தொண்டர் ஆசிரியர் விவகாரத்தை ஜனாதிபதியுடன் பேசி தீர்வுகாண்பேன் - அமைச்சர் றிசாத்
இர்ஷாத் றஹ்மத்துல்லா
வன்னி மாவட்ட தொண்டர் ஆசிரியர்களின் சேவைகளை ஆசிரிய சேவைகளுக்குள உள்வாங்குவது தொடர்பாக ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்களை நடத்த திட்டமிட்டுள்ளதாக வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும் கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் வன்னி தொண்டர் ஆசிரியர்கள் மத்தியில் உரையாற்றும் போது கூறியுள்ளார்.
முல்லைத்தீவு கலைமகள் வித்தியாலத்தில் இவர்களை சந்தித்த அமைச்சர்,தங்களது கோறிக்கைகள் நியாயமானது என்பதால் அது குறித்து ஏற்கனவே கல்வி அமைச்சருடன் கலந்துரையாடியுள்ளதாகவும்,நாடு திரும்பியுள்ள ஜனாதிபதியுடன் இது தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாகவும்,இந்த சந்திப்பிற்கு முன்பள்ளி ஆசிரிய அமைப்பின் பிரதி நிதிகள் சிலரும் அழைக்கப்படவுள்ளதாகவும் கூறினார்.
வன்னி மாவட்டத்தில் அதிகமாக பாதிப்புக்குள்ளான முல்லைத்தீவு பிரதேசத்தில் கற்றல் செயற்பாடுகளில் ஈடுபடும் மாணவர்களின் ஆரம்ப கல்விக்கு தொண்டர் ஆசிரியர்களினது பங்களிப்பு இன்றியமையாதது என்பதால் தங்களது நிரந்தர சேவைகள் குறித்து தொடர்ந்தும் தாம் தேவையான நடவடிக்கையினை எடுக்கவுள்ளதாகவும் அமைச்சர் றிசாத் பதியுதீன் தொண்டர் ஆசிரியர்கள் மத்தியில் பேசும் போது கூறினார்.
அதே வேளை அரசாங்கம் அதனது நிதி மற்றும் பொது நிர்வாக அமைச்சின் நியமங்களுக்கு அமைவாகவே அரச நியமனங்களை வழங்குவதாகவும்,சிலர் அரச எதிர் சக்திகளின் கருத்துக்களுக்கு செவிசாய்த்து தேவையற்ற போராட்டங்களில் ஈடுபடுவதானது இப்பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையாது என்றும் தொண்டர் ஆசிரியர்கள் மத்தியில் கருத்துரைத்த அமைச்சர் றிசாத் பதியுதீன்,பேச்சுவார்த்தைகள் மட்டுமே எல்லாவற்றிற்குமான தீர்வாக அமையும் என்றும் கூறினார்.
சமூகத்தில் மிகவும் போற்றப்படக் கூடியவர்கள் ஆசிரிய சேவையினை செய்பவர்கள் என்பதால் தங்களது தகைமைகளை வளர்த்துக் கொள்வதிலும் அதி கூடிய கவனம் செலுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்திய அமைச்சர் றிசாத் பதியுதீன்,அரசியல் கட்சிகளினது பகைடைக்காய்களாக சிலர் உங்களை அடையாளப்படுத்த முயற்சிப்பதாகவும்,அதற்கு துணை போய்விட வேண்டாம் என்ற பணிவான வேண்ட்டுகோளை விடுப்பதாகவும்,அமைச்சர் எடுத்துரைத்தார்.
இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக்,ஜனாதிபதியின் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளரும்,முன்னால் நாடாளுமன்ற உறுப்பினருமான சதாசிவம் கணகரத்தினம்,ஆளுநரின் ஆணையாளர் சாஹிப் மொஹிதீன்,பட்டதாரிகள் சங்க தலைவர் விஜின்தன்,இணைப்பாளர் ஜொயிஸ் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
Post a Comment