இலங்கையில் இஸ்லாமிய கிலாபத் - கலாசார மோதல்களை உருவாக்குமா..? (இறுதிப் பகுதி)
அஹ்மத் ஷா அஹ்மத் ஜம்ஷாத் (அல் அஸ்ஹரி )
படிமுறை தாவாவும் அரசியல் அணுகுமுறையும்
மக்காவில் ஸகாபாக்கள் கண்ட துண்பங்கள் துயரங்களுக்காக நபியவர்கள் ஆட்சியை கொண்டுவரவேண்டும் என்ற முடிவுக்கு வரவில்லை ,மக்களை தவ்கீதுக்கு அழைத்தார்கள் இஸ்லாமிய போதனைகளை செவிமேடுத்தோம் ,கட்டுபட்டோம் என்று தூய இஸ்லாத்தில் பூரணமாக மக்கள் நுழைந்தார்கள். அப்படியான ஈமான் கொண்டவர்களுக்கு ஆட்சி சாத்தியமானது, இஸ்லாமிய சீர்திருத்த பணியின் அடிப்படை போதனைகளை விட்டுவிட்டு இன்றைய மக்களுக்கு அரசியல் பற்றி சொள்ளபப்டும் என்றால் சீர்திருத்த பணி முடங்கி விடும் என்பதில் சந்தேகம் இல்லை. அதிகாரத்தின் மூலம் மக்களை பலவந்தமாக இஸ்லாதுக்குள் கொண்டுவருவது இஸ்லாமிய போதனை அல்ல ,தாவா பணிமூலம்தான் அவர்களுக்கு இஸ்லாம் போதிக்கபடவேண்டும் என்பதை நபிகள் ஸல் அவர்களின் சீரா எமக்கு கற்றுத்தந்த பாடங்கலாகும்.
கிலாபத் என்பது சமகால இஸ்லாமிய தாவா ஒழுங்குக்கும் ,படிமுறை தாவாவுக்கும் பொருத்தமாக அமைகின்றதா ?புதிய உலக ஒழுங்கில் கிலாபத் என்ற போதனைதான் ஏனைய முக்கியமான விடயங்களை விட முன்னிருத்தபட வேண்டுமா ?முஸ்லிம்களுக்குள் இருக்கும் மடமைகளை ஒழிப்பது ,அவர்களை சரியான இஸ்லாத்திற்கு கொண்டுவரும் பணி கிலாபத் என்ற சிந்தனையால் மலுங்கடிக்கபடுவது யதார்த்தமான உண்மை என்பதை கண்னூடாக காணவில்லையா? இஸ்லாமிய அடிப்படை போதனையான அகீதா கோட்பாடுகள் மக்களுக்கு சரியான முறையில் எத்திவைகப்பட்டு அல்லாஹ்வின் கட்டளைகளை செவிமேடுதோம் கட்டுபட்டோம் என்ற சமுதாயம் உருவாகும்போது அந்தமக்கள் இயற்கையாகவே ஆட்சியை அடைவார்கள் ,இஸ்லாத்தின் கொள்கை கோட்பாடுகளில் குலம்பிகிடக்கும் மக்களுக்குள் ஆட்சியை நிறுவ முனைவது ஐந்தாம் ஆண்டு படிக்கும் மாணவனுக்கு o/L பரீட்சைக்கு தோற்ற சொல்லுவது போன்றதாகும் .
இஸ்லாமிய அரசியல் கோட்பாட்டில் அறிஞர்களின் நிலைப்பாடுகள்
இஸ்லாமிய அரசியல் கோட்பாட்டில் அறிஞர்களின் நிலைப்பாடுகள்
இஸ்லாமிய சமுதாயம் இமாமை நியமிப்பதில் அது கடமையா,இல்லையா என்பதிலும் மூன்று நிலைப்பாடு கொண்ட உலமாக்கள் இருந்தனர்.குற்றவியல் சட்டங்களை நிறைவேற்றவும் ,அநியாக்காரனிடம் இருந்து மக்களை பாதுகாக்கவும் ஒரு கலீபவை நியமிப்பது கடமையாகும் என்ற கருத்தை கொண்ட ஒரு பிரிவினர் ,
இமாமை நியமிப்பது கடமையல்ல விரும்பத்தக்கது ,ஆகுமானது என்று மருபிரிவினரும் உள்ளனர் .
இப்போது வாசகத்தை கவனிக்கும்போது இஸ்லாமிய சமுதாயத்தில் ஒரு இமாமை தெரிவு செய்வது கடமை என்று சொல்வதை வைத்து இன்று உள்ள சமுதாயத்துக்கு ஒரு அரசியல் தலைமைத்துவம் வரவேண்டும் என்று யாராவது விளன்கினளால் காலத்தின் அவசியத்தை அறியாத ஓருவர் சொல்வது போன்றே கருப்படும் .இமாமை நியமிக்கும் சூழல் இருந்தும் இமாமை நியமித்தல் என்பதற்கும் அந்த சூழலே இல்லாத சமகால இஸ்லாமிய சமுதாயத்தில் இமாமை நியமித்தல் என்ற இமாம்களின் கருத்துக்கும் சம்மந்த முடிச்சு போடா முடியாது.
இமாமை நியமிப்பது கடமையல்ல விரும்பத்தக்கது ,ஆகுமானது என்று மருபிரிவினரும் உள்ளனர் .
இப்போது வாசகத்தை கவனிக்கும்போது இஸ்லாமிய சமுதாயத்தில் ஒரு இமாமை தெரிவு செய்வது கடமை என்று சொல்வதை வைத்து இன்று உள்ள சமுதாயத்துக்கு ஒரு அரசியல் தலைமைத்துவம் வரவேண்டும் என்று யாராவது விளன்கினளால் காலத்தின் அவசியத்தை அறியாத ஓருவர் சொல்வது போன்றே கருப்படும் .இமாமை நியமிக்கும் சூழல் இருந்தும் இமாமை நியமித்தல் என்பதற்கும் அந்த சூழலே இல்லாத சமகால இஸ்லாமிய சமுதாயத்தில் இமாமை நியமித்தல் என்ற இமாம்களின் கருத்துக்கும் சம்மந்த முடிச்சு போடா முடியாது.
