை தொழிலாளர்கள் தமது மத வழிப்பாடுகளில் ஈடுபடும் சுதந்திரம் இல்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அண்மையில் இலங்கையை சேர்ந்த தொழிலாளரி ஒருவர் புத்தர் சிலை ஒன்றை வழிப்பட்டு கொண்டிருந்த போது, அங்கு சென்ற சவூதி காவற்துறையினர், அவரை கொடூரமான முறையில் கைதுசெய்து, இடையூறு செய்துள்ளனர். சவூதியில் தொழில் புரியும் இலங்கை தொழிலாளர்கள் எதிர்நோக்கி வரும், இந்த துரதிஷ்டவசமான சம்பவம் குறித்து ராமநாயக்க தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில், இலங்கையை சேர்ந்த பிரேமநான் துங்கசிறி தன்னிடம் இருந்து புத்தர் சிலையை வழிப்பட்டுள்ளார். அப்போது அங்கு சென்ற உமுல்ஹமாம் காவற்துறையினர் அவரை கைதுசெய்துள்ளனர். இது மிகவும் பாரதூரமான நிலைமை எனவும் இது குறித்து இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள போதிலும் இதுவரை எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.  இந்த நிலையில், கைதுசெய்யப்பட்டுள்ள இலங்கையரின் உயர் எந்த நேரத்திலேனும் அழிக்கப்படக் கூடிய நிலைமை காணப்படுவதாகவும் சவூதியில் உள்ள அப்பாவி இலங்கை தொழிலாளர்கள் தமது மதத்தை அனுஷ்டிக்க முடியாத நிலைமையில் உள்ளதாகவும் ரஞ்சன் ராமநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

இஸ்லாமிய நாடான சவூதியில், ஷரியா சட்டத்தின் படி சிலை வணக்கத்தில் ஈடுபடுவது தடைசெய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

 

10 comments:

  1. முற்றிலும் உண்மை. வழிபாடு என்ன பேச கூட முடியாது. அது பிற எந்த மதமாக இருந்தாலும் சரி. அது அங்கு இருக்கும் அனைத்து மக்களுக்கும் தெரியும் . யாரும் இல்லை என்று மறுப்பு தெரிவிக்க முடியாது.

    ReplyDelete
  2. Dear All
    As a Sri Lankan ,,,just check inside the Embassy you can pray other then out side you are forbidden to perform any religious activities other them Islam ,,,this is strict rules from Saudi Government ..

    ReplyDelete
  3. This is why we said don't send those are actors, cricketers, gangstars to parliment. send knowledgeful people who know about world around...

    ReplyDelete
  4. சௌதியில் சிலை வணக்க வழிபாடுகள் தடுக்கப்பட்டுள்ளது.என்ற அடிப்படை கூட தெரியாத பாராளுமன்ற உறுப்பினர்.
    வாங்குகிற சம்பளத்திற்கு ஏதாவது கதைக்க வேண்டும் தானே.இருக்கிற பிரச்சனை போதாதென்று இவர் புதுப்
    பிரச்சனைகளை உருவாக்கி தனது வாக்கு வங்கியை பலப்படுத்த நினைக்கிறார்
    Meraan

    ReplyDelete
  5. Mr.m.p. Ranjan Ramanayaga how selected for m.p. without knowledge make sure that people know about rules and regulations of saudi arabia. and not mixed Religion like sri lanka.

    ReplyDelete
  6. இந்த ரஞ்சன் ராமநாயக்க என்னும் கூத்தாடி, நீர்கொழும்பு-கொச்சிக்கடை பல்லன்சேன என்னும் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன்.

    பாடாசாலைப் பருவத்திலேயே ஒரு பொம்பளைப் பொறுக்கியாக இருந்தவன். யாரும் இவனை அங்கு மதிப்பதில்லை.

    இவனின் நடத்தை சரியில்லாதபடியால், ஒருமுறை கத்தோலிக்க பாதிரியார் ஒருவரினால் எச்சரிக்கப்பட்டான்.

    எப்படியோ நாடாளுமன்றம் வரை சென்று, அதையும் இதையும் உளறுகிறான்.

    இலங்கையில் புத்த மதத்தினர் வெறும் 60 வீதம்.
    சவூதியைப் போல 100 வீதம் முஸ்லிம்களை மாத்திரம் கொண்ட நாடல்ல.

