சிசல்ஸ் நாட்டு தூதுவருடன் அமைச்சர் றிசாத் சந்திப்பு
இர்ஷாத் றஹ்மத்துல்லா
இந்தியாவுக்கும் இலங்கைக்குமான சிசல்ஸ் நாட்டின் உயர் ஸ்தானிகர் வேவன் வில்லியன் கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீனை அமைச்சில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பின் போது இலங்கையின் வங்கித் துறையில் தமது நாடு பங்களிப்புக்களை செய்ய விருப்பம் கொண்டுள்ளதாகவும் உயர் ஸ்தானிகர் கூறினார்.
தமது அமைச்சின் கீழ் இயங்கும் இலங்கை வர்த்தக திணைக்களத்தின் புள்ளி விபரத்தினை மேற்கோள் காட்டிய அமைச்சர், இரு நாடுகளுக்குமான வர்த்தக செயற்பாடுகள் மிகவும் குறைந்தளவிலேயே காணப்படுவதாகவும் 2011 ஆம் ஆண்டு தொடக்கம் இது வரை 2 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கான கொடுக்கல் செயற்பாடுகளே இடம் றெ்றுள்ளதாகவும்அமைச்சர் றிசாத் பதியுதீன் சுட்டிக்காட்டினார்.
இலங்கையிலிருந்து சீசல்ஸ் நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பிரதான பொருட்களாக தேயிலை,மீன் வகைகள்,படகுகள்,தானிய வகைகள்.சொசேஜஸ் போன்றன ஆகும்.அதே வேளை சீசல்ஸ் நாட்டிலிருந்து கொத்தமல்லி,சீரகம்.வாசனைத் திரவியங்கள். எனபனவாகும். அதே வேளை இலங்கையில் தற்போது 20 முதல் 25 வரையிலான படகு தயாரிப்பு நிலையங்கள் உள்ளன.அவற்றில் நோர்த் சொய்ல் நிறுவனம் உலகில் பிரசித்தி பெற்ற நிறுவனமாகும். அதனது தளம் பியகம சுதந்திர வர்த்தக வலயத்தில் அமைந்துள்ளது.
2012 ஆம் ஆண்டில் 743,750 அமெரிக்க டொலர்கள் படகு ஏற்மதி மூலம் பெறப்பட்டுள்ளன.இலங்கையில் தயாரிக்கப்படும் படகுககள் இந்தியா,பங்களாதேஷ்.மாலைதீவு,மொரீஸியஸ் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment