Header Ads



மு.கா. தலைவர் அஷ்ரப் பௌத்த சாசனத்தை நாசப்படுத்தியதற்காக கடவுள் கொடுத்த தண்டனை

KWC

எஃப்.எம்.பர்ஹான்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவர் முன்னாள் அமைச்சர் எம்.எச்.எம். அஷ்ரப் உடைய மர்ம மரணம் தொடர்பான துப்பு இன்னும் துலக்கப்படாத நிலையில், அது தொடர்பான புதிய கண்டுபிடிப்பொன்றை இம் மாதம் 24 ஆம் திகதி பிரசுரமான ‘ரிவிர’ என்ற சிங்களப் பத்திரிகையின் ஞாயிறு வெளியீடு அதன் 27 ஆம் பக்கத்தில் கட்டுரையாக பிரசுரித்துள்ளது.

பௌத்த சாசனத்திற்கு அரசர்கள் தானம் செய்த சொத்துக்களையும், நிலபுலன்களையும் நாசமாக்கிய ஒருவருக்கு சாபத்தின் காரணமாக கடவுள் வழங்கிய தண்டனையே அவரை ஆகாயத்தில் தீயினால் சுட்டுப் பொசுக்கியதாக தெரிவிக்கின்றது அந்த கண்டுபிடிப்பு.

இந்த புதிய கண்டுபிடிப்பு முஸ்லிம்கள் மத்தியில் கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் அதனை  வன்மையாக கண்டித்துள்ளார்.

துக்ககரமான சம்பவம் நடந்து 12 ஆண்டுகள் கழித்து ஆதாரங்களற்ற இந்த அதிர்ச்சி தரும் தகவலை வெறும் ‘புனைக்கதை’ என சித்தரிக்கும் அமைச்சர் ஹக்கீம் அதற்கான காரணங்களையும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், சம்பந்தப்பட்ட வாரப் பத்திரிகைக்கு எதிராக பூர்வாங்க சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பில், தற்பொழுது தென்கொரியாவுக்குச் சென்றுள்ள அமைச்சர் ஹக்கீம்  தமது கட்சியின் சட்டத்தரணிகளுக்கு உரிய ஆலோசனைகளையும் வழங்கியுள்ளார்.

முஸ்லிம்களுக்கு எதிரான இஸ்லாமிய எதிர்ப்பு நடவடிக்கைகள் அதிகரித்துள்ள சூழ்நிலையில் செய்தி ஊடகங்கள் இத்தகைய விஷமத்தனமான கட்டுக்கதைகளைப் புனைந்துரைப்பது ஆரோக்கியமானதாகத் தென்படவில்லையென அமைச்சர் தமது ஆழ்ந்த கவலையையும் வெளியிட்டுள்ளார்.

பிரஸ்தாப பத்திரிகையின் 27 ஆம் பக்கத்தில் ‘கதிர்காமத்தில் கூறப்பட்ட ஆருடத்தில் வெளிப்பட்டது அஷ்ரப்பின் மரணமா?’ என்ற தலைப்பில் நாட்டில் ஆட்சி செய்தோர் கண்ட கிரகபலன் என்ற மகுடத்தில் இந்த விவகாரம் மிகவும் பூதாகாரமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக் கட்டுரையை எச்.டபிள்யு. அபயபால என்பவர் எழுதியுள்ளார். தாமும் அக் காலத்தில் களனி ராஜ மஹா விகாரையின் பரிபாலன சபையின் தலைவராக இருந்த சேனாரத்ன என்பவரும் கதிர்காமத்தில் உற்சவ காலத்தில் பிக்கு ஒருவர் ஆருடம் கூறும் சிறுவன் ஒருவனை அங்குள்ள அரச மரத்தடிக்கு அழைத்து வந்த போது நிகழ்ந்தவற்றை அக் கட்டுரையில் அவர் விபரித்துள்ளார்.

