Header Ads



எகிப்தின் துணை ஜனாதிபதியாக கிறிஸ்தவ பெண்ணை நியமிக்க திட்டம்..?

எகிப்து ஜனாதிபதியாக தேர்வான முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் மொஹமட் முர்சி தனது துணை ஜனாதிபதிகளாக பெண் ஒருவரையும் கிறிஸ்தவர் ஒருவரையும் நியமிக்க திட்டமிட்டுள்ளார்.

மொஹமட் முர்சியின் கொள்கை ஆலோசகரான அஹமட் டைப், சி.என்.என். தொலைக்காட்சிக்கு இந்த தகவலை தெரிவித்தார். “எகிப்து வரலாற்றில் முதல் முறையாக பெண் ஒருவர் துணை ஜனாதிபதி பதவியை ஏற்கவுள்ளார். இது வெறுமனே துணை ஜனாதிபதியாக மட்டுமல்லாது அவர் அதிகாரம் மிக்கவராகவும் ஜனாதிபதியின் தவறுகளை விமர்சிக்கக் கூடியவராகவும் இருப்பார்” என்று அஹமட் டைப் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் மொஹமட் முர்சியின் அமைச்சரவையில் பிரதமர் பதவியை ஏற்பதற்கு நோபல் விருது வென்ற ஐ.நா. அணு கண்காணிப்பகத்தின் முன்னாள் தலைவர் மொஹமட் அல் பரதி பல நிபந்தனைகளை விதித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இது தொடர்பில் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் உயர் மட்டக் குழுவொன்று அல் பரதியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியபோதே இந்த நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

இதன் போது பிரதமரின் பொறுப்புகள் குறித்து வரையறுக்கப்பட வேண்டும் என்றும் தமக்கு பெயரளவில் பிரதமராக இருக்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் புதிய அமைச்சரவையில் பெரும்பாளானோர் துறைசார் நிபுணர்களாக இருக்க வேண்டும் என்றும் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்புக்கு இரண்டு ஆசனங்களுக்கு மேல் வழங்கக் கூடாது என்றும் அதுவே சலபிகளுக்கு ஒரு ஆசனமே வழங்கப்பட வேண்டும் என்றும் நிபந்தனை விதித்துள்ளார்.

இதில் அமைச்சரவையின் துறைசார் நிபுணர்கள் அரசியல் கட்சி சார்பானவர்களாக இருக்க கூடாது என்றும் அல் பரதி நிபந்தனை விதித்துள்ளார்.

8 comments:

  1. வாழ்க முஸ்லிம் சகோதரத்துவம்,
    வாழ்க சகோதரத்துவம்.
    வாழ்க கிறிஸ்தவ சகோதரத்துவம்.
    வாழ்க கிறிஸ்தவ சகோதரித்துவம்.

    ReplyDelete
  2. இஸ்லாம், பெண்(எந்த மதத்தவராக இருந்த போதும்) ஒருவரின் ஆளுமையை விரும்பாத போது,எப்படி இந்த முடிவை எடுக்க முடியும்.எல்லா மதத்தவர்களையும் அரவணைத்து,அனுசரித்து,நீதியான ஆட்சி செய்வோரை அல்லாஹ் விரும்புகிறான்.எல்லாவற்றையும் அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே.
    Meraan

    ReplyDelete
  3. Actully Mursi is a Rubber stamp. Egypt is ruling military likewise Turkey,Pakistan...ect.
    Egyptian Army wash it stomach by yearly PICHCHAI so called military aid.
    That military is command by America. Now Tantawi had already asked Mursi to rule under supervision or army and this is kind of Blackmailing and forcing to do this. The Ighwaanul Muslmeen has won theelection by poor working class and real Islamist votes but Mursi also took this power under dillema kind of Muslim Brotherhood must catch the Governement but America and Egypt Army has a long time Marriage connection. This government will be soon accused by everyone of fundementalism,Support terrorism,support Iran,Discrimination against Christians and women please wait and see.....