இஸ்லாத்தில் அடிப்படை விடயங்கள் உசூல் اصول வகை என்றும் பிக்ஹ் விடயங்கள் ப்ரூ فروع வகை என்றும் அறிஞர்கள் வகை படுத்தி உள்ளனர் .இப்போது அகீதா மற்றும் கட்டாய கடமையான விடயங்கலும் ما علم في الدين با الضرورة போன்ற விடயங்களும் உசூல் என்ற வகையைச் சாரும் .
கிலாபாத் போன்ற விடயங்கள் அஹ்லு சுன்னா அறிஞர்களால் ( ப்ரூ) கிளை என்ற வகையிலேயே சேரும் என்று கூறி உள்ளனர் அதுதான் சரியும் கூட ,இப்படியான விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதும் அகீதா சார்ந்த உசூல் விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமையும் ஹிஸ்பு தஹ்ரீர் ,ஜமாஅதே இஸ்லாமி ,இஹ்வான் முஸ்லிமீன் போன்ற அமைப்பை சார்ந்தவர்களின் பிழையான தாவா அணுகு முறைக்கு காரணங்களாகும்.சரியான தாவா என்பது உசூளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் ,கிளை விடயங்களுக்கும் அதைவிட குறைந்த முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் அப்போதுதான் சீர்திருத்த பணியில் ஒரு சக்தி சமநிலை உருவாகும் (balance of power).
இரண்டுக்கும் சமனான அளவு முக்கியத்துவம் கொடுக்க கூடாது ,ஆனால் இரண்டு வகையிலும் தாவா செய்யப்பட வேண்டும் ,கருத்து வேறுபாடு என்பதையும் , நடுநிலைமை என்பதையும் காரணம் காட்டி சீர்திருத்த பணியை முடக்கி விடக்கூடாது ,விட்டு கொடுப்பது மாத்திரம் நடுநிலைமை என்பது நடுநிலைமை அல்ல , பலமாக சொல்வதும் , பலத்தை பிரயோகிப்பதும் நடுநிலமைதான்.
இக்திலாப் என்பது இக்திலாப் அத்தலாதுاختلاف التضاد) (, இஹ்திலாப் அத்தனவ்வு (اختلاف التنوع) என்று இரண்டாக பிரியும் , இஹ்திலாபு அத்தலாது என்ற வகையை சமரசத்துக்கு கேடயமாக பாவிக்க முடியாது ,தனவ்வு என்பதில் மாத்திரம் விட்டு கொடுப்பு இருக்கலாம் ,ஆனால் இக்திலாப் அத்தனவ்வு என்ற வகையை அத்தலாது என்ற வகையிலும் ,அத்தலாத் என்பதை அத்தனவ்வு என்ற வகையிளும் சேர்ப்பது தவறாகும் ,அத்தலாத் என்ற வகை உடன் அனுசரிப்பு இல்லை அதனை மறுத்தளிக்க வேண்டும் ,
கருத்துவேறுபாடு சம்மந்தமான சரியான புரிதலுக்கு வருவதற்கு(Good understanding) இது பற்றிய முக்கிய அறிஞர்களின் நூல்களை நடுநிலமையான வாசிப்புக்கு உட்படுத்துவது பிரயோசனமாகும்.
கருத்துவேறுபாடு சம்மந்தமான சரியான புரிதலுக்கு வருவதற்கு(Good understanding) இது பற்றிய முக்கிய அறிஞர்களின் நூல்களை நடுநிலமையான வாசிப்புக்கு உட்படுத்துவது பிரயோசனமாகும்.
அரசியல் மூலம் ஒற்றுமையா? ஒற்றுமை மூலம் அரசியலா?
கிலாபா இருக்கும்போது ஒற்றுமையும் வந்துள்ளது வேற்றுமையும் வந்துள்ளதை வரலாறு நெடுகிலும் நாம் கண்டுவந்துள்ளோம். யஸீத் அவர்களின் ஆட்சிக்கு ஆதரவு கொடுத்தவர்களும் இருந்தனர் ,மறுத்து நின்ற ஸகாபாக்களும் இருந்தனர் .
கிலாபா இருக்கும்போது ஒற்றுமையும் வந்துள்ளது வேற்றுமையும் வந்துள்ளதை வரலாறு நெடுகிலும் நாம் கண்டுவந்துள்ளோம். யஸீத் அவர்களின் ஆட்சிக்கு ஆதரவு கொடுத்தவர்களும் இருந்தனர் ,மறுத்து நின்ற ஸகாபாக்களும் இருந்தனர் .
அதுவும் யஸீத் அவர்களின் கையில் அதிகாரம் ஓங்கி இருக்க ஹுசைன் ரழி அவர்களுடன்தான் நபி ஸல் அவர்களின் குடும்பம் தனித்து நின்றது .ஆட்சி இருக்கும்போதே நாம் உயர்வாக மதிக்கும் தலைமுறையிலும் பிரிவினை இருந்ததா இல்லையா?
அப்பாசியா உமையா ஆட்சியின் தன்மையை முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப்,ஹசனுள் பண்ணா போன்ற நல்ல என்னம் கொண்டவர்கள் ஏன் எதிர்த்தனர் என்பதை சிந்தித்து பார்த்தால் கிலாபத்தின் உண்மை நிலை புரியும் .
இன்று நடக்க கூடிய பிரச்சினைகளுக்கு கிலாபத் இல்லை என்பதுதான் காரணம் என்று சொல்லி மக்களை ஒன்றுபடுத்த கிலாபத் மாத்திரம்தான் தீர்வு என்று சொல்வது மேலே நாம் சொன்ன காரணங்களால் தவறானதாகும் .
ஆனால் கிலாபத் ஒன்று ஏற்படவேண்டும் என்பதில் எமக்கு மாற்றுகருத்து இல்லை ,ஆனால் அதை எப்படியான சமூக அமைப்பில் கொண்டுவருதில்தான் நாம் முரன்படுகிறோம் .
சமூகம் சீரழிந்து ,இன்றைய நிலையில் பிரிந்துகிடப்பது சாதாரண கருத்துவேருபாட்டில் அல்ல என்பது தெளிவாக விளங்க .இன்றைய சமூகத்தில் உள்ள கருத்துவேறுபாடுகள் பிரிவினைக்கு காரணம் இல்லை என்று சொல்வது மிகவும் தவறானது .
இன்று அல் குர்ஆன் சுன்னா என்ற கயிற்றில் இருந்து மக்கள் தூரமாக தூரமாக ஒற்றுமையில் இருந்தும் தூரமகின்றனர்,எனவே மக்கள் பிரிந்துகிடப்பதட்கு காரணம் கிலாபத் இல்லை என்று ஒட்டுமொத்தமாக சொல்வது பிழையானதாகும்.
