துருக்கி விமானத்தை சுட்டுவீழ்த்தியது சிரியா - விமானிகள் கடலில் குதித்தனர்
துருக்கிய யுத்த விமானமொன்றை சிரியா சுட்வீழ்த்தியாக அறிவிக்கப்பட்டுள்ளது. எவ்-4 ரக யுத்த விமானமொன்றை சுட்டுவீழ்த்தியமக்காக சிரியா மன்னிப்பு கோரியுள்ளது என துருக்கியின் பிரதமர் தாயீப் எர்டோகன் இன்று கூறினார்.
இவ்விமானத்தின் விமானிகள் இருவரும் உயிருடன் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 'எமது விமானப்படையும் கடற்படையும் மத்திய தரைக்கடல் பகுதியில் தேடுதல் நடத்துகின்றன. அதிஷ்டவசமாக எமது விமானிகள் உயிருடன் உள்ளனர். நாம் விமானமொன்றை மாத்திரமே இழந்துள்ளோம்' என பிரேஸிலில் இருந்து திருப்பியபின் தலைநகர் அங்காராவில் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் அவர் தெரிவித்தார்.
முத்திய தரைக்கடல் பகுதியில் சிரியாவுக்கு அருகில் வைத்து தனது விமானமொன்றை ராடர் திரையிலிருந்து மறைந்ததாக துருக்கி முன்னர் அறிவித்திருந்தது.
எனினும் இவ்விமானத்தை சிரிய படையினர் சுட்டுவீழ்த்தியதாக லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்புக்கு சொந்தமான தொலைக்காட்சியான அல் மனார், சிரிய பாதுகாப்பு அதிகாரிகளை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டிருந்தது. இதேவேளை இவ்விடயம் தொடர்பாக ஆராய்வதற்கு துருக்கிய அரசாங்கம் அவசர பாதுகாப்பு மாநாடொன்றை நடத்துகிறது.
..............................................................
சிரியாவின் யுத்த விமானமொன்றை ஜோர்டானில் இன்று வியாழக்கிழமை தரையிறக்கிய அவ்விமானத்தின் விமானி ஜோர்டானில் அரசியல் புகலிடம் கோரியுள்ளார்.
விமானப்படை கேணல் ஒருவர் செலுத்திய மிக் 21 ரக விமானம், பயிற்சியின்போது காணாமல் போனதாக சிரிய அரச தொலைக்காட்சி முன்னர் தெரிவித்தது.
எனினும் அவ்விமானம் ஜோர்டானின் மவ்ரக் நகரிலுள்ள மன்னர் ஹுஸைன் விமானப்படைத் தளத்தில் தரையிறங்கியதாகவும் அவ்விமானிக்கு அரசியல் புகலிடம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் ஜோர்டான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கேணல் ஹசன் மிரேய் அல் ஹமாடாஹ்வுக்கு அரசியல் புலிகடம் அளிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது என ஜோர்டான் தகவல்துறை அமைச்சர் சமிஹ் அல் மயாட்டாஹ் கூறினார்.
இந்நிலையில் மேற்படி விமானி ஒரு துரோகி என சிரிய அரசாங்கம் கூறியுள்ளதுடன் ஜோர்டானில் இறக்கப்பட்ட விமானம் தன்னிடம் ஒப்படைக்கப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளது.
Post a Comment