சமூர்த்தி உதவிபெறும் மாணவர்களுக்கு சிப்தொற புலமைப்பரிசில்
பரீத் ஏ. ரஹுமான்
சமுர்த்தி உதவி பெறும் குடும்பங்களைச் சேர்ந்த உயர்தரத்தில் கல்வி பயிலும் மணவர்களுக்கு இவ்வருடத்திக்கன சிப்தொற புலமைப் பரிசில் வழங்கும் திட்டம் தற்பொழுது அம்பாறை மாவட்டத்தில் வழங்கப்பட்டு வருகின்றது.
இதில் அம்பாரை மாவட்டதிலுள்ள நாவிதன்வெளி பிரதேச செயலாளர் பிரிவில் சிப்தொற புலமைப் பரிசில்; வழங்கும் நிகழ்வு நேற்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நாவிதன்வெளி பிரதேச செயலக சமுர்த்தி தலைமை முகாமையாளர் ஆர்.மதியழகன் தலமையில் நடைபெற்றது. இதில் நாவிதன்வெளி பிரதேச செயலாளர் சு.கரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
பிரதேச செயலாளர் சு.கரன், நாவிதன்வெளி பிரதேச செயலக சமூகப்பாதுகாப்பு உத்தியோகத்தர் டீ.தெய்வேந்திரன் ஆகியோர் கலந்துகொண்ட மணவர்களுக்கான கொடுப்பனவுக்கான காசேலையையும் சான்றிதழ்களையும் வழங்கிவைத்தனர்.
நாவிதன்வெளி பகுதியில் தெரிவு செய்யப்பட்ட ஏழு பாடசலைகளில் இருந்து இருபது (20) மணவர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு இரண்டு வருடத்திக்கு மாதாந்தம் ஆயிரம் (1000) ரூபாய் வீதம் கொடுப்பனவு வழங்கப்படும் என்று சமுர்த்தி தலைமை முகாமையாளர் தெரிவித்தார். இந்நிகழ்வின் போது பிரதேச செயலாளர் சு.கரனும் உரையாற்றினார.
Post a Comment