இன்றைய சமூகம் அகீதா ரீதியாக ,இஸ்லாத்தின் அடிப்படை விடயத்தின் வேறுபாடு காரணமாக் பிரிந்து உள்ளனர் , ஜாஹிலியா காலத்தில் மக்கள் ,குலம் கோத்திரமாக ,உயர் ஜாதி ,கீழ் ஜாதி என்று பிரிந்துகிடந்த நிலையில் அவர்களை கிலாபத் ஒன்று சேர்க்கவில்லை, மாறாக அவர்களை ஒன்று சேர்த்தது அல்குர்ஆன் ,சுன்னாதான் அதைத்தான் அல்லாஹ்வும் சொல்கிறான். பிரிந்துகிடந்த சமுதாயத்துக்கு ஒற்றுமை கிலாபத்தால் வரவில்லை என்பதை அல்லாஹ் அழகாக தெளிவாக சொல்கிறான்.
அல்லாஹ்வின் கயிற்றை அனை வரும் சேர்ந்து பிடித்துக் கொள்ளுங்கள்!
பிரிந்து விடாதீர்கள்!
அல்லாஹ்வின் கயிற்றை அனை வரும் சேர்ந்து பிடித்துக் கொள்ளுங்கள்!
பிரிந்து விடாதீர்கள்!
நீங்கள் பகைவர்களாக இருந்த நிலையில் அல்லாஹ் உங்களுக்குச் செய்த அருளை எண்ணிப் பாருங்கள்! அவன் உங்கள் உள்ளங்களுக்கிடையே இணைப்பை ஏற்படுத்தினான். எனவே அவனது அருளால் சகோதரர்களாகி விட்டீர்கள்! நரகத்தின் விளிம்பில் இருந்தீர்கள். அதிலிருந்து உங்களைக் காப்பாற்றினான்.
நீங்கள் நேர் வழி பெறு வதற்காக இவ்வாறே தனது சான்றுகளை அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்.
நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.
தம்மிடம் தெளிவான சான்றுகள் வந்த பின்பு முரண்பட்டுப் பிரிந்து விட்டோரைப் போல் ஆகாதீர்கள்! அவர்களுக்கே கடும் வேதனை உண்டு
(ஆளு இம்ரான் 103-105)
எனவே அகீதா,அடிப்படையில் பிரிந்து கிடக்கும் சமுதாயம் சாதாரண கருத்துவேறுபாட்டில்தான் பிரிந்து கிடக்கின்றனர் என்று சொல்வது முற்றிலும் தவறானது .
(ஆளு இம்ரான் 103-105)
எனவே அகீதா,அடிப்படையில் பிரிந்து கிடக்கும் சமுதாயம் சாதாரண கருத்துவேறுபாட்டில்தான் பிரிந்து கிடக்கின்றனர் என்று சொல்வது முற்றிலும் தவறானது .
இன்றைய சமுதாயத்தில் உள்ள கருத்துவேருபாட்டை மறந்து சமூகம் ஒற்றுமயாகிவிட்டாலும் ,ஷியாக்கள் நாம்தான் கலீபாவாக வரவேண்டு என்று சொல்வார்கள் ,சன்னிகள் நாம்தான் வரவேண்டும் என்று சொல்வார்கள் ,பின் ஏதோ ஒருவகையில் சன்னிகள் ஆட்சிக்குவந்து ஈரானில் சன்னி ஆளுனரை நியமித்த பின் அங்கிருக்கும் ஷீயாக்கள் ஆயிஷா ரழி அவர்களை விபச்சாரி என்றும் .சஹாபாக்களை காபிர் என்றும் சொன்னால் சன்னி ஆளுநர் ஒற்றுமை கருதி சும்மா இருப்பாரா?இல்லவே இல்லை அவர்களை தடைசெய்வார் உடனே ஷீயா ஆன்மீக தலைவர் சன்னி ஆளுநருக்கு எதிராக போர் தொடுப்பார் கிலாபத் ஆளுநர் நீக்கபடுவார் .
அடுத்த கட்டம் சன்னிகளில் வரும் பிரச்சினை ,பெரலவி ,சுன்னத் ஜமாஅத், வஹ்ததுள் வுஜூத் ,ஜமாத்தே இஸ்லாமி , இஹ்வான் ,விடியல் , தப்லீக் , தவ்ஹீத் இப்படி பிரிந்துகிடக்கும் சன்னிகள் தமது ஜமாஅத் சேர்ந்த ஒருவர்தான் அமீராக வரவேண்டும் என்று விரும்புவர்கள் ,ஒருவேளை ஏதோ இணக்கபாட்டுக்கு வந்துவிட்டார்கள் என்றாலும் ,ஒருவர் பார்வையில் ஒருவர் குற்றம் சாட்ட இதை மற்ற இயக்கம் கட்டுப்பட்டு செல்லுமா? அப்பவே கிலாபத் உடைந்துவிடும்.
இப்படி சண்டையை முடுக்கிவிடும்பணிதான் போலி கிலாபத் மூலமும் நடைமுறை சாத்தியம் இல்லாத கிலாபத் மூலமும் வரும் ,பின் வெட்டுக்குத்து அதிகம் இல்லாத நம் சமுதாயம் சண்டை பிடித்துகொண்டிருக்க ஷியாக்கள் ஒன்று சேர்ந்து நம்மை ஆக்கிரமித்து ஸஹாபாக்களை திட்டும் பணியை முடுக்கிவிடுவர் பின் இந்த உலகம் ஷீயா ஆட்சிக்குள் சிக்குண்டு நாம் பின்பற்றும் இஸ்லாமும் இல்லை ,நாம் மதிக்கும் ஸஹாபாக்களும் தூற்றபடும் நிலை ஏற்படும் அந்த நேரத்தில் அதிகாரத்தில் இருக்கும் ஷியாக்கள் சஹாபாக்களை காபிர் என்றும் ,ஆயிஷா ரழி அவர்களை விபச்சாரி என்று நாம் காதுகேக்க உரத்து சொல்வர் அதை கேட்ட சில இளைஞர்கள் தாங்க முடியாமல் ஷீயாக்களுக்கு எதிராக கிளர்ச்சி பண்ணுவர் அதை அடக்க வந்த ஷீயா ராணுவம் அவர்களை கொளைசெய்வர் .இதைப்பொறுக்க முயாத சில உணர்ச்சி வசப்பட்ட இளைஞர்கள் ஷியாக்கள் பள்ளியில் குண்டு வைப்பர் அதைகண்ட ஷியாக்கள் சன்னிகளின் பள்ளிகளில் குண்டு வைப்பர் இதுதான் கிலாபத் பேச்ச்சுக்களால் பாகிஸ்தான் டியூனிசியா போன்ற நாடுகளில் பள்ளிவாயல்களில் குண்டுமழை பொழியவும் லட்சக்கணக்கான மக்கள் இனப்படுகொலை செய்யப்படவும் காரணமாக அமைந்தது .
