Header Ads



திறந்த பல்கலைக்கழகத்தின் அனைத்து இறுதிப் பரீட்சைகளும் காலவரையறையின்றி ஒத்திவைப்பு

இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் அனைத்து இறுதிப் பரீட்சைகளும் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளன. தவிர்க்க முடியாத காரணத்தினால் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாக இலங்கை திறந்த பல்கலைக்கழகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் ஜூன் மாதம் ஆறாம் திகதியிலிருந்து நடைபெறவிருந்த அனைத்துப் பரீட்சைகளும் மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளன.

இதேவேளை கல்விசாரா ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக திறந்த பல்கலைக்கழகத்தின் அனைத்து நிகழ்ச்சிகளும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த பல்கலைக்கழகம் விடுத்துள்ள மற்றுமொறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

No comments

Powered by Blogger.