Header Ads



முஸ்லிம்களிடம் தீவிரவாத ஜிஹாத் குழு, இஸ்லாமியர்களிடம் இயக்க பிரிவுகள் - அமைச்சர் குரே

TM

கியாஸ் ஷாபி

 விரைவில் நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபை தேர்தலில் அரசாங்கத்தை தோற்கடிப்பதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன என சிறு கைத்தொழில் ஏற்றுமதி ஊக்குவிப்பு அமைச்சர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார்.

 'இதன் ஒரு அங்கமாகவே முஸ்லிம்கள் மத்தியில் அரசாங்கத்தைப் பற்றிய தவறான அபிப்பிராயங்களைத் தோற்றுவிக்கின்றனர். இதன் மூலம் அரசாங்கத்துக்குக்கு எதிராக முஸ்லிம்களை திசை திருப்பி முயற்சிக்கின்றனர்.

 இதன் மூலம் அடுத்த மாகாண சபை தேர்தலில் அரசாங்கத்தை தோற்கடிப்பதற்கு சில தீய சக்திகள் மேற்கொண்டு வருகின்றனர்' எனவும் அவர் குறிப்பிட்டார்.

 திருகோணமலை மாவட்டத்திற்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த அமைச்சர் ரெஜினோல்ட் குரே கிண்ணியா பிரதேச சபையில் இடம்பெற்ற ஊடகவியவியலாளர் மாநாட்டிலும் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்வாறு கூறினார்.

அத்துடன், 'மூதூர் - 64ஆம் கட்டை பிரதேசம் தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களத்துக்கு உரிய பகுதியாகும். குறித்த பகுதியில் எந்தவொரு மதத்தினரும் வழிபாட்டுத் தளங்களை அமைப்பதற்கு அரசாங்கம் அனுமதியளிக்காது' என அமைச்சர் தெரிவித்தார்.

 இதன்போது, திருகோணமலை மாவட்ட முஸ்லிம்கள் தற்போது எதிர்நோக்கியுள்ள பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக அமைச்சரிடம் கேள்விகள் எழுப்பப்பட்டன. அதற்கு அவர் வழங்கிய பதில்கள்,

 கேள்வி: முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள் தம்புள்ள, மாத்தறை, காலி, களுத்துறை என்று தொடர்கதையாகவே செல்கின்றன. இதற்கு அரசாங்கத்தால் உரிய தீர்வினைக் காண முடியாதா?

 பதில்: இஸ்லாமியர்களுக்குள்ளும் சாதுலியா என்றும் தரிக்கா என்றும் தவ்ஹீத் என்றும் பல்வேறு பிரிவினர் உண்டு தானே. இதனை உங்களினால் தடுக்க முடியவில்லையே.

 கேள்வி : இலங்கை பலஸ்தீன நட்புறவு சங்கத்தின் தலைவராக இருந்தவர் ஜனாதிபதியாகவுள்ளார். இஸ்ரேலுடனான உறவை அரசாங்கம் வலுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றது. இந்த சந்தர்ப்பத்தில் இங்கு முஸ்லிம்கள் தற்போது எதிர்நோக்கி வருகின்ற பிரச்சினைகளுக்கு இஸ்ரேலின் சூழ்ச்சியே காரணமா?

 பதில்: அரபுலகின் உயர்ந்த தலைவராகக் கொள்ளப்பட்ட சதாம் ஹுசைன் கொல்லப்பட்டார். கேணல் கடாபி கொல்லப்பட்டார். அமெரிக்கா இந்த அநியாயத்தை செய்த போது முஸ்லிம் உலகம் கைகட்டி பார்த்து கொண்டிருக்கவில்லையா? ஏன் அப்போது அவர்கள் உணர்ச்சிவசப்படவில்லை?

 கேள்வி: இந்த நாட்டில் தற்போது பௌத்த மத தீவிரவாதபோக்கு மேலோங்குவதற்கு ஹெல உறுமயவே காரணமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அப்படியானால் அரசாங்கத்தால்  அவர்களைக் கட்டுப்படுத்த முடியாதா?

 பதில்: இஸ்லாமியர்களுக்குள்ளும் தீவிரவாத போக்குடைய ஜிஹாத் அமைப்பு இருக்கிறதே. அவற்றை கட்டுப்படுத்த முடியவில்லையே.

 கேள்வி: இரண்டு முஸ்லிம் கிராமங்களுக்கும் இரண்டு தமிழ் கிராமங்களுக்கு மத்தியில் மூதூர் 64ஆம் கட்டை பிரதேசத்தில் பௌத்த சிலை வைக்கப்பட்டு பௌத்த மத குரு ஒருவரும் நியமிக்கப்பட்டிருக்கிறார் என்று பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர். இது உண்மையா?

 இதற்கு பதிலளித்த ஜனாதிபதியின் இணைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான நஜீப் அப்துல் மஜீத், 'பௌத்த மத குரு நியமிக்கப்படவில்லை. அவருக்கு அங்கு எந்த வேலையுமில்லை. குறித்த இடத்தில் எந்த சந்தர்ப்பத்திலும் புத்தர் சிலை வைப்பதை அனுமதிக்கமாட்டேன்' என்றார்.

