பரிசோதனைக் குழாய் குழந்தை..! (டாக்டர் ரயீஸின் டயறியிலிருந்து..)
ஒருவர் என்னிடம் இப்படிக் கேட்டார். "ஒரு சிசுவின் வளர்ச்சி முதல் ஆறு மாத காலங்களுக்கும் கருப்பை தவிர்ந்த வேறு இடங்களில் சாத்தியமில்லை. மருத்துவம் எவ்வளவுதான் முன்னேற்றம் கண்டபோதும் கருப்பையைப் போன்ற ஒரு அமைப்பை எப்படியும் ஏற்படுத்த முடியாது என்றெல்லாம் நீங்கள் சொல்கிறீர்கள். ஆனால் பரிசோதனைக் குழாய்களில் குழந்தை வளர்ந்து. பரிசோதனைக் குழாய்க் குழந்தைகள், (Test Tube Babies) என்ற பெயரில் இப்போது குழந்தை பிறந்து வாழ்ந்து கொண்டிருப்பதாக ஊடகங்கள் மூலம் அறிந்து கொள்கிறோம். இது எப்படிச் சாத்தியமாகிறது? நீங்கள் சொல்வதற்கும் ஊடகங்களின் தகவல்களுக்கும் இடையில் முரண்பாடு உள்ளதே!
அவரின் சந்தேகம் நியாயமானது. இதே சந்தேகம் வேறு சிலருக்கும் ஏற்பட்டிருக்கக் கூடும்.
பரிசோதனைக் குழாயோடு ஒப்பிடுவதற்கு கருப்பை ஒன்றும் சாதாரண மனித படைப்பல்ல. அது இறைவனின் அற்புதப் படைப்பு. கருப்பை செய்யும் தொழிலை பரிசோதனைக் குழாயினால் செய்ய முடியாது என்பது எக்காலத்திற்கும் பொருத்தமான ஒரு கூற்று.
அப்படியானால் பரிசோதனைக் குழாயில் என்ன நடக்கிறது? என்று நீங்கள் கேட்பீர்கள்.
பெண்ணில் வயிற்றில் உருவாகும் முட்டை கருக்கட்டப்பட்ட உடனேயே கருப்பைக்குள் சென்று விடுவதில்லை. கருப்பையுடன் இரு புறமும் இணைந்திருக்கும் பலோப்பியன் குழாய் (Fallopian Tube) என்ற குழாயில் தான் கருக்கட்டல் நடக்கிறது. அப்படிக் கருக்கட்டப்பட்ட முட்டை "நுகமா'க மாறி கலங்கள் பிரியத் தொடங்கும். இந்த நுகம் மெதுவாக பலோப்பியன் குழாயைச் சுற்றிச் சுற்றி வந்து 56 நாட்களில் கருப்பையை வந்தடையும். அதன் பின்னர் தான் கருப்பை அந்த நுகத்தை வளர்த்தெடுக்கும் பொறுப்பை ஏற்றுக் கொள்ளும். எனவே சிசு வளர்ச்சியில் முதல் ஆறு நாட்களும் கருப்பையினுள் நிகழ்வதில்லை. அந்தப் பலோப்பியன் குழாயில்தான் சிசுவின் வாழ்க்கை ஆரம்பிக்கிறது. எல்லா மனிதனின் வாழ்க்கையிலும் முதல் 56 நாட்களும் கழிவதெல்லாம் இந்தப் பலோப்பியன் குழாயில்தான். ஆறு நாட்களில் அந்தக் கருக்கட்டப்பட்ட நுகம் கருப்பையை அடையாவிட்டால் ...?
நுகத்தை வரவேற்க கருப்பை தன்னைத் தயார் செய்து கொண்டு காத்திருக்க அந்த நுகம் பலோப்பியன்குழாயில் நின்று விட்டால் அது அந்தப் பெண்ணுக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும். கலங்கள் பிரிந்து நுகம் வளரும் போது அந்த வளர்ச்சியைத் தாக்குப் பிடிக்க முடியாமல் பலோப்பியன் குழாய் வெடித்து விடும். இதனை டியுபல் பிரக்னென்சி (Tubal Pragnancy) என்று சொல்கிறோம். இந்தப் பெண்ணுக்கு உயிராபத்தை ஏற்படுத்தும் சந்தர்ப்பமாகும்.
பலோப்பியன் குழாயில் ஏற்படும் சில நோய்கள் மற்றும் காரணிகளால் சிலவேளை பலோப்பியன் குழாயில் கருக்கட்ட முடியாத நிலை ஏற்படும். இந்த நிலையில் பலோப்பியன் குழாயில் நடைபெறும் கருக்கட்டலை உடலுக்கு வெளியே பரிசோதனைக்குழாயில் நடத்த முடியும். இதனைத் தான் இன்வீட்டோ பேர்டிலைஷேசன் (Invitro Fertilazation) அதாவது பரிசோதனைக் குழாய் குழந்தை கருக்கட்டல் என அழைப்பர். இப்படி பரிசோதனைக் குழாயில்கருக்கப்பட்ட நுகத்தை 56 நாட்களுக்கு மட்டுமே பரிசோதனைக்குழாயில் வைத்திருக்க முடியும். அதன் பின் அந்த நுகத்தால் பரிசோதனைக் குழாயுள் வளர முடியாது. அந்த நிலையில் குழாயிலிருக்கும் நுகத்தை எடுத்து பெண்ணின் கருப்பையில் மெதுவாக வைத்து விடுவார்கள். 7ஆவது நாளிலிருந்து குழந்தை பிறக்கும்வரை 273 நாட்களும் அப்படிக் கருக்கட்டப்பட்ட நுகம் வளர்வதெல்லாம் இயற்கையான பெண்ணின் கருப்பையில் தான்.
எனவே Test Tube Babyயும் கூட முதல் 6 நாட்கள் மட்டுமே பலோப்பியல் குழாய்க்குப் பதிலாக பரிசோதனைக்குழாய் வாழ்க்கை வாழ்கிறது. மற்ற 273 நாட்களும் இறைவன் படைத்த அந்த அற்புதமான கருப்பையில்தான். எனவே Test Tube Baby என்று சொல்லும்போது Test Tubeஇல் (பரிசோதனைக் குழாயில்) முழுமையாக வளர்ந்து வந்த குழந்தை என்ற எண்ணமே பலருக்குத் தோன்றுகிறது.
ஆனால் உண்மையில் Test Tubeஇன் பங்களிப்பு கருக்கட்டலுக்கு உதவுவது மட்டுமே வளர்வது எல்லாம் கருப்பையில்தான்..!!
Very good but our commentators only busy with Kilafa Ruling and Muslim Brotherhood Dr. paawam ippadiyaana oru article published by non Muslim or American or European then you will receive more reaction
ReplyDelete