கிலாபத் போதனை பொருத்தமில்லாத இடத்திலும் .நடைமுறை சாத்தியம் இல்லாத சூழலில் பேசினால் நாம் மேலே சொன்ன ,வரலாற்றில் கண்ட கசப்பான முடிவுகளைத்தான் பெற முடியும் .
மாறாக மக்களை அல் குர்ஆன் சுன்னாவில் ஒன்று சேர்க்கும் வழியில் அழைத்தால் அல்லாஹ் வஹியை மட்டும் பின்பற்றும் மக்களுக்கு ஆட்சியை கொடுப்பதாக வாக்களித்துள்ளான் இதோ :
54- அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்!'' எனக் கூறுவீராக! அவர்கள் புறக்கணித்தால் இவர் (முஹம்மத்) மீது சுமத்தப்பட்டது இவரைச் சேரும். உங்கள் மீது சுமத்தப்பட்டது உங்களைச் சேரும். இவருக்கு நீங்கள் கட்டுப்பட்டால் நேர் வழி பெறுவீர்கள். தெளிவாக எடுத்துச் சொல்வது தவிர இத்தூதரின் மீது வேறு (கடமை) இல்லை.
55- அவர்களுக்கு முன் சென்றோ ருக்கு அதிகாரம் வழங்கியதைப் போல் அவர்களுக்கும் பூமியில் அதிகாரம் வழங்குவதாகவும், அவர்களுக்காக அவன் பொருந்திக் கொண்ட மார்க்கத்தில் அவர்களை உறுதிப்படுத்தி வைப்பதாகவும், அவர்களின் அச்சத்திற்குப் பின்னர் அச்சமின்மையை ஏற்படுத்துவதாகவும் உங்களில் நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோருக்கு அல்லாஹ் வாக்களித் துள்ளான். அவர்கள் என்னையே வணங்குவார்கள். எனக்கு எதையும் இணை கற்பிக்க மாட்டார்கள். இதன் பிறகு (ஏக இறைவனை) மறுத்தோரே குற்றம் புரிபவர்கள்.(அந்நூர் 54-55)
மேலே நாம் குறிப்பிட்ட இரண்டு ஆயத்களையும் நன்றாக வாசியுங்கள் .54 வது ஆயத் அல்லாஹ் நாம் இன்று சொல்கின்றவாறு அல் குர்ஆன் சுன்னாவில் மக்களை அழையுங்கள் என்று சொல்கிறது அப்படி வருகின்ற சமுதாயத்துக்கு அல்லாஹ் பிரதி ஈடாக 55 வது ஆயத்தில் ஆட்சியையும் ,அச்சமின்மையையும் ஏற்படுத்துவதாகவும் வாக்களித்துள்ளான்.
அல்லாஹ் எவ்வாறு எமக்கு கட்டளை இட்டுல்லானோ அதைதான் நாம் மக்களுக்கு சொல்கிறோம் அதுதான் நடைமுறை சாத்தியமுமாகும் .அல்லாஹ் மிக அறிந்தவன்
அரசியல் அநாதையாக்கப்பட்ட இலங்கை வடகிழக்கு முஸ்லிம்களின் நிலை
வடகிழக்கு மக்கள் புலிபயங்கரவாதிகளால் வெளியேற்றப்பட்ட கருப்பு ஒக்டோபரை நினைவு படுத்துமுகமாக இதை எழுதுகிறேன்
பயங்கரவாத புலிகள் செய்த அட்டூழியங்கள் முஸ்லிம்கள் வரலாற்றில் மாறாத மறுவாகும்.இது இலங்கை முஸ்லிம்களின் உள்ளங்களில் ஏற்பட்ட கருப்பு அத்தியாயமாகும் .
பயங்கரவாதிகளினால் அனாதையாக்கப்பட்ட குழந்தைகள், விதவையாக்கப்பட்ட பெண்கள் ,சூறையாடப்பட்ட செல்வங்கள் , காவுகொள்ளப்பட்ட உயிர்கள் , பாழ்படுத்தபட்டப்பட்ட அசையும் அசையா சொத்துக்கள் ,அசிங்கபடுத்தபட்ட புன்னியஸ்தளங்கள்,கடத்திசெல்லபட்ட வாலிபர்கள் இதன் பிட்பாடாய் எழுந்த , இடப்பெயர்வு , அவலம் ,கல்வி ,பொருளாதார பின்னடைவு ,
இவற்றுக்கெல்லாம் எப்போது தீர்வு ? அதுபற்றிய முஸ்லிம்களின் நிலை என்ன ? முஸ்லிம் அரசியல் வாதிகளின் அரச கொள்கை என்ன ?
வட மாகாண முஸ்லிம் மீல்குடியேற்றதுக்கான காலவரையறை என்ன?
இது சம்மந்தமாக முஸ்லிம் அரசியல் வாதிகளின் அரசியல் வியூகம் என்ன ?
அதிகபட்சம் தீர்வை நோக்கிய அரசியல் நகர்வுதான் என்ன?
வடகிழக்கு மக்கள் புலிபயங்கரவாதிகளால் வெளியேற்றப்பட்ட கருப்பு ஒக்டோபரை நினைவு படுத்துமுகமாக இதை எழுதுகிறேன்
பயங்கரவாத புலிகள் செய்த அட்டூழியங்கள் முஸ்லிம்கள் வரலாற்றில் மாறாத மறுவாகும்.இது இலங்கை முஸ்லிம்களின் உள்ளங்களில் ஏற்பட்ட கருப்பு அத்தியாயமாகும் .
