Header Ads



சாரதிகளுக்கு நித்திரை - அதிகரிக்கும் வாகன விபத்துக்களுக்கு காரணம்

சாரதிகளின் நித்திரை கலக்கத்தினால் ஏற்படும் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஒரு வாரங்களில் மாத்திரம், சாரதிகளின் நித்திரை கலக்கத்தால் நாட்டில் பல பாகங்களில் அதிகளவான விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். இது தொடர்பில் சகல வாகன சாரதிகளும் அதிக அக்கரை செலுத்த வேண்டும் எனவும் காவல்துறை ஊடக பேச்சாளர்  தெரிவித்தார்.

இந்த வாரத்தில் இடம்பெற்ற பல விபத்துகளுக்கு காரணம் நித்திரையில் வாகனம் செலுத்தியமையே ஆகும். பொலன்னறுவை பகுதியில் லொரி ஒன்றின் பின்னால் சென்ற கார் சாரதி ஒருவர் லொரியில் மோதியதில் அவருடைய எட்டு வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்தான். டுபாயில் இருந்து வந்த அவர் கொழும்பில் வாடகைக்கு காரொன்றை வாடகைக்கு அமர்த்தி தொடர்ந்து வாகனத்தை செலுத்தியமையாலேயே இந்த விபத்து நேர்ந்தது.

அது போல்  நேற்று பதுளை பண்டாரவளை பகுதியல் பௌசர் ஒன்று விபத்துக்குள்ளானது. இதுவும் நித்திரையில் வாகனம் செலுத்தியமையே ஆகும். அதுபோல் வெல்லவாய காவல்துறை பிரிவில் வாகனம் ஒன்று மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் மதகுரு ஒருவர் பலியானார். மற்றுமொருவர் காயமடைந்தார். இந்த விபத்துக்கள் அனைத்தும் நித்திரையில் வானகம் செலுத்தியமையே ஆகும். இதனை அறிந்து கொண்டு நித்திரையில் வாகனம் செலுத்துவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

 

No comments

Powered by Blogger.