Header Ads



புனிதபூமி மக்களைப் பிரிக்க முற்படுமானால் அது கண்டனத்துக்குரியது

நாட்டில் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டிருக்கிறது மிக்க மகிழ்ச்சி. அதேவேளை மக்கள் மத்தியில் இன்னும் நியாயமான சந்தேகங்கள் நிலவுகின்றன. அவைகளுக்கும் தீர்வு காணப்பட வேண்டும்.

இவ்வாறு கல்முனை சுபத்ராராமய விகாராதிபதியும் அம்பாறை மாவட்ட சர்வசமய சம்மேளனத்தின் இணைத்தலைவருமான வண. ரண்முத்துக்கல சங்கரத்ன தேரர் அனர்த்த முன்னெச்சரிக்கை பற்றிய கருத்தாடலில் கருத்துரைக்கையில் குறிப்பிட்டார். அனர்த்த முன்னெச்சரிக்கை பற்றிய கருத்தாடல் கல்முனை முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணி பணிமனையில் இணைப்பாளர் எம்.எஸ். ஜெலீல் தலைமையில் நடைபெற்றது.

பிரதான கருத்தாடல் முகவராக டயகோணியர் நிறுவனத்தின் நிகழ்ச்சித்திட்ட உத்தியோகத்தர் ஷிராணி நாராயணா கலந்து கொண்டார்.சர்வசமய சம்மேளனப் பிரதிநிதிகளும் மத்தியஸ்தசபை மற்றும் விழிப்புக்குழுப் பிரதிநிதிகளும் இங்கு கருத்துரைத்தனர்.

அங்கு தேரர் மேலும் கூறுகையில், இலங்கை அனைத்து இனங்களுக்கும் சொந்தமான நாடு எந்த ஓர் இனத்துக்கோ, சமயத்துக்கோ மட்டும் உரித்தான நாடல்ல. இலங்கையில் பிறந்த அனைவரும் இலங்கையில் எங்கும் வாழலாம் உரிமையுண்டு. என்னைப் பொறுத்தவரையில் கல்முனையில் தமிழ், முஸ்லிம் மக்களுடனேயே நான் வாழ்ந்து வருகிறேன். ஒருவித பிரச்சினையும் இல்லை எமது சர்வசமய சம்மேளனம் அளப்பரிய சேவையாற்றியுள்ளது.

இலங்கையில் இரு பிரதேச செயலாளர் பிரிவுகள் ஒரு பிரிவில் இருப்பது கல்முனையில் மட்டுமே இது வியப்பானதாகும். ஜனாதிபதியிடமும் இது பற்றிப் பேசியிருக்கிறேன்.இவ்விரு பிரதேச செயலகப் பிரிவுகளும் இனரீதியாகப் பிரியாமல் ஒன்றாக ஓரிடத்தில் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பது எனது கருத்தாகவுள்ளது.
அது போல இரு பெரும் ஆதார வைத்தியசாலைகள் பிரிந்து இருப்பதால் நிபுணர்கள் நியமிப்பது தொடக்கம் வளங்கள் பகிர்வது வரை சிக்கல்கள் எதிர்நோக்கப்படுகின்றன. எனவே இரு வைத்தியசாலைகளுக்கும் சேர்ந்து போதனா வைத்தியசாலையாக இயங்க வேண்டும். அம்பாறை மாவட்டத்தில் சர்வசமய சம்மேளனம் தோற்றம் பெற்ற பிறகு குறிப்பிடத்தக்க இன வன்முறையோ குழப்பமோ ஏற்படவில்லை. அதற்குக் காரணங்களுண்டு.

இச்சம்மேளனத்திடம் பிரதேச செயலகம் சார்ந்த முன்னெச்சரிக்கைகள் குழுக்கள் உள்ளன. அவர்கள் தாமாக முன்வந்து தொண்டரடிப்படையில் இயங்கி வருகின்றனர் அவர்களை மேலும் வலுவூட்டுவது பொருத்தமாகும். மன்னாரில் மதகுருவுக்கும் மந்திரிக்கும் ஏற்பட்ட பிரச்சினை ஒரு இடத்திலம் வரக்கூடாது அதனை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும்.

கிழக்கு மாகாணம் உள்ளிட்ட 3 மாகாணங்கள் கலைக்கப்பட்டுள்ளன. தேர்தலுக்கு அதிகபணம் தேவை. மக்களுடைய வரிப்பணமே இங்கு அடிக்கடி செலவாகிறது. இன்னும் ஒருவருடமுள்ளது. அதனிடையே கலைத்து தேர்தல் நடத்துவது நிதி விரயமே. கிழக்கில் யுத்தம் முடிந்தாலும் திருமலை போகும் வழியில் இன்றும் அகதிமுகாம்கள் காணப்படுகின்றன. அவர்களது வாழும் உரிமை மறுக்கப்பட்டுள்ளது.

புனிதபூமி
சர்வசமய சம்மேளனப் பணிப்பாளர் டாக்டர் ஏ.எல். பாறுக் கருத்துரைக்கையில், முழு இலங்கையிலும் மொத்தம் 10 ஆதார வைத்தியசாலைகள் உள்ளன. அவற்றில் 4 வைத்தியசாலைகள் ( மத்திய அரசின் கீழ்) அம்பாறை மாவட்டத்தில் உள்ளன. ஏனைய 6 உம் ஏனைய 24 மாவட்டங்களில் உள்ளன. வளங்கள் பகிர்வதில் பிரச்சினை இதற்கெல்லாம் அரசியலே அடிப்படைக் காரணமென்று கூறலாம்.

புனிதபூமி என்று கதிர்காமம், சிவனொளிபாத மலை எனப் பல இடங்கள் உண்டு. யாரும் வரலாம், வணங்கலாம் போகலாம். ஆனால் அதே புனிதபூமி மக்களைப் பிரிக்க முற்படுமானால் அது கவலைக்கும் கண்டனத்துக்கும் உரியது என்றார்.
 

1 comment:

  1. Why terer stil talking about politic. Also he cannot make acomment about 2 D S office in Kalmunai and his speech saying that because of Amapara Sinhalese ruling the peace in the Eastern Province. One other thing he forgot big Jack fruit about Digavapi and Saudi Tsunami houses expanding sinhalese connection up to Oluvil Harber.
    These all happened CANCER LTTE enemy act and terrorism in the country

    ReplyDelete

Powered by Blogger.