Header Ads



போதைப்பொருள் மற்றும் சட்ட விரோத கடத்தல் ஒழிப்பு தினம்

போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஜூன் 26ம் தேதி போதைப்பொருள் மற்றும் சட்ட விரோத கடத்தல் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.

போதைப்பொருள், அதை பயன்படுத்துபவரை மட்டும் பாதிப்பதில்லை. அவரது குடும்பம், சமுதாயத்தையும் பாதிக்கிறது. அனைத்து வகையான நோய்களுக்கும் முன்னோடியாக இருப்பது போதைப்பொருள் தான். சிலர் இதற்கு அடிமையாக மாறியிருப்பது கவலைக்குரியது.

மூன்றாவது இடம்:உலக வர்த்தகத்தில் பெட்ரோல், ராணுவ தளவாடங்களுக்கு அடுத்து, மூன்றாவது இடத்தில் போதைப்பொருள் வியாபாரம் உள்ளது. ஓர் ஆண்டிற்கு 500 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு போதைப்பொருள் வியாபாரம் நடக்கிறது.

இது போதைப்பொருள் பயன்பாடு எந்தளவுக்கு இருக்கிறது என்பதை காட்டுகிறது. போதைப் பொருள் பயன்படுத்துதல், கடத்துதல், விற்பனை செய்தல் ஆகியவற்றை ஒழிக்க, சட்டங்கள் மூலம் உலக நாடுகள் முயற்சிகள் எடுக்கின்றன. ஆனாலும் இதன் பயன்பாடு அதிகரிக்கிறதே தவிர குறையவில்லை. தினமும் போதைப்பொருள் கடத்தல் சம்பவங்கள் உலகில் ஆங்காங்கே நடக்கின்றன. புதிய தொழில் நுட்பங்களை பயன்படுத்தி போதைப் பொருட்களை கடத்துகின்றனர்.

பலவிதம்:ஹெராயின், அபின் , கஞ்சா, புகையிலை, மது , ஊக்க மருந்து, ஒயிட்னர், கொக்கைன், தின்னர், பீடி, சிகரட், வலி நிவாரணிகள், மயக்க, தூக்க மருந்துகள் உள்ளிட்ட பல வகையான போதைப்பொருட்கள் உலகில் விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு இளைஞர்கள்ள், மாணவர்களும் அடிமையாவது வருத்தமான விஷயம். இம்மாதிரியானவர்களுக்கு சரியான விழிப்புணர்வு வழங்கி அப்பழக்கத்தில் இருந்து விடுவிக்க வேண்டும். விற்பனை செய்வதை தடை செய்ய வேண்டும். விற்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


 

No comments

Powered by Blogger.