9 comments:

  1. கேட்ட கேள்விகளுக்கு குரே குரைக்காத குறையாககவே பதில் சொல்லியிருக்கிறார் போலும்....... இவரைச் சொல்லிக்குற்றமில்லை.... எம்சமூகத்தின் தலைமைகள் விட்ட விடும் தவறு......... இறைவன்தான் எம்மைக் காப்பாற்ற வேண்டும்.

    ReplyDelete
  2. this is actual situation among the Muslim community as well as other community
    first think about our community to gather in one thought..............

    ReplyDelete
  3. நாம் என் மற்றவர்களிடமிருந்து வேறு படுகின்றோம்?

    ஏனெனில் நாம் முஸ்லிம்கள். எல்லோருக்கும் நண்பனாக இருக்கும் ஷெய்த்தான் முஸ்லிம்களுக்கு எதிரி.

    நாம் எப்படி முஸ்லிம் ஆனோம்? நபி சல்லல்லாஹு அலைஹிவசல்லாம் கொண்டுவந்த இஸ்லாம் மார்க்கத்தை பின்பற்றுவதால் முஸ்லிம் ஆனோம்.

    நபி சல்லல்லாஹு அலைஹிவசல்லாம் நமக்கு எத்தனைப் பின்பற்றும் படி ஏவினார்கள்?

    குர் ஆனையும், ஹதீசையும் பின்பற்றும் படி ஏவினார்கள்.

    ஆகவே இவற்றை சரியாக பின்பற்றினால்தான் நாம் உண்மையான முஸ்லிம்களாக இருக்க முடியும்.

    ஆகவே, யார் யாரெல்லாம் முஸ்லிம்களின் இன்றைய நிலை குறித்து கவலைப் படுகின்றார்களோ, அவர்கள் இஸ்லாத்திற்கு வெளியில் தீர்வுகளைத் தேடிக்கொண்டிருக்காமல், அனைத்து முஸ்லிம்களையும் குர் ஆன், ஹதீஸ் இன் கீழ் ஒன்றிணைக்க முயலட்டும்.

    அப்பொழுது ஷாதுலியா, காதிரியா, தவ்ஹீத், தப்லீக் என்ற பெயர்களோ, பிரிவுகளோ இருக்க முடியாது.

    சஹாபாக்கள் வெற்றி பெற்றார்கள், அவர்களுக்கு மத்தியில் ஜமாத்தே இஸ்லாமியோ, இஹ்வானுல் முஸ்லிமீனோ இருக்கவில்லை, மாறாக உறுதியான ஈமானும், குர் ஆனும், நபிவழியும் இருந்தன.

    அனைவரும் தயாரா?

    ReplyDelete
  4. enna ivar vappavin peyar enna entru keattaal ummavin peyarai sollukirar. nalla samaalippukesan well well

    ReplyDelete
  5. கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல்பெயருக்கு ஏற்றமாதிரி முட்டாள்தனமாக பதில் சொல்லி நம்மையே குற்றம் சுமத்துகிறார்.
    Meraan

    ReplyDelete
  6. ரொம்ப தெளிவா பேசியிருக்கிறீங்க. ஒரு தரம் தூங்கி எழும்பினா சரியாகிடும்.

    ReplyDelete
  7. கேட்கப்பட்ட கேள்விகளுக்கு உரிய பதிலைத்தராமல்
    காமடி பண்றார் பாருய்யா...

    ReplyDelete
  8. எதோ தம்புள்ள விடையத்தில் முசுலிம் பற்றி பேசினார் என்பதுக்கு அவரை இங்கு அழைத்து தனக்கு தானே வாங்கி கட்டிகொள்வது இது தான் ஹி ஹி
    அமைச்சர் தெளிவாக உள்ளார்

    ReplyDelete
  9. Now days most wanted word is 'UNITY', let's accept the reality;

    There are individuals who are following, Quran & Sunnah Correctly,
    There are groups who are following ,Quran & Sunnah Correcly,
    There Jama'ths who are following Quran & Sunnah Correctly,
    There Movements, Org's who are following Quran & Sunnah Correclty,

    Most of them agreed on Fundermentals, Belief, but there are indidviudals,groups,sects, following the path far from ;fundermentals (Aqeedah);

    Final Judgemnt for all above groups, in the hand of Almight Allah.

    Let accept the reality, regardless of any 'group labels' if they follow Quran & Sunnah, we will accept and work on common ground & if differences arraises(except fundermentals), let 's avoid confrontation & clashes.

    We hear very often, so-called (a jamath of jamathless)group of ppl,individuals 'crying' no to 'jamaths' no to 'ameers' no to 'leadership'
    BUT the pitty is, these slogans 'against' the Prophet Sunnah., and same ppl who 'cries' there too in a Jamath (who are roll model of creating new 'jamath's inside their same jamath, day-by-day)

    In conlusion... If a group or individual following Quran & Sunnah, the we need to accept and work together..


    The pitty is,

    ReplyDelete

Powered by Blogger.