Header Ads



மஹிந்தவின் வாக்குறுதி புஸ்வானம் - அமைச்சர் றிசாத் பதியுதீன் என்ன செய்யப்போகிறார்..??



முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு வழங்கப்படாவிட்டால் பதவி விலக நேரிடும் என அமைச்சர் ரிசாட் பதியுதீன் எச்சரிக்கை விடுத்துள்ளார். முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கத் தவறினால் பதவி விலக வேண்டி நேரிடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க அமைச்சர்களைக் கொண்ட குழுவொன்றை அமைக்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அண்மையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போது வாக்குறுதி வழங்கியிருந்தார்.

இருந்தபோதும்  அமைச்சர்களைக் கொண்ட குழுவொன்றை அமைத்து முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் திட்டம் இதுவரை ஏற்றுக் கொள்ளப்படவில்லை என அமைச்சர் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

4 comments:

  1. அமேச்சர் ரிசாத் பொறுமை காக்க வேண்டும் அவசரபடாமல் உள்ளிரிந்தே போராட வேண்டும் அதற்கான வியூகம் அமேய்த்துசெயல்படவும் மூத்த அமேச்சர் அதாவுடக்கு நடந்ததை பார்த்தீர்கள் தானே

    ReplyDelete
  2. னாதிபதி எந்தக் காலத்தில் வாக்குறுதிகளை நிறைவேற்றியிருக்கிறார்.உண்மையான அரசியல்வாதி சொல்லுவதைஎல்லாம் செய்யமாட்டான்.நூரில் ஒன்று இரண்டுதான் தன் சுய நலத்திற்காக செய்வனங்க .
    meraan

    ReplyDelete
  3. மக்களுக்காக உழைக்கின்ற அரசியல் வாதிகளுக்கு சோதனைகள் வரத்தான் செய்யும்.பொறுமை காருங்கள் இறைவன் கைவிடமாட்டான்!

    ReplyDelete
  4. பொறுத்தது போதும் பொறுமைக்கு எல்லை உண்டு. இது ஒத்துமொத்த முஸ்லிம்கள் முகம்கொடுக்கும் பிரச்சினை, இங்கு சில்லறை பிரதேச அபிவிருத்திகளுக்காக முஸ்லிம்களின் நிம்மதியை,பாதுகாப்பை அடமானம் வைக்க வேண்டாம். கிழக்கு தேர்தல் அரசுக்கு ஒரு முக்கிய சவால். ஆகவே அதுவரை மௌனம் காக்கும் ஜனாதிபதி அதன் பின்னர் தனது உண்மையான முகத்தை காண்பிக்கத்தான் போகிறான். கைப்பொம்மைகலான ரிசாத்தையும் அதாவுல்லாவையும் வைத்து மு.காங்கிரஸ் இணை வேரோடு பிடுங்கி விடுவதே அவர்களின் குறிக்கோள். அதுக்கு தபுல்லை , முத்தூர் போன்ற பல நாடகங்களை மேடையேற்றி அவற்றுக்கு ரிசாத் மூலம் தீர்வு பெற்று கொடுப்பார்கள். மக்கள் கவனம் ரிசாத் இன் பால் திரும்பும். மு.கா அழிவு தொடரும். அத்துடன் முஸ்லிம்களின் அழிவு ஆரம்பிக்கும்.

    ReplyDelete

Powered by Blogger.