பயங்கரவாதிகளினால் அனாதையாக்கப்பட்ட குழந்தைகள், விதவையாக்கப்பட்ட பெண்கள் ,சூறையாடப்பட்ட செல்வங்கள் , காவுகொள்ளப்பட்ட உயிர்கள் , பாழ்படுத்தபட்டப்பட்ட அசையும் அசையா சொத்துக்கள் ,அசிங்கபடுத்தபட்ட புன்னியஸ்தளங்கள்,கடத்திசெல்லபட்ட வாலிபர்கள் இதன் பிட்பாடாய் எழுந்த , இடப்பெயர்வு , அவலம் ,கல்வி ,பொருளாதார பின்னடைவு ,
இவற்றுக்கெல்லாம் எப்போது தீர்வு ? அதுபற்றிய முஸ்லிம்களின் நிலை என்ன ? முஸ்லிம் அரசியல் வாதிகளின் அரச கொள்கை என்ன ?
வட மாகாண முஸ்லிம் மீல்குடியேற்றதுக்கான காலவரையறை என்ன?
இது சம்மந்தமாக முஸ்லிம் அரசியல் வாதிகளின் அரசியல் வியூகம் என்ன ?
அதிகபட்சம் தீர்வை நோக்கிய அரசியல் நகர்வுதான் என்ன?
குறைந்தபட்சம் அரசியல் அறிக்கைதான் என்ன ?
சென்றகால நிகழ்வுகள் இன்றய அவலங்களாக கண்முன் காட்சி தந்துகொண்டிருக்க கருப்பு ஒக்டோபர் நினைவு கூறி விட்டு செல்லும் சடங்ககாகத்தான் இருந்து வருகிறது .
முஸ்லிம்கள் ஏதோ இலங்கையில் தற்காலிக குடியேற்றத்துக்கு வந்தவர்கள் போன்றுதான் நடத்தபடுகின்றனர்
தேர்தல் காலங்களில் மட்டும் பயன்படுத்திவிட்டு தூக்கி எரியப்படும் கருவேப்பிலையாக முஸ்லிம்கள் பயன்படுத்தபடுவது பற்றி சமூக அரசியல் ஆர்வலர்கள் காத்திரமான நடவடிக்கை எடுக்கவேண்டும்.
தற்காலிக சுகபோக லாபங்களுக்காக முஸ்லிம்களின் உரிமைகளை அடகு வைத்து நமது அரசியல் உரிமைகளை சுயலாபங்களுக்காக விலைபேசுவது சமுதாயதுக்கு செய்யும் துரோகமாகும்.
யுத்தம் ,கலவரம் விட்டுசென்ற தடயங்கள் முளுசமூகத்தை அனாதையாக்கி ,பரிதாபபடும் நிலையில் முஸ்லிம்களின் நிலை இருக்க அதை பேசுபொருளாக்க நமது அரசியல் தலைமை முன்வராமல் ஆங்காங்கே நடக்கும் சிறு சிறு நிகழ்வுகளுக்கு அதிக சத்தமும் அழுத்தமும் கொடுப்பது ஏதோ அரசியல் பின்னணி ,சுயலாபம் என்பவற்றை எடுத்துகாட்டுகிறதாகவே என்ன தோனுகிறது
அரசாங்கதுடனான ஆதரவுபோக்குக்கு நமது அரசியல் தலைமை வைத்திருக்கும் விலைதான் என்ன?மக்களுக்கு வாக்குறுதியை பகிரங்கமாக கொடுத்து ஓட்டு வங்கி மூலம் பதவிகளை எடுத்துவிட்டு அரசுடன் நடந்த பேரம்பேசுதலை அந்தரங்கமாக முடித்துகொல்வது எந்தவகையில் நியாயம்.?
இப்படியான முஸ்லிம் அரசியல் தலைமை முஸ்லிம்களின் எதிர்காலத்தை குழிதோண்டி புதைப்பதாக விளங்கவில்லையா?
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான பஷீர் சேகுதாவூத் அவர்கள் தெரிவித்த ஒரு கருத்தை இங்கு பதிவது பொருத்தமாக இருக்கும் :
முஸ்லிம் அரசியல் வாதிகளும் கட்சிகளும் ஒன்றாக இணையவில்லையானால் முஸ்லிம் சமுதாயத்திற்கான எவ்வித முன்னேற்றத்தையும் எதிர்காலத்தில் கண்டுகொள்ள முடியாமல் போய்விடும்.
சிங்கள பேரினவாதம் மாறிமாறி முஸ்லிம்களை தமது கைக்குள் போட்டுக் கொண்டு வருகிறது. சிறுசிறு இலாபங்களுக்காக முஸ்லிம் அரசியல் வாதிகள் அதற்குள் அகப்படும்போது முஸ்லிம்களின் அரசியல் நிலைமை மிகவும் மோசமாகிவிடும் என்பதை இக் கட்டத்தில் நான் பிரகடனம் செய்கிறேன். இலங்கையில் பேரம் பேசும் அரசியலை முதன் முதலில் முன்னெடுத்தது இடதுசாரிக் கட்சிகளே ஆகும்.
தொழிலாளர்களின் நன்மை கருதி அதனை அக் கட்சிகள் செய்தன. தமிழர்களின் அரசியலில் நீலன் திருச்செல்வமோஇ குமார் பொன்னம்பலமோ தமிழர் விடுதலைக் கூட்டணியோ தற்போதிருக்கும் தமிழ்க் கூட்டமைப்போ பேரம் பேசும் அரசியலை செய்தது கிடையாது. ஜே.வி.பி. யும் தொண்டமானின் அரசியல் கட்சியும் பேரம் பேசும் அரசியலை நடத்தி இருக்கின்றன. முஸ்லிம்கள் எதிர்காலத்திலும் பேரம் பேசும் அரசியலை முன்னெடுக்க வேண்டும். அது எந்த இனத்திற்கும் எதிரானது அல்ல என்பதையும் அனைத்து இன மக்களும் புரிந்து கொள்ளுதல் வேண்டும் என்றார்.
உண்மைதான் பேரம் பேசும் அரசியல் கொண்டுவரும் பணி அனைத்து முஸ்லிம் கட்சி ஆதரவாளர்களாலும் முடுக்கிவிடப்ப்படவேண்டும் ,தமது பிரதேசம் ,கிராமம் என்று சுருங்கிவிடாமல் இலங்கையின் மூத்த அறிஞர்கள் ,அரசியல் விற்பன்னர்கள் இஸ்லாமிய தாவா இயக்கங்கள் ,வர்த்தகர்கள் போன்றோர் இதில் அதிகம் கவனம் செலுத்துவது காலத்தின் தேவையாக உள்ளது.
