நாட்டில் பல மட்டங்களில் பூமியதிர்வுகள் ஏற்படலாம் - புவிச்சரிதவியல் நிபுணர் தெரிவிப்பு
TN
இலங்கை அமைந்துள்ள நிலத்தட்டு வட கிழக்கு நோக்கி நகர்வதால் நாட்டில் பல மட்டங்களில் பூமியதிர்வுகள் ஏற்படலாமென கண்டி, அடிப்படை கற்கை நிலையப் பணிப்பாளரும், பேராதனை பல்கலைக்கழக புவிச்சரிதவியல் முன்னாள் சிரேஷ்ட விரிவுரையாளருமான சீ. பி. திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டின் தென்கரை பகுதிக்கு 500 கிலோ மீற்றர் தூரத்தில் நிலை கொண்டுள்ள நிலத்தட்டின் எல்லை காரணமாக இலங்கை அமைந்துள்ள இந்திய அவுஸ்திரேலிய நிலத்தட்டு 8 மில்லியன் ஆண்டுகளாக இரண்டாகியுள்ளது.
இதனால் இலங்கை அமைந்துள்ள நிலத்தட்டு ஈஸான மூலையை (வட கிழக்கு) நோக்கி நகர்கிறது.
இதனால் இலங்கையில் நில அதிர்வுகள் தொடர்பாக ஆராய்ச்சி நடத்தும் விஞ்ஞானிகள் இந்திய வலயத்தில் புவிச்சரிதவியல் விஞ்ஞானிகளுடன் சேர்ந்து ஆராய்ச்சி நடத்துவது மிக முக்கியம் என்றும் பேராசிரியர் திசாநாயக்க தெரிவித்தார்.
இலங்கைக்கு தென் புறமாக உருவாகும். நிலத்தட்டு எல்லை பற்றி புவிச்சரிதவியல் விஞ்ஞானிகள் கடும் அவதானம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். 2000 ஆம் ஆண்டில் இந்த எல்லைக்கு அருகில் 07 ரிச்சர்க்கும் மேற்பட்ட நில அதிர்வு பதிவாகியுள்ளது.
1615 ஆம் ஆண்டில் போத்துகேயர் காலத்தில் கொழும்பிலும் அதனை அண்மித்த பகுதிகளிலும் நில அதிர்வினால் இரண்டாயிரம் பேர் வரை மரணித்ததாக தகவல் பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
muslimgalukku angu aniyayam nadakkutho angu bumi adhirum alavin malihail kai weithal ithai athir parkawum
ReplyDeleteபுதிய ஹதீஸ் உருவாக்க வேண்டாம்.
ReplyDeleteஅல்லாஹ் சொல்லாததை, மறைவான் காரணத்தை நீங்கள்
உருவாக்க வேண்டாம்.
உங்களுக்கு மத்தியில் பாவங்கள் அதிரகரிக்கும் பொழுது
பூமியதிர்ச்சியை எதிர்பாருங்கள் என்பதுதான் ஹதீஸ்.
உமர் (ரலி) அவர்களின் காலத்தில் மதீனாவில் பூமியதிர்ச்சி வந்த பொழுது
அவர்கள் மக்களை அழைத்து இதைத்தான் சொன்னார்கள்.
''நீங்கள் இரகசியமாக செய்யும் பாவங்களை நிருத்தவில்லியானால், நான் உங்களை விட்டும் போய்விடுவேன்""
என்று சொன்னார்கள்.
முஸ்லீம்களுக்கு அநியாயம் நடந்தால் பூமியதிர்வு வரும் என்று எங்கே உள்ளது?
முதலில் முஸ்லீம்கள் முஸ்லிம்களாக இருக்க வேண்டாமா?
சிர்க்கையும், பித்அத்துகளையும் ஹராத்தையும் செய்துகொண்டு,
நாம் சிறந்த முஸ்லீம்கள் என்று பெருமையடித்துக் கொள்கின்றோம்.
இசையை வெறுக்கும் முஸ்லிம்கள் நம்மில் எத்தனை பேர் உள்ளனர்?
இசையை ஹலாலாக்கவும் துடிக்கின்றனர். அதற்கு ஏற்றாட் போல
மார்க்கத்தை வளைக்கும் சிலர் தங்களை மார்க்க அறிஞர்கள் என்றும்
சொல்லிக் கொள்கின்றனர்.
அல்லாஹ் ஹராமாக்கியத்தை, ஹலாலாக்க யாருக்கு அதிகாரம் உள்ளது?
வட்டிக்கு வேறு பெயரை வைத்து விடுவதால், வட்டி ஹலாலாக்கி விடுவதில்லை.
அல்லாஹ் தடுத்த விடயங்களை செய்வதில் முஸ்லீம்கள் முன்னணியில் இருக்கின்றனர்.
Fully agree with 2nd comments. Let us try to be as Muslim per Quran & Sunna insted febricated.
ReplyDeleteSLAHY-سلاهي