Header Ads



இலங்கையிலிருந்து இம்முறை ஹஜ்ஜுக்கு செல்வோர் விபரம் பகிரங்கப்படுத்தப்படும் - பெளசி



புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக தெரிவு செய்யப்படும் யாத்திரிகர்களின் பெயர் விபரங்களை வெளியிட திட்டமிட்டுள்ளதாக ஹஜ் குழுத் தலைவரும் சிரேஷ்ட அமைச்சருமான ஏ.எச்.எம். பெளசி தெரிவித்தார்.
ஹஜ் கடமையை நிறைவேற்றுவத ற்கு பணத்தை செலுத்தி முன் கூட்டி பதிவு செய்யப்பட்ட வரிசைகிரமப்படியே அந்த பெயர் பட்டியல் அமையும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக இம்முறை 6000 விண்ணப்பப்படிவங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. என்றாலும் 2800 பேருக்கே தற்பொழுது கோட்டா ஒதுக்கப்பட்டுள்ளது எஞ்சியுள்ள 3200 பேருக்குமாக அனுமதி வழங்குவதில் தொடர்பில், கோட்டாக்களை ஒதுக்குதல் தொடர்பிலும் ஏப்ரல் மாதம் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன் அது தொடர்பில் கூடிய கவனம் செலுத்தப்படும் என்று சவுதி அரசு கூறியுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை பதிவு செய்யப்படும் வரிசை கிரமப்படி தெரிவு செய்யப்பட்டவர்கள் மாத்திரமே ஹஜ் கடமையை நிறைவேற்ற அனுமதிக்கப்படுவர் என்று தெரிவித்த அமைச்சர், பெயர் பட்டியலில் இல்லாதவர்கள் முகவர்களிடம் பணம் கொடுத்து ஏமாறவோ கடைசி நேரத்தில் தடுமாறோ வேண்டாம் என்று அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

1 comment:

  1. மாஷாஅல்லாஹ்!
    எதையும் நியாயமாக செய்தால் எல்லோருக்கும் சந்தோசம்தான்! (ரஸ்மி)

    ReplyDelete

Powered by Blogger.