நமது உரிமைகளை வென்றெடுக்க சிறுபான்மை என்பது ஒரு குறை அல்ல அமெரிக்காவில் மிக சிறுபான்மையாக இருக்கும் யூத அமுக்ககுளுதான் பெரும்பான்மை மக்களின் அரசியல் தலைவிதியை மாற்றி அமைக்கும் ஒரு பெரும் சக்தியாக உள்ளதை நாமும் உதாரணமாக எடுத்துக்கொள்ள முடியும்
தற்காலிகமான சேவைகளை கண்டு மகிழ்பவன் மனிதன் .சமூக அக்கறை உள்ள ,சமூகத்தின் கல்வி ,பொருளாதாரம் ,உயர்பதவிகளில் வேலைவாய்ப்பு ,போன்ற தூர சிந்தனை ,நிரந்தர லாபங்களுக்காக போராட நினைப்பவன் புனிதன் .
கற்றுக்கொண்ட பாடங்களும் சிறுபான்மை முஸ்லிம்களுக்கான அரசியல் தீர்வு யோசனைகளும்
சிருபான்மயினர்களாக வாழும் முஸ்லிம்கள் பெரும்பான்மை இனத்துடன் சகிப்பு தன்மையுடன் நடந்துகொள்ளவேண்டும் .அவர்கள் நமது புனிதஸ்தளங்களை இடித்துவிட்டதனால் முஸ்லிம்களும் பதிலுக்கு மாற்றுமத புனிதஸ்தலங்களை இடிப்பதோ,அல்லது அவர்களின் மத குருமார்களை தரகுறைவாக நடத்துவதோ நாட்டில் அமைதிக்கு பாலமாக அமையாது .
எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலும் அதை ஜனநாயக் ரீதியிலேயே தட்டிகேட்க முற்படவேண்டும் .சாத்வீக வழியிலேயே நேர் அணுகுமுறையை (Positive Attitude) பெற்றுக்கொள்ள முடியும் .உணர்ச்சிகளுக்கு அடிமையாகி வன்முறையை கையில் எடுப்பது சமூக நல்லிணக்கத்துக்கு வழிவகுக்க மாட்டாது ,மாறாக சமூகத்துக்கு மத்தியில் பிளவையும் ,கசப்புணர்வுகளயும் அது ஏற்படுத்த காரணமாகிவிடும்.
கலாசாரங்களுகிடையில் உரையாடலே(Dialogue between Civilization) இன்றய காலத்தின் தேவையாக உள்ளது அதற்கு மாறாக கலாச்சாரங்களுகிடையில் மோதலை(Clash of Civilization)உண்டுபண்ண முனைவது தீர்வுகளை எட்ட ஏதுவாக அமையபோவதில்லை .
இலங்கை மக்கள் மதம், இனம் ,மொழி என்ற அடையாளத்துக்கு அப்பாற்பட்டு ஒரே தேசம் ,ஐக்கியம் ,மத சகிப்புத்தன்மை என்ற மைய்யப்புள்ளியில் சங்கமிப்பதே ஆரோக்கியமான பல்லினசமூக வாழ்வுக்கு அடித்தளமாக அமையும்.
இலங்கையில் ஏற்பட்ட சில கருப்பு அத்தியாயங்கள் மக்கள் மனதில் மாறாத மறுவாக இருந்தபோதும் எமது இருப்புக்கும் காப்புக்கும் நிரந்தர தீர்வு யோசனை, மற்றும் முஸ்லிம்களுக்கான தனியழகு யோசனை வடக்கின் வசந்தம், கிழக்கின் மாகாண ஆட்சி கிட்டும்வரை நமது இனவாதிகளுக்கான எமது எதிர்ப்பு கோஷங்களை சாத்வீக வழியில் தொடர்வது சிந்தனையில் தன்னிறைவு கண்ட சமுதாயத்துக்கு எடுத்துகாட்டாக அமையும் .
விடுதலைப்புலிகள் மூன்று தசாப்தமாக காடுகளுக்குள் கஷ்டப்பட்டு போராடி வந்தனர் ஐக்கிய தேசிய கட்சி பொதுவாக நல்ல அரசியல் வளம் கொண்டவர்களை உள்வாங்கி இருந்த ஒரு கட்சி அந்த அடிப்படையில் விடுதலைப்புலி தலைவர்களை ஒப்பந்தம் என்ற பெயரில் காட்டுக்குள் இருந்து புதர்கள் வெட்டிகொண்டிருந்தவர்களை நாட்டுக்குள் கொண்டுவந்து ரிப்பன் வெட்டவைத்து தலைநகருக்குள்ளும், பதவிகளிலும் உள்வான்கிகொண்டனர் .அரசியல் ஆசையை வரவைத்தனர் உளவியல் மாற்றத்தை அவர்களுகளின் செல்களில் சொட்டச்செயதனர் .
இதன் விளைவாக விடுதலைப்புலிகளின் முக்கிய தலைவர்கள் விமான நிலையத்தில் குண்டு வைப்பதட்கல்ல ஜெனீவா பேச்சுவார்த்தை, வட்ட மேசை மாநாடு என்று பறந்து தெரிந்தனர் .இப்படியாக சென்றுகொண்டிருந்த ஒப்பந்தம் பிரபாகரனின் கருணாவை நோக்கி “நீ மாத்தையா போன்று மாரிவிட்டாயா? “என்ற ஒரு கேள்வியால் முறிந்தது .
இலங்கை மக்கள் மதம், இனம் ,மொழி என்ற அடையாளத்துக்கு அப்பாற்பட்டு ஒரே தேசம் ,ஐக்கியம் ,மத சகிப்புத்தன்மை என்ற மைய்யப்புள்ளியில் சங்கமிப்பதே ஆரோக்கியமான பல்லினசமூக வாழ்வுக்கு அடித்தளமாக அமையும்.
இலங்கையில் ஏற்பட்ட சில கருப்பு அத்தியாயங்கள் மக்கள் மனதில் மாறாத மறுவாக இருந்தபோதும் எமது இருப்புக்கும் காப்புக்கும் நிரந்தர தீர்வு யோசனை, மற்றும் முஸ்லிம்களுக்கான தனியழகு யோசனை வடக்கின் வசந்தம், கிழக்கின் மாகாண ஆட்சி கிட்டும்வரை நமது இனவாதிகளுக்கான எமது எதிர்ப்பு கோஷங்களை சாத்வீக வழியில் தொடர்வது சிந்தனையில் தன்னிறைவு கண்ட சமுதாயத்துக்கு எடுத்துகாட்டாக அமையும் .