    ReplyDelete
  4. இஸ்லாமிய ஆட்சி மலர்ந்து விட்டது,
    கிலாபத் உதயமாகி விட்டது என்று
    Comment பண்ணிய கருத்துக் கந்தசாமிகளை
    நினைத்தால் தான் பாவமாக இருக்கின்றது.

    ReplyDelete
  5. Most of these commentators (Meeran & Com..), already in 'BANKRUPT' state; no body to bailout; They are store is sad one ,like 'A blind & Elephant'; these street gossipers surviving with 'silly comments'.

    ReplyDelete
  6. அர்த்தமற்ற கமெண்ட்ஸ் பண்ணுவதைவிட சில விசயங்களை உணர்ந்து கொள்வோம் . அதனால் தெளிவு பெறலாம்.
    உலகத்தை ஆழ முடியும் அல்லாஹ்வின் சட்டமே , அல்குரானே . முதலாளித்துவ சிந்தனையோ , கமியுனிசமோ, ஆங்கில குற்றவியல் சட்டமோ, பிரெஞ்சு புரட்சியில் மலர்ந்த ஜனநாயக கோட்பாடோ அல்லது வேறு எந்த மனித சிந்தனையோ அல்ல சகோதரர்களே. அல்குரானே ஆழ முடியும்.
    படைத்தவனுக்கே உரிமை உண்டு . இவுலகத்தை எப்படி ஆழ முடியும் என்று கூற. அப்படியாயின் நாம் என்ன செய்கிறோம். மனிதனால் உருவான கோட்பாடுகளுக்கு தலை வணங்குகிறோம். எமது அரசியல் அமைப்பு குரான் சொன்னது போலா இருக்கிறது? எமது குற்றவியல் சட்டம் அல்லாஹ்வின் வழிகாட்டலா?? பொருளாதாரம் இறைவனின் வழிகாட்டலா? எமது ஏனைய எல்லா செயல்களும் அல்லாஹ கூறிய வாரா நடக்கிறது ?

    அப்படி இல்லை யாயின் நாம் அல்லாஹ்வின் வார்த்தைகளை புறக்கணித்தவர் போல் ஆக மாட்டோமா? அது எவ்வளுளவு பாரதூரமான விடயம் என்பதை நம்மால் உணரக்கூட முடியாதா ? அவ்விதமாயின் இதை நடைமுரப்படுதுவது நம்மீது கடமை இல்லையா? அல்லாஹ்வின் சட்டத்தை அனைத்துக்கும் மேலாக உயர்த்தி வைக்க நாம் என்னே செய்திருக்கிறோம்? செய்யும் சகோதரர்களுக்கு வெற்றியை கொடு என்று துவா வாவது செய்து இருக்கிறோமா? அல்லது இது நம்மீது கடமை இல்லையா? அதைப்பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ள வேண்டிய தேவை நமக்கு இல்லையா?

    ReplyDelete
  7. we can understand who has gone bankrupt by reading their stupid comments.

    ஓடுற கள்ளன் ''கள்ளன் கள்ளன்'' என்று கத்திக் கொண்டு ஓடினானாம் என்று சொல்வார்கள்.

    ReplyDelete
  8. ஈரானின் Atomic bomb ஐ விட எகிப்தில் இக்வான்கள் ஆட்சிக்கு வருவது ஆபத்தானது என்று இஸ்ரேல் பிரதமர் கூறியிருக்குன்றார். இங்கு இஸ்லாமிய ஆட்சியைப்பற்றி comment செய்துள்ள அப்பாவிக்கு எகிப்தின் அரசியல் கலத்தையோ சமூக அமைப்பையோ பற்றி போதிய அறிவில்லை என்பதை நிரூபித்துள்ளார். 48 %மானவர்கள் இஸ்லாம் ஆட்சிக்கு வருவதை விரும்பவில்லை. ஆச்சரியம் என்னவென்றால் இவர்களில் சிறு தொகையினறே கிரிஸ்தவர்கள். ஏனைய அனைவரும் பெயர்தாங்கி முஸ்லிம்கள். இங்கு இஸ்லாமிய ஆட்சியை அதை ஆசை வைப்பவர்களை விமர்சிப்பவர்களைப் போல.

    ReplyDelete

Powered by Blogger.