    உலகில் உள்ள எல்லா நாடுகளும் முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட நாடுகள் உள்பட, சிறுபான்மையாக வாழும் வேற்று மத மக்களுக்கு மத வழிபாட்டு அங்கீகாரம் அளித்துள்ளன.

    சவூதி தனியே முஸ்லிம்களைக் கொண்ட நாடு.
    வேற்று மதத்தினர் பிழைப்பிற்காக சென்றவர்கள். பிழைப்பிற்காகச் சென்றால், அந்நாட்டு சட்டதிட்டங்களுக்கு ஒழுகி, உழைத்துவிட்டு திரும்பி வருவதோடு நிறுத்திக் கொள்வது நல்லது.

    அதில்லாமல், சிலைகளை வணங்க முடியாது, பெண்கள் காரோட்ட முடியாது என்று உளறுவதனால், அங்கு ஒன்றும் நடக்கப் போவதில்லை.

    அவர்களாக விரும்பி சலுகைகளை தந்தால், ஏற்றுக் கொள்ள வேண்டியதுதான்.

    சிங்களவருக்கு மட்டுமல்ல, இலங்கை முஸ்லிம்களுக்கும் தாம் நினைத்தபடி சவூதியில் தான்தோன்றித்தனமாக அந்நாட்டு சட்டத்தை மீறி செயல்பட அனுமதியில்லை.

    சவூதி என்ன சொர்க்கபுரியா, இலங்கை முஸ்லிம்களுக்கு?

    சகோதரி ரிசானா ரபீக் அவர்களின் விடுதலைக்காக இலங்கை முஸ்லிம் சமூகம் படும் பாடு, யாவரும் தெரிந்ததுதானே!

    ReplyDelete
  7. pilaipukaha srilanka vantha muslimgal eaan inum thirumbi pogavillai

    ReplyDelete
  8. Look all those houses,shops,building,vehicles,jewellaries enjoying by non muslims in Sri Lanka. What do you think where these come from yes fom Arb and Islamic world this started since 1970`s til now. Without discrimination most ofthe jobs goes for these buddist in Sri Lanka. These Buddhist started to go to wetern countres after LTTE problems ok Lots of foreign currency of Sri Lanka per yer between $ 2 billion to $5 billions. then why dont you oppose most of your people travelling to KSA with Muslim "helmet" any way just this is your time to talk about us Have you ever seen the swort of the guy punishing in KSA the you will never talk about this OK YOU BOYCOT TO GO TO KSA AND STEP IN THE FIELD WITH YOUR BUFFELO.

    ReplyDelete
  9. இவன் இப்போ மகா கொமடியன் ஆகி விட்டான்.

    புத்தர் சிலை வணக்கம் மட்டுமல்ல, கபுறு வணக்கம், கந்தூரி, உரூஸ், பால் பார்த்தல்
    போன்றவை கூட அங்கே செய்ய முடியாது.

    தமக்கு எல்லாம் தெரியும், தாம் தான் சரியான முஸ்லிம்கள் என நம்பிக்கொண்டிருப்பவர்கள் கூட,

    அங்கே போனால் படுகிற பாட்டைப் பார்க்க வேண்டும்.


    பராத்து நோன்பு என்று இல்லாத ஒன்றை பிடித்தால், சவ்திக்காரன் கேட்கிற கேள்விக்கே பதில் சொல்ல முடியாது.

    இதில் புத்தர் சிலை எங்கே, தர்கா எங்கே...... எல்லாமே தடைதான்.

    இலங்கை, சவூதி இடையிலான தொழிலாளர் ஒப்பந்தம் என்ன கூறியுள்ளது என்பதை
    படித்துப் பார்க்கும்படி ரஞ்சன் ராமநாய்க்கு சொல்லவும்.

    4 வருடத்துக்கு முன்னர் வரை இவனே ஒரு கிறிஸ்தவன்.

    ReplyDelete
  10. இன்ஸா அல்லாஹ் கிலாபா ஆச்சிவந்தால் பெரும் பாலும் உங்களின் சிலைகள் உடைக்கப்பட சாத்தியப்பாடு கிலாபாவின் குர்ஆன் ஆளும் நேரத்தில் உங்களின் கைகலால் நீங்களே உடைப்பீர்கள் இன்ஸா அல்லாஹ்

    ReplyDelete

Powered by Blogger.