மலேசியாவில் இப்படியும் ஒரு சிக்கல்..!
மலேசிய நாட்டு "டிவி' பெண் வர்ணனையாளர் மொட்டை அடித்து கொண்டதால், பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
மலேசியாவின் பிரபல "என்டிவி7' சேனலில் வர்ணனையாளராக, ராஸ் அடிபா முகமது ரட்சி என்பவர் பணிபுரிந்தார். மலேசியாவில் நடந்த புற்றுநோய் ஒழிப்பு பிரசாரத்திற்காக, இவர் தலைமை மொட்டையடித்து கொண்டார். மறுநாள் பணிக்கு மொட்டை தலையுடன் வந்த ராஸ் அடிபாவை,பணி செய்ய "டிவி' நிர்வாகம் மறுத்து விட்டது.
நாங்கள் என்ன வழுக்கை தலை நபரையா பணிக்கு வைத்துள்ளோம். பழையபடி முடி வளர்ந்த பிறகு தான் ராஸ் அடிபா பணிக்கு வர வேண்டும். விக் வைத்து கொண்டால் செயற்கையாக தெரியும், எனவே, தற்போதைக்கு அவர் பணி செய்ய அனுமதியில்லை' என,"டிவி' நிர்வாகம் கூறிவிட்டது.முஸ்லிம் மதத்துக்கு விரோதமாக அவர் மொட்டை அடித்து கொண்டதால், மத துவேஷ சட்டத்தின் கீழ் தண்டனை அளிக்க வேண்டும் என, சிலர் கோரியுள்ளனர்.
இது குறித்து ராஸ் அடிபா குறிப்பிடுகையில், "நான் முஸ்லிம் மதத்தை நேசிக்கிறேன். அதனால் தான் தினமும் ஐந்து வேலை தொழுகிறேன். என்னுடைய தந்தை புற்றுநோயால் இறந்தார். என்னுடைய மாமாவும் புற்றுநோயால் அவதிப் பட்டு வருகிறார். எனவே, இந்த நோய் தடுப்பு பிரசாரத்துக்காக மொட்டை அடித்தேன்' என்றார்.
ஹஜ்ஜு நேரத்திலேயே பெண்கள் தலையை மழிப்பதை இஸ்லாம் தடுத்துள்ளது.ஐவேளை தொழுபவருக்கு
ReplyDeleteஇந்த அடிப்படை கூட தெரியவில்லை.காரணம் இஸ்லாமிய மார்க்க அடிப்படை அறிவு போதாமையே.மார்க்கத்தை
தெளிவாக படித்துக் கொண்டு வருமாறு தண்டனை கொடுத்தாலே போதும்.மத துவேச சட்டம்மெல்லாம் தேவையே அல்ல.இதைவிட மிக மோசமான சம்பவமெல்லாம் நடந்து கொண்டுதானே இருக்கிறது.
Meraan