அதன்படி கதிர்காம தீ மிதிப்பை கண்டுகளிப்பதற்காக அங்கு வந்த தெய்வீக பலத்தால் ஆருடம் கூறும் சிறுவன் ஒருவன் தனது கையில் திரிசூலத்தை ஏந்தியபடி தனக்கு அளிக்கப்பட்ட அல்லிப்பூந்தட்டை தாங்கியவாறு தீர்க்கதரிசனமாக பின்வருமாறு கூறினானாம்.

“கடவர தெய்வம் இப்பொழுது இங்கு எழுந்தருளியிருக்கிறது. அது கூறுகிறது பௌத்த சாசனத்திற்கு அரச குமாரர்கள் அன்பளிப்பாக வழங்கிய காணி, பூமிகளையும், சொத்துக்களையும் நாசமாக்கிய ஒருவருக்கு நான் தண்டனை அளித்துள்ளேன். சோமாவதி சைத்தியவுக்கு சொந்தமான சொத்துக்களை மற்றும் கடவுளுக்கு சொந்தமானவற்றை நாசமாக்கிய  இன்னொருவர் இருக்கிறார், அவர் உயரத்தில் செல்கிறார்.

பௌத்த சாசனத்தை நாசப்படுத்தியதற்கும், சேதப்படுத்தியதற்குமான தண்டனையை  இன்னும் சில மாதங்களில் அவருக்கு கடவுள் வழங்குவார். தீயினால் சுட்டெரிப்பார்.  உண்மை! உண்மை!!

அந் நபர் சோமவதிக்கு மேலால் செல்கிறார், நிருவாகம் செய்கிறார், நாசகார வேலை செய்கிறார், விகாரைக்குச் சொந்தமான புனித பூமியை நாசமாக்குகிறார். உயரத்தில் அவர் சுட்டுக்கொளுத்தப்படுவார். கடவுளின் சாபமும், தண்டனையும் அவரைத் தீண்டும்.

சேனாரத்ன, அந்த நபரின் பெயரை தெய்வத்திடம் கேட்டார். அதற்குப் பதிலாக இந் நாட்டில் அவர் உயர் பதவியொன்றை வகிக்கிறார். இந்தக் குற்றத்திற்காக இன்னும் சிலருடன் சேர்த்து சுட்டுக்கொளுத்தப்படுவார். தண்டனை வழங்கப்பட இன்னுமொருவரும் இருக்கிறார்.

அந்தச் சிறுவன் கூறியபடி பௌத்தரல்லாத அமைச்சர் ஒருவர் காலி வீதியில் குண்டு வெடிப்பொன்றில் அகப்பட்டு உயிரழந்திருந்தார்.

அடுத்து சிறுவன் கூறிய அந்த முன்னறிவித்தலை பற்றி நாங்கள் சிந்தித்தோம். அக் காலத்தில் சோமாவதி பிரதேசத்தில் காணிக்கொள்ளை மிகவும் பிரச்சினைக்குரிய விஷயமாக இருந்தது. அக் குற்றச்சாட்டு மிகவும் விவாதத்திற்குரிய பிரச்சினையாக இருந்தது.

அப்பொழுது முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அஷ்ரப் அப் பிரதேசத்தில் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தார். அவருக்கு காணிப்பிரச்சினை சிக்கலானதாக இருந்தது.

இன்னும் சில மாதங்கள் கழிந்தன, அஷ்ரப் அவர்கள் பயணம் செய்த உழங்கு வானூர்தி மாவனெல்லையில் தீடீர் விபத்திற்கு உள்ளாகியது. அது தீப்பற்றி வெடித்து வீழ்ந்தது. அதில் பயணம் செய்த அனைவரும் விபத்துக்கு உள்ளானார்கள்.

சேனாரத்னவுக்கும், எனக்கும், பிக்குவுக்கும் கதிர்காமத்தில் கூறப்பட்ட ஆருடம் நினைவுக்கு வந்தது. அஷ்ரப் அவர்களும் பயணம் செய்த உழங்கு வானூர்தி கடவுளின் சாபத்தினாலேயே வெடித்துச் சிதறி வீழ்ந்ததாக பலர் மத்தியில் மறைவான இரகசியமாக பேசப்பட்டு வந்தது.

