Header Ads



ஒபாமா அரசு பாரிய மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளது - முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி

அமெரிக்காவில் ஒபாமா அரசு பெருமளவில் மனித உரிமை மீறல்களை நடத்துவதாக முன்னாள் அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்டர் குற்றம் சாட்டியுள்ளார்.

சர்வதேச மனித உரிமை பிரகடனத்தின் ஏராளமான பிரிவுகளை காற்றில் பறத்திக்கொண்டு அமெரிக்கா, பாக்-ஆப்கான் பகுதிகளில் ட்ரோன்(ஆளில்லா விமானங்கள்) விமானம் உபயோகித்து தாக்குதல் நடத்துவதாக ஜிம்மி கார்டர் நியூயார்க் டைம்ஸில் எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

2009-ஆம் ஆண்டிற்கு பிறகு நடந்த 265 ட்ரோன் தாக்குதல்களில் இதுவரை 1488 பேர் மரணித்துள்ளனர். இதில் பெரும்பாலோர் சாதாரண மக்கள் என்று கார்டர் கூறியுள்ளார்.

குவாண்டனாமோ சிறையை இழுத்து மூடாத அமெரிக்காவின் கொள்கையை கார்டர் தனது கட்டுரையில் கண்டித்துள்ளார்.

குவாண்டனாமோவில் அடைக்கப்பட்டுள்ளவர்கள் கொடூரமாக சித்திரவதைச் செய்யப்படுவதாக அவர் தெரிவிக்கிறார்.

எலக்ட்ரானிக் தகவல் தொடர்பு சாதனங்கள் மூலம் தகவல்களை ரகசியமாக ஒட்டுக்கேட்டு அமெரிக்க அரசு தனிநபர்களின் அந்தரங்க உரிமைகளை பறிப்பதில் கார்டர் தனது கடும் கண்டனத்தை பதிவுச் செய்துள்ளார்.

1 comment:

  1. ஜிம்மிக்கு தெரியாத தான் ஆட்சி செய்யும்போதும் இதுதானே நடந்தது என்று.எத்தனை ஆட்சி மாறினானுளும் அவர்களின் வெளி நாட்டுக் கொள்கையில் உலக நாடுகளை அதுவும் குறிப்பாக முஸ்லீம்களையும்,அரபு நாடுகளையும்
    அடிமையாக வைத்திருப்பதில் எந்த மாற்றமும் இருக்காது.எல்லோருக்கும் தெரிந்த விடயம் இப்போதுதான் இவருக்கு தெரிகிறது போலும்.ஆடு நனைகிறது என்று ஓநாய்களும்,குள்ள நரிகளும் சேர்ந்து ஊளையிடுகின்றன.
    ஆண்மைத்தனமில்லாத அரபு,இஸ்லாமிய,முஸ்லீம் ஆட்சி தலைவர்கள் இருக்கு மட்டும் இது போன்ற உயிர் பலிகள்
    நடந்து கொண்டுதான் இருக்கும்.
    யா அல்லாஹ்! எங்களுக்கு உன்னில் மட்டும் தவக்கல் வைத்திருக்கும் அமீரையோ,ஹலிபாவையோ அடையாளம்
    காட்டுவாயாக.
    Meraan

    ReplyDelete

Powered by Blogger.