Header Ads



தூக்கத்தில் கதைப்பவர்களுக்கு...!

இர்ஷாத் ஷர்கீ

وَمِنْ آيَاتِهِ مَنَامُكُمْ بِاللَّيْلِ وَالنَّهَارِ وَابْتِغَاؤُكُمْ مِنْ فَضْلِهِ إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِقَوْمٍ يَسْمَعُونَ

இரவிலும் பகலிலும் நீங்கள் நித்திரை செய்து இளைப்பாறிக்கொள்வதும், பூமியின் பல பாகங்களுக்குச்சென்று அவனின் பேரருளைத்தேடிக்கொள்வதும் அவனின் அத்தாட்சிகளில் உள்ளதாகும். 30.23

பகல் முழுக்க பட்ட கஷ்டங்களை மறப்பதற்காக ராத்திரியில் துயில் செய்து கதிரவன் கண் விழிக்கும் நேரத்தில் நாமும் மனம் நிறைவான நிம்மதியோடு கண் விழித்தால்..!

 விடுதியில் உல்ல நண்பர்கள், தோழிகள்  “அடே, அடி நீ இப்படி கதைத்தாய், இப்படி சொன்னாய்,இப்படி கத்தினாய்,உன்னால் ஒரே கஷ்டம் ராத்திரியில் தூங்கவே முடியல்ல” என்று செல்லி நம் உயிரை வாங்கி விடுவார்கள், மற்ற நண்பர்களிடத்தில் விற்று நம் மானத்தையே கப்பல் ஏற்றி விடுவார்கள்.

மனைவி நக்கலான நகைச்சுவையோடு “என்னங்க இரவு என்னவோ நீண்ட நேரமாக தனிமையில் கதைதுக்கொண்டும், ஏசிக்கொண்டும் இருந்தீங்க.உங்க ஆபிஸ் பிரச்சினையை ஆபிஸில வச்சிட்டு தூக்கதுக்கு வாங்க”. இப்படி சொல்லும் போதல்லாம் நாம் எத்தனை முறைதான்  “உங்களுக்கென்ன சுகம் இல்லயா,  ராத்திரியில் பேசும் பழக்கம் எனக்கு இல்லை உங்களுக்குத்தான் இருக்கின்றது” எனச்சொல்லி சமாலிப்பது. இப்படி சொல்லி சமாலித்தாலும் சலைக்காத விட்டுக்கொடுக்காத நம் நண்பர்கள், தோழிகள்  தொலைபேசியில் பதிவு செய்து நம் முன் காட்டும் போது செய்வதறியாது வாயடைத்து போய் நிற்பதுமுன்டு.நான் சொல்வது உண்மை தானே?

இப்படியான பிரச்சினை உள்ளவர்கள் இனிமேல் உங்களுக்கு கவலை வேண்டாம்.அக்கொடுமையை உங்களை விட்டும் விரட்டியடிக்க இதோ சில டிப்ஸ்கள்

01.உங்கள் மனதில் உள்ள சந்தோஷமான விடயமோ அல்லது துக்கமான விடயமோ அதனை மறைத்து மனதை கஷ்டப்படுத்திக்கொண்டிருக்காமல் உங்களுக்கு மிகவும் அன்புக்குறியவரிடத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்.

02.தொடர்ச்சியான உடற்பயிற்சியினை மேற்கொள்ளுங்கள்.

03.உடலில் இருந்து வெளியேரிய சக்தியினை மீள் பெறுவற்கு விட்டமின்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்ளுங்கள்.

04.மன, உடல் கஷ்டத்தோடு தூங்குவதற்கு முயற்சி செய்யாதீர்கள்.

05.உங்களின் மனநிலை ஆரோக்கியமான, கவலைகளற்ற நிலையில்  தூக்கத்திற்கு செல்லுங்கள்.

06.தூங்க செல்லும் நேரத்தில் டீ,தேணீர்,மற்றும் குடிபானங்களை தவிர்ந்து கொள்ளுங்கள்.

07.உணவு ஜீரனம் அடைய முன் தூக்கத்திற்கு செல்லாதீர்கள்.

இவைகளை கடைபிடித்துப்பாருங்கள் உங்களின் கஷ்டம் அதற்கு தெரியாமலே ஓடிப்போய்விடும்.
உசாத்துனை:- அஷ்ஷுரூக்
   

No comments

Powered by Blogger.