விடுதலைப்புலிகள் மூன்று தசாப்தமாக காடுகளுக்குள் கஷ்டப்பட்டு போராடி வந்தனர் ஐக்கிய தேசிய கட்சி பொதுவாக நல்ல அரசியல் வளம் கொண்டவர்களை உள்வாங்கி இருந்த ஒரு கட்சி அந்த அடிப்படையில் விடுதலைப்புலி தலைவர்களை ஒப்பந்தம் என்ற பெயரில் காட்டுக்குள் இருந்து புதர்கள் வெட்டிகொண்டிருந்தவர்களை நாட்டுக்குள் கொண்டுவந்து ரிப்பன் வெட்டவைத்து தலைநகருக்குள்ளும், பதவிகளிலும் உள்வான்கிகொண்டனர் .அரசியல் ஆசையை வரவைத்தனர் உளவியல் மாற்றத்தை அவர்களுகளின் செல்களில் சொட்டச்செயதனர் .
இதன் விளைவாக விடுதலைப்புலிகளின் முக்கிய தலைவர்கள் விமான நிலையத்தில் குண்டு வைப்பதட்கல்ல ஜெனீவா பேச்சுவார்த்தை, வட்ட மேசை மாநாடு என்று பறந்து தெரிந்தனர் .இப்படியாக சென்றுகொண்டிருந்த ஒப்பந்தம் பிரபாகரனின் கருணாவை நோக்கி “நீ மாத்தையா போன்று மாரிவிட்டாயா? “என்ற ஒரு கேள்வியால் முறிந்தது .
அன்டன் பாலசிங்கம் சமஷ்டி அரசுக்கு இணங்கி கைச்சாத்திட்டது பிரபாகரனின் விருப்பத்தில் அல்ல கருணாவின் உந்துதலில் என்று தான் தப்பித்து கருணாவின் உண்மை முகத்தை காட்டி கொடுத்தார் .
காட்டுக்குள் சிப்பாய் ஆடையுடன் இருந்த கருணா நாட்டுக்குள் கோட்டும்,திறப்பு விழா ரிப்பன் வெட்டுதலும், விமானப்பயனமும் என்று சொகுசு வாழ்கை வாழ்ந்து வரும் நிலையில் சமஷ்டி அரசுதான் சாத்தியம் தனி நாடு அசாத்தியம் மட்டுமல்லாமல் நம்மை காட்டுக்குள் மீண்டும் போக வைக்கும் கோரிக்கை என்று உணர்ந்த கருணா பிரபா கரனின் தனிநாட்டு கோரிக்கைகையில் இருந்து சரிகிவிட்டார் தடம்புரண்டார் ஈட்டில் பிரபா வடக்கு- கருணா தெற்கு என்று திசை மாறியது சண்டை .
ஈட்டில் வடக்குக்கும் தெற்குக்குமான யுத்தம் வடக்குக்கும் கிழக்குமாய் திசை திரும்பியது. இலங்கையின் யுத்த வரலாற்றை சில நொடிப்பொழுதில் இந்த உட்கட்ச்சி முறுகல் மாற்றி அமைத்தது .வடக்குக்கும் தெற்குக்கும் இருந்துவந்த இரு துருவ யுத்தம் வடக்கு கிழக்கு ,தெற்கு என்று மூன்று துருவமாக இலங்கையின் யுத்த வரைபடத்தை முக்கோண யுத்த வலயமாக மாற்றி அமைத்தது .
சிறுபான்மை சமூகம் தமது அரசியல் உரிமைகளை பெற்றுகொல்வதட்கும் தமது அரசியல் அபிலாஷைகளை இலங்கை அரசியல் சாசனத்தில் உள்வாங்குவதற்கும் சாத்வீக வழியே தீர்வுகள் எட்டபடுவதட்கு சரியான வழிமுறையாகும்.நமது எதிர்ப்புகளை ஜனநாயக ரேதியாகவே வென்றெடுக்க முயற்சிக்க வேண்டும்.
இப்படியான வழிமுறைகளை விட்டுவிட்டு வன்முறை வழிமுறையை கைய்யாண்டதனாலேயே பயங்கரவாத புலிகள் குறைந்த பட்சம் சமஷ்டி அரசியல் முரயைக்கூட தமிழ் மக்களுக்கு பெற்றுகொடுக்க முடியாமல் தோழ்வி கண்டனர்.
பயங்கரவாத புலிகளின் இந்த அரசியல் அணுகுமுறையில் ஏற்பட்ட தோல்வி எமக்கு ஒரு பாடமாகவும் படிப்பினையாகவும் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை .
முஸ்லிம் அரசியல் அமுக்கக்குழு (Lobbyist) காலத்தின் தேவை
இன்று இலங்கை அரசியல் இருக்கும் சூழலில் பேரம் பேசும் வளம் குன்றி உள்ளது ,அமுக்க குழு ஒன்று உருவாகுவது என்பது இன்றைய நிலையில் தேவையாக உள்ளது ,பாராளுமன்ற பிரதிநிதித்துவம் மூலம் சாதிப்பது ஒரு சிறிய அளவு நம்பிக்கையையே பெற்றுத்தரும் . இலங்கை பாராளுமன்ற ஆட்சியில் இருந்து ஜனாதிபதியின் அதிகார பிடிக்குள் சிக்கி விட்டது.அத்துமீறிய அதிகாரம் கொடுக்கப்பட்ட ஜனாதிபதி முறை இலங்கையில் ஜனநாயக முறையையே கேள்விக்குறியாக்கி உள்ளது.
தனி பாராளுமன்ற அல்லது மருப்பானை கொண்ட ஜனாதிபதி முறை அல்லாத பாராளுமன்றம் + ஜனாதிபதி இணைந்த முறை கொண்ட அரசியல் அமைப்பு என்பதே ஜனநாயகத்துக்கு சாதகமாக அமைய வழி வகுக்கும்.
முஸ்லிம்கள் பாராளுமன்ற தேர்தல்களில் பல பிரிவுகளாக போட்டி இட்டாலும் ஜனாதிபதி தேர்தலில் ஒரே கருத்தில் இருக்க வாய்ப்பு உருவாகும் என்றால் முஸ்லிம்களே ஒரு அமுக்க குழு அல்லது அழுத்த குழுவாக இருந்து ஜனாதிபதி யார் என்பதை தீர்மானிக்கும் குழுவாக இருப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.
