Header Ads



சிறுவர்களுக்கு சிறுவர் இல்லங்கள் வேண்டாம்..!

சிறுவர்களை, சிறுவர் இல்லங்களில் சேர்ப்பதை தவிர்க்கும் பொருட்டு நாடளாவிய ரீதியாக விசேட வேலைத்திட்டங்களை முன்னெடுக்க தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தீர்மானித்துள்ளது.

இந்த நிலையில் பல சிறுவர் இல்லங்கள் தொடர்பில் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருவதாக அதிகார சபையின் தலைவர் அனோமே திஸாநாயக தெரிவித்தார். இதனை தவிர்ப்பதற்கு ஒரே வழி, சிறுவர்களை சிறுவர் இல்லங்களில் சேர்ப்பதை தவிர்ப்பதே ஆகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் பொருட்டு விசேட வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் அனோமே திஸாநாயக குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.