Header Ads



அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் உதவும்வரை எமது போராட்டம் தொடரும் - தலிபான்

ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான்களை அமெரிக்க ராணுவம் வேட்டையாடி வருகிறது. இதற்கு பாகிஸ்தான் பல்வேறு வகைகளில் அமெரிக்காவுக்கு உதவிகள் செய்து வருகிறது.

இதனால் பாகிஸ்தான் மீது தலிபான்கள் கடுமையான கோபத்தில் உள்ளனர். அமெரிக்காவுக்கு உதவி செய்யாதீர்கள் என்று பாகிஸ்தான் அரசை தலிபான்கள் வற்புறுத்தி வருகிறார்கள். ஆனால் சர்வதேச அழுத்தம் காரணமாக அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் தொடர்ந்து உதவி செய்து வருகிறது.

இதனால் கோபம் அடைந்துள்ள தலிபான்கள் பாகிஸ்தானில் நாசவேலை செய்து வருகிறார்கள். இந்த நிலையில் பாகிஸ்தானின் வடமேற்கு மாவட்டமான திர் மாவட்டத்துக்குள் தலிபான்கள் ஊடுருவினார்கள். அங்குள்ள ஒரு சோதனைச் சாவடியை தாக்கினர்கள். அந்த சோதனை சாவடியில் பாதுகாப்புக்கு இருந்த பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 18 பேரை தலிபான்கள் கடத்தி சென்றனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த கடத்தல் சம்பவம் நடந்தது. பாகிஸ்தான் வீரர்களை மிரட்டி விட்டு விடுவித்து விடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 18 பாகிஸ்தான் வீரர்களையும் தலிபான்கள்  தலையை துண்டித்து கொலை செய்திருப்பது தெரிய வந்துள்ளது.

18 ராணுவ வீரர்களும் தலை துண்டிக்கப்படும்  வீடியோ காட்சிகளை நேற்று தலிபான்கள் வெளியிட்டனர். தலிபான் இயக்கத்தில் உள்ள தெரீக்-ஈ-தலிபான் என்ற பிரிவு இந்த தலை துண்டிப்புக்கு பொறுப்பு ஏற்றுள்ளது.

தலிபான்கள் வெளியிட்ட அந்த வீடியோ தொடக்கத்தில் பாகிஸ்தானில் உள்ள தலிபான் இயக்கத் தலைவர் ஹகிமுல்லா மசூத் பேசுகிறார். அவர் பேசுகையில், கடவுள் எங்களுக்கு இந்த வெற்றியை கொடுத்துள்ளார். பாகிஸ்தான் அரசு, அமெரிக்காவுக்கு உதவி செய்வதை நிறுத்தும் வரை இத்தகைய போர் தொடரும் என்று கூறியுள்ளார். தலிபான்களின் இந்த மிரட்டல் பாகிஸ்தான் தலைவர்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. 

1 comment:

  1. தலிபான் . பாக்கிஸ்தான் . அல்கைத பற்றிய இந்த தலத்தில் அடிகடி பார்கிறேன். எல்லாமே நல்லதுக்கே. இதை இங்கு உள்ளை சிலதுகள் புரிந்தால் சரி தான்.
    (இலங்கையில் தற்போது நடக்கும் விடையங்களை வைத்து பார்க்கும்போது)

    ReplyDelete

Powered by Blogger.