தனி பாராளுமன்ற அல்லது மருப்பானை கொண்ட ஜனாதிபதி முறை அல்லாத பாராளுமன்றம் + ஜனாதிபதி இணைந்த முறை கொண்ட அரசியல் அமைப்பு என்பதே ஜனநாயகத்துக்கு சாதகமாக அமைய வழி வகுக்கும்.
முஸ்லிம்கள் பாராளுமன்ற தேர்தல்களில் பல பிரிவுகளாக போட்டி இட்டாலும் ஜனாதிபதி தேர்தலில் ஒரே கருத்தில் இருக்க வாய்ப்பு உருவாகும் என்றால் முஸ்லிம்களே ஒரு அமுக்க குழு அல்லது அழுத்த குழுவாக இருந்து ஜனாதிபதி யார் என்பதை தீர்மானிக்கும் குழுவாக இருப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.
முஸ்லிம்களை பிரதிநிதித்துவம் செய்யும் அனைத்து கட்சிகளையும் ஒரே கருத்தில் கொண்டுவரும் வகிபாகத்தை செய்யும் ஒரு தரப்பு இலங்கையில் இல்லாமல் இருப்பது ஒரு குறையே . இலங்கையில் சிலரின் கிலாபத் பற்றிய பேச்சாடல்களால் கலாசார மோதல் உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது,கலாசாரங்களுக்கிடையில் உரையாடல் மிகவும் குறைவாகவே உள்ளது மாற்றுமத சகோதரர்களுக்கு இஸ்லாத்தின் மிதவாத போக்குபற்றிய போதனைகள் சென்றடையவில்லை இலங்கையில் இப்படியான தாவா முறைமைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை .அதற்கான வளங்களை தாயிக்கள் பெற்றுகொல்வதில் தன்னிறைவு காணவில்லை என்பதே கசப்பான உண்மை.
தொடர் முடிந்தது
பகுதி - 1 http://www.jaffnamuslim.com/2012/06/2-8-69000.html
பகுதி - 2 http://www.jaffnamuslim.com/2012/06/2.html
பகுதி - 1 http://www.jaffnamuslim.com/2012/06/2-8-69000.html
பகுதி - 2 http://www.jaffnamuslim.com/2012/06/2.html
Clean your back yard....
ReplyDeleteYou don't point fingers others...
You r free share your thoughts... its made in + / -; It is natural.
I accept it.
When a person try to preach , pointing out others... to cover their wrongs to justify or call it 'cover up'; He is not a good daaiii;
So, brother, think same way, what if others try to share , their thoughts, why your ppl 'so-called' T(D)J's cannot bear even for minute;
So, dear author, preach to own ppl, basic etiquette of islam; before preaching on 'Kilafa'; Your followers' brain & mind in back,
Let awaken them first;
As you preach, there should be one strong foundation and then to build the house, all under one roof; Then why you ppl, put 'so many foundations' & build separate houses 'AMONG YOURSLEF', so, try to unify your ppl, day by day, so-called TJ daii's , divided themself & fight each other,, why, why, if you preach correct 'Thouheed' ideology, why your sheikh's fight each other every day. So, something wrong in your back yard brother; if not , you guys will be 'jokers' all the time;
INAPPROPRIATE TITLE, no wisdom;
ReplyDeleteIMATURED BODY, lack of knowlege in all aspects;
INFINITIVE END, lost the direction of 'Seerah' on the light Quran.
Muslimkal ore kuraiin keel kuran Hadeesai pinpatra kudiyavarkalaha uruvakka vendum
ReplyDeletedubai
fazil
For the first anonymous
ReplyDeleteTry to improve your English, I didn't understand what you have got to say.
Try to use proper language and then comment online. People wont understand your points clearly when you use broken language.
For my understanding you have understood the article in Tamil, so better you type what you intended to say in Tamil once again.
Good Luck brother / sister
Salam, 2nd anonymous,
ReplyDeleteYou said the word "Seerah". didn't you.
You sounds like Jamathe Islami follower.
It is obvious that Jamathe Islami will never enjoy reading the article as it is not in their own favour.
By the way, I know that Jamathe Islami uses the word "sheerah" to make it's followers think something else as they cannot any more use the words Qur'an and Hadees, since they are clearly out the way of Qur'an and Hadees.
They cannot answer from Qur'an and hadees for their actions and activities, so now they try to hide behind the word "Sheerah"
My question is clear, tell me my brother/sister, whether the Sheerah Jamathe Islami mentions is from Qur'an and Hadees?
PPL Mislead by the 'word' to 'word', word of expressions'
ReplyDeletethese english pundits, can not understand the 'objectives' too, rather, looking for 'syntax errors' because, they are driven by 'pessimistic' psycho (means psychopathic, lunatic)all the time, this is the case for them, when approach 'BEAUTIFUL Islam. Instantly, jump to issue 'fatwas', & blame others , mostly, the cases of 'out of context'; they have the 'art' of extracting context 'which is out of context' from other materials, then they use this is to 'mislead' ppl.
We don't care, Tablliqh,Jamamathe islam, Tauheed jamath, etc...
If anybody, claiming their best 'followers' of Quran & Sunnah; that's really appreciated,
If anybody, claiming their the only one ''followers' of Quran & Sunnah; others in the path of 'hell' fire. This is 'Judgment' of Almighty Allah. One takes the 'judgment' of Allah to his hand and issue 'Fatwas', then this is Clear 'violation' of Tauheed; (note; anybody in shirkh, their out of aqeedha,their end will lead to hell fire);
Enna kilafaththum kattarikaayum try to read an obe quraan and pray 5 times give zakath walk on ground as normal dont be arrogant and thawakkal ala Allah if you could live a Halaal life
ReplyDeleteதலைப்புக்கும் கட்டுரைக்கும் சம்பந்தமே இல்லை. முஸ்லீம்கள் சிறுபான்மையினராக வாழும் இலங்கை போன்ற நாடுகளில் இவ்வாறான கட்டுரைகள் பிரசுரிக்கப்படுவதை தவிர்ந்து கொள்வது பொருத்தம் என்று நினைக்கின்றோம். காலத்திட்கியைந்த ஆக்கங்களை வெளியிடுமாறு ஜப்னா இணையதள நிர்வாகத்திடம் தயவாக வேண்டிக்கொள்கிறோன்.
ReplyDeleteWhere are my comments?
ReplyDeleteWhat the hell Jaffna muslim does?