அக்காலத்தில் சோமாவதியில் காணிக்கொள்ளை தீவிரமடைந்திருந்தால் அநேகர் அது பற்றி கடவுளிடம் முறையிட்டிருந்தனர்.”

இவ்வாறு அக் கட்டுரையில் எச்.டபிள்யு அபயபால எழுதியுள்ளார்.

இந்த  கட்டுரைக்கு அமைச்சர் ஹக்கீம் பின்வரும் கேள்விகளை எழுப்பியுள்ளார்:

இதனைத் தெரிவிக்க ஏன் பன்னிரண்டு வருடங்கள் எடுத்தன?

ஆருடம் கூறிய சிறுவனின் பெயர் விபரங்கள் ஏன் வெளியிடப்படவில்லை?

சோமாவதி சைத்தியவிற்கு சொந்தமான காணிக்கும் மறைந்த எமது கட்சியின் தலைவர் அஷ்ரபிற்கும் என்ன சம்பந்தம்?

இக் கட்டுரையின் அடிப்படையில் மறைந்த எமது தலைவர் பொலனறுவை மாவட்டத்திலிருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டிருந்தாரா?

இவற்றை தயவு செய்து நிரூபியுங்கள். வீணாக இட்டுக்கட்டி புனைக்கதைகளை சோடித்து முஸ்லிம் சமூகத்தை வம்புக்கு இழுக்காதீர்கள்.

இந்த விஷமக் கட்டுரை தொடர்பாக பத்திரிகைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.  இப்பத்திரிகையின் உரிமையாளர் அரசியல் செல்வாக்கு மிக்கவர் என கூறப்படுகிறது.

5 comments:

  1. Lahinathullah alaa quffar fie Sri Lanka. Liannahum Liddal Islaam wa Allah. Hasbunallahu wa Nihmal Wakeel.Allahumma Dammarul Budiyyeen wa Buyeethuhum wa Amawaaluhum wa Kaneesaththuhum. Allahumma Ahizzal Islaama Wa Muslimeena wa athilla asshirke wal mushrikeena wa dammer aghdaa al theen. Allahumma ansural islaam Fii Sri Lanka.Ya Rab show theae quffaar your Mujibaath.

    ReplyDelete
  2. Ippawawazu wilanguma???

    ReplyDelete
  3. பில்லி,சூனியம்,ஆரூடம்,சாஸ்திரம்,சம்பிரதாயத்துக்கு கட்டுப்பட்ட கூட்டம்,சாத்தானியத்தனமாக உளறுகிறது.
    இவங்களுக்கு யாரையாவது சொரிந்து கொண்டே இருக்கணும்.அடுத்து சிங்கள கிறிஸ்தவர்களை சொரிவார்கள்.
    இவர்களின் வணக்க வழிபாடுகளை சாத்தான் அழகாக காட்டுகிறான்.12 வருடங்களுக்கு பிறகு சாத்தானிய
    கூட்டத்துக்கு ஞானோதயம் பிறந்திருக்கிறது.
    Meraan

    ReplyDelete
  4. தலைவர் அஷ்ரப் அவர்களை நேசிக்கும் மக்களின் சார்பாக முன்னாள் தலைவர்மீது புனைய பட்ட இப்படி பட்ட அப்பட்டமான பொய்களுக்காக இப்போதைய தலைவர் வழக்கு தொடுத்து வெற்றியும் பெற்றால் இனிமேலாவது இப்படிபட்ட கட்டுரைகள் வெளிவருவதனை குறைத்து கொள்ளலாம். நம் நாட்டு நீதி துறையில் மக்கள் இன்னும் நம்பிக்கை வைத்துள்ளார்கள் என்பது கருத்து.

    ReplyDelete
  5. puthu kaddu kathaihalai koori innum inamuranpaaduhalai thottruvikkum ippadiyaanavarhalukku allah pothumanavan

    ReplyDelete

Powered by Blogger.