Header Ads



கலைக்கப்பட்ட மாகாண சபைகளுக்கான தேர்தல் குறித்து இன்று முக்கிய கூட்டம்

கிழக்கு உள்ளிட்ட மூன்று மாகாண சபைகள்  நள்ளிரவு முதல் கலைக்கப்படவுள்ள நிலையில் அதற்கான தேர்தலை நடத்தும் பொருட்டு மாவட்டத் தேர்தல் உதவி ஆணையாளர்களுடன் இன்று வியாழக்கிழமை  சந்திப்பு ஒன்றை தேர்தல் ஆணையாளர் நிகழ்த்தவுள்ளார்.

இன்று நள்ளிரவு முதல் கிழக்கு, சப்பிரகமுவ மற்றும் வடமத்திய மாகாண சபை ஆகிய மூன்றும் கலைக்கப்பட்டு வர்த்தமானி அறிக்கை வெளியிடப்படடுள்ளது.

இதனடிப்படையில், இம் மூன்று மாகாணத்திற்கும் தேர்தல் இடம்பெறவுள்ளது. இந்நிலையில் தேர்தல் நடத்துவது குறித்து ஆராய தேர்தல் ஆணயாளர் மஹிந்த தேசப்பிரிய மாவட்டத் தேர்தல் ஆணையாளர்களுடன் சந்திப்பு ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக தேர்தல் செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்தச் சந்திப்பின்போது, தேர்தல் கடமைகள் குறித்து விவாதிக்கப்படுவதுடன், வாக்களர் இடாப்பு மீள்திருத்தம் மற்றும் வாக்காளர் பதிவு என்பன குறித்தும் கலந்தாலோசிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், 2011ம் ஆண்டின் வாக்காளர் பட்டியலை இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்து வாக்காளர்கள் பார்வையிடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்தும் கலந்துரையாடப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது. நாட்டில் அரசுக்கு எதிராக ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை அடுத்து தனது செல்வாக்கை கணிக்கும் நோக்கில் அரசாங்கம் குறித்த சபைகளை  முன்கூட்டியே கலைத்து தேர்தலை நடத்தவுள்ளது.

No comments

Powered by Blogger.