மூதூரில் அமைச்சர் றிசாத் பதியுதீன்
மூதூர் பிரதேச சபை உறுப்பினர் அஷஷய்ஹ் ஜஸ்ரி (நளீமி) அழைப்பின் பெயரில் கைத்தொழில் மற்றம் வணிக அமைச்சர் றிஷட் பதியுதீன் அவர்கள் மூதூர்ப் பகுதியில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளிலும் கலந்து கொண்டார். மூதூர் மத்திய கல்லூரியின் பிரதி அதிபர் எஸ்.ஏ.நஸீர் தலைமையில் நடைபெற்ற அபிவிருத்தி சம்மந்தமான கலந்துரையாடலிலும் அமைச்சர் கலந்து கொண்டார்.
அத்துடன் இக்கல்லூரிக்க கணினியொன்றையும் வழங்கிவைத்தார். இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர், நாடாளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாரூக் ,மூதூர் பிரதேச சபை உறுப்பினர் அஷஷய்ஹ் ஜஸ்ரி (நளீமி), பாடசாலை குழு பலரும் கலந்து சிறப்பித்தனர். மேலும் மூதூர் ஆசிரியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் கேட்டறிந்து கொண்டனர்.
Post a Comment