Header Ads



யாழ்ப்பாணம் சின்னப் பள்ளிவாசலின் அறிவிப்பு



யாழ்ப்பாணத்துக்கு பல்வேறு தேவைகளின் நிமித்தம் செல்லும் முஸ்லிம்கள்  தங்குவதற்கு இடமின்றி பல சிரமங்களை எதிர் கொள்கின்றனர். சிலர் பள்ளிவாசல்கள் அற்ற பிரதேசங்களில் தங்குவதனால் அவர்களுக்கு ஜமாஅத் தொழுகையும் கிடைப்பதில்லை. மேலும் அறை வாடகையாக பெருந்தொகையை செலுத்த வேண்டிய நிர்ப்பந்தமும் அவர்களுக்கு ஏற்படுகின்றது.

இதனால் வசதி குறைந்தவர்கள் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்வதை தவிர்த்து வருகின்றனர். இது மீள்குடியேற்ற முயற்சிகளிலும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றது. சகல நிலை வசதிகளிலுமுள்ளோர் யாழ்ப்பாணத்துக்கு செல்லுவதன் ஊடாகவே மீள்குடியேற்றத்தை ஊக்குவிக்கலாம் என்பது சில கல்விமான்களின் கருத்தாகும்.

இதனால் குறைந்த கட்டணத்தில் அறைகளை வாடகைக்கு விட அண்மையில் சின்னப்பள்ளி நிர்வாக சபை தீர்மானித்துள்ளது. இதன் பிரகாரம் நாளொன்றுக்கான தங்குமிட வாடகை நாளொன்றுக்கு ஒரு நபருக்கு 250 ரூபா அறவிட தீர்மானிக்கப்பட்டுள்ளது. இரண்டு அல்லது மூன்று பேர் சேர்ந்து ஒரு அறையை நாளாந்த வாடகைக்கு எடுத்தால் அவர்களுக்கு கழிவு வழங்கப்படும். 

தற்போது யாழ்ப்பாணத்தில் நாளொன்றுக்கான வாடகையாக 1000 முதல் 2000 ரூபா வரையில் அறவிடப்படுகிறது. ஆனால் சின்னப்பள்ளிவாசல் அறைகள் குறைந்த கட்டணத்துக்கே வழங்கப்படுகின்றன. மேலும் நிரந்தரமாக மாதாந்த அடிப்படையில் எடுப்பவர்களுக்கு அறைகளின் அளவுக்கேற்ப 3500ரூபா முதல் 5000 ரூபாய் வரையான  வாடகைக்கு அறைகளை பெற்றுக் கொள்ள முடியும்.
அறைகளில் தங்குவோருக்குத் தேவையான மலசல கூடங்களும் குளியலறைகளும் தாராளமாக உள்ளன. அத்துடன் காற்றோட்டமான இடத்தில் இயற்கை எளில்களுடன் காணப்படும் பிரதேசத்தில் அறைகள் அமைந்துள்ளன.

மேலும் பள்ளிவாசல் வளவுக்குள் வாகன தரிப்பிட வசதியும் கட்டண அடிப்படையில் உள்ளது. அறைகளில் தங்குவோருக்கு வாகன தரிப்பிடம் இலவசமாக வழங்கப்படுகிறது.

அறைகளை வாடகைக்கு பெற விரும்புவோர் எஸ்.ஏ.சி. நிலாம்தீன் (0779293632) அல்லது எம்.எஸ்ஜினூஸ் (0773851353) ஆகியோரை  தொலைபேசி மூலமாகவோ அல்லது யாழ் சின்னப்பள்ளிக்கு நேரடியாக விஜயம் செய்வதன் மூலமோ தொடர்பு கொள்ள முடியும்.

எம்.எஸ்.ஜினூஸ்
நிர்வாக சபைத் தலைவர்- யாழ் சின்னப்பள்ளிவாசல்   

2 comments:

  1. sabry (Kattankudy )26/06/2012, 15:58

    இங்கு குடும்பத்துடன் வருபவர்கள் தங்கமுடியுமா ??? என்பதை அறியத்தரவும்

    ReplyDelete
  2. குர் ஆன் சுன்னாஹ் அடிப்படையில் நடைபெற்ற தொழுகைகளை தடை செய்து விட்டு, ரூம் இருக்கின்றது
    என்று விளம்பரம் போடுவதால் என்ன பயன்?

    பள்ளிவாசல்கள் நபிவழியில் இருக்க வேண்டுமே தவிர, ரூம் கொடுப்பதில் பெயரெடுப்பவையாக இருக்கக் கூடாது.

    ReplyDelete

Powered by Blogger.