Header Ads



லெப்.கேணல் முத்தலிப்பை படுகொலைசெய்த இராணுவ அதிகாரி கைது..?

இலங்கை இராணுவப் புலனாய்வு அதிகாரியான லெப்.கேணல் முத்தலிப்பை, சக இராணுவ அதிகாரி ஒருவரே புலிகளிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு கொலை செய்துள்ளார் என்று தெரியவந்துள்ளது.

வன்னியில் கண்டுபிடிக்கப்பட்ட புலிகளின் இரகசிய ஆவணம் ஒன்றையடுத்து இந்தக் கொலையில் தொடர்புடைய சந்தேகநபரான இராணுவ அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2005ம் ஆண்டு மே மாதம் கொத்தலாவல பாதுகாப்புக் கல்லூரிக்குச் சென்று கொண்டிருந்த போது கிருலப்பனையில் வைத்து லெப்.கேணல் முத்தலிப் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

வன்னியிலும் கிழக்கிலும் விடுதலைப் புலிகளின் மீது இலங்கை இராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணிகளால் நடத்தப்பட்ட கிளைமோர் தாக்குதல்களுக்கு இவர் பொறுப்பாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால், லெப்.கேணல் முத்தலிப் மீதான தாக்குதலை விடுதலைப் புலிகளே நடத்தியதாக இலங்கை அரசாங்கம் குற்றம்சாட்டியிருந்தது.

இந்தநிலையில், வன்னியின் கிழக்குப் பகுதியில் மீட்கப்பட்ட விடுதலைப் புலிகளின் இரகசியப் புலனாய்வு ஆவணங்களில் ஒன்றில், லெப்.கேணல் முத்தலிப்பை படுகொலை செய்வதற்கு இலங்கை இராணுவ அதிகாரி ஒருவருக்கு புலிகள் 1.5 மில்லியன் ரூபாவை வழங்கியது தெரியவந்துள்ளது.

இதன் அடிப்படையிலேயே அந்த இராணுவ அதிகாரி கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்

4 comments:

  1. பிச்சைக்கார நாய்கள்,துரோகிகள்
    வெறும் 15 லட்சம் ரூபாவிற்கு பெறுமதியான உயிரை படுகொலை செய்துள்ளார்கள்.

    துரோகத்தின் விலை இவ்வளவுதான்.

    ReplyDelete
  2. தாயின் சேலையின் முடிச்சில் கட்டியிருந்த மஞ்சள் துண்டுக்காக கொலை செய்த கூட்டத்தை சேர்ந்தவன்
    தானே வாழ்க்கையில் 15 லட்சத்தை கண்டிருப்பானா?
    30 வருடங்கள் போராட்டம் இழுபட்டதட்கு காரணமே காட்டி,கூட்டி கொடுப்புதான் என்று எல்லோருக்கும் தெரியும்.உயர் மட்ட அதிகாரிகளை சரியான முறையில் விசாரித்தால் பற்பல உண்மைகள் வெளி வரும்.
    Meraan

    ReplyDelete
  3. தேசத்துரோகி, அவனை தூக்கில் போட வேண்டும்

    ReplyDelete
  4. It is new episode, new story telling... episode....

    ReplyDelete

Powered by Blogger.