கிழக்கு மாகாண சபைத் தேர்தல் குறித்து ஹாபீஸ் நசீர் அஹமட் அறிக்கை
எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தல் ஸ்ரீலங்கா முஸ்லிம்களின் வரலாற்றில் மிக முக்யத்துவம் வாய்ந்த தேர்தல் களமாகும். முஸ்லிம்களின் வாழ்வியல் இருப்பு பாதுகாப்பு உள்ளிட்ட சமூக அரசியல் உரிமைகளுக்கு உத்தரவாதம்வழங்கப் போகும் தேர்தல் களமாக இது இருக்கும்.
அரசியலில் அடிமையாக இருந்த எமது சமூகம் 1980 களுக்குப் பின் எழுச்சி பெற்றது. மறைந்த தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரஃப்பால் முன்னெடுக்கப்பட்ட முஸ்லிம் சமூகத்தின் அரசியல் விடுதலைப் போராட்டங்கள். அவருக்குப் பிந்திய ஒரு கால கட்டத்தில் ஒற்றுமை எனும் கயிற்றைப் பற்றிப் பிடிக்கத் தவறியதால் முஸ்லிம் சமூகம் பின்னடைவுக்குள்ளானது. எனினும் - இப்போது வரவிருக்கும் இந்த அரிய சந்தர்ப்பம் முஸ்லிம் சமூகத்தின் அபிலாஷைகளை நிறைவேற்றி வைக்கும் என்பதில் இன்ஷா அல்லாஹ்! எந்த ஐயுறவும் எமக்கு வேண்டாம் என வரவிருக்கும் கிழக்கு மாகாண சபைத் தேர்தல் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி தலைவர் ஹாபீஸ் நசீர் அஹமட் தெரிவிக்கின்றார்.
சுதந்திர இலங்கையில் தமிழர்கள் தம் உரிமைகளுக்காக அஹிம்சா ஆயுத வழிகளில் போராடியும் வெற்றி கிட்டவில்லை. யுத்தத்தின் முடிவுஇபல்வேறு தலைமைகளை அவர்களுக்கு இல்லாமல் செய்தது. எனினும் - இன்று அதில் ஒரு தெளிவு கிட்டியிருக்கிறது. சர்வதேசத்துக்கும் அவர்களது பிரச்சனை தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது. அச்சமூகத்தின் அவலநிலை சர்வதேசத்தின் சகல தரப்பினரையும் அறிவூட்டியிருக்கிறது. அவர்களது பிரச்சனைகளுக்கு எவரும் எதுவும் இல்லாத நிலையிலும் கூட விடிவுகாலம் பிறக்கின்ற சாத்தியக் கூறுகள் இப்போது தென்படுகின்றன. நிச்சயமாக அது அவர்களுக்கு கிடைக்கும். எவர் எதைச் சொன்னாலும் அவர்களது அபிலாஷைகள் நிறைவேறும் ஒரு காலம் மிக அண்மையில் வரவிருக்கிறது. முஸ்லிம் சமூகம் இதனைப் புரிந்து கொள்ள வேண்டும்.
முஸ்லிம்களின் உரிமைப் போராட்டங்களில் தனி அலகு நிர்வாக அலகு முஸ்லிம் தேசம் என முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. உள்நாட்டு அரசியல் அழுத்தங்களும் இன்னோரன்ன அரசியல் சமூக சிக்கல்களும் எமது போராட்ட களங்களை அவ்வப்போது இடை நிறுத்தம் செய்து மந்த நிலைக்கு கொண்டு சென்றன. அல்லாஹ் மிக இலகுவாக தந்திருக்கும் அரிய சந்தர்ப்பம் இதுவாகும். இத்தருணத்தில் முஸ்லிம்கள் ஒற்றுமைப்பட வேண்டும். இது முஸ்லிம் தலைவர்கள் உட்பட்ட முஸ்லிம் சகோதரர்கள் முன்னிற்கும் முதன்மைச் சவாலாகும். இந்தச் சவாலை நாம் வெற்றி கொள்ளவில்லையானால் வரலாற்றில் பெரும் தவறை செய்தவர்களாவோம். அடுத்துவரும் தலைமுறைக்கு துரோகிகளாக இருப்போம். இந்த நிலையை மாற்றியமைப்பதே இன்று கிட்டியிருக்கும் சந்தர்ப்பத்தின் சவாலாகும்!
எதிர்வரும் கிழக்கிலங்கை மாகாணசபைத் தேர்தலில் முஸ்லிம்கள் ஒற்றுமைப்பட்டு இரண்டு விடயங்களை தீர்மானிக்கும் சக்தியாக மாறவேண்டும்.
முதலாவது முஸ்லிம் முதலமைச்சர் ஒருவரை தீர்மானிப்பது. இரண்டாவது இருபதுக்கு மேற்பட்ட முஸ்லிம் உறுப்பினர்களை கிழக்கு மாகாணசபைக்கு கொண்டு செல்வது.ஒற்றுமையின் மூலம் 22 உறுப்பினர்களை முஸ்லிம்கள் மிக இலகுவாகப் பெற முடியும்.
குறிப்பாக முஸ்லிம் இளைஞர்கள் இவ்விடயத்தில் சிந்தித்து செயலாற்ற வேண்டும். ஒரு மனப்பட்டு ஒற்றுமையுடன் கால்பதிக்க வேண்டும். உறுதிபூண்டு செயற்பட வேண்டும்.
இந்நாட்டு தலைவர்கள் வெளிநாட்டு சக்திகளை புறந்தள்ளி செயலாற்ற முடியாத நிலையிலேயே காலங்காலமாக இருந்துவருகின்றனர்.
எனவே கிழக்கு வாழ் முஸ்லிம்கள் ஒற்றமைப்பட்டு மேற்கூறிய இரண்டு விடயங்களையும் தீர்மானிப்பார்களேயானால் வட-கிழக்கு தீர்வில் எமது அபிலாஷைகளையும் எம்மால் உறுதிப்படுத்த முடியும். எந்த விதத்திலாவது ஒன்றுபட்ட ஒரு சமூகமாக எழுச்சி கொண்டு இவைகளை நாம் சாதிக்க வேண்டும்.
இவ்விடயங்களை முஸ்லிம் சமூகம் விளங்காது போனால்,
மீண்டும் வழிதவறிய சமூகமாக நட்டநடுவில் கைவிடப்படுவார்கள். முஸ்லிம் தலைவர்கள் சமூக பிரமுகர்கள்இ புத்திஜீவிகள்இ உலமாக்கள் எனப் பலரும் ஒன்றிணைந்து எதிர்கால சந்ததிக்கு 'ஜவாபு' சொல்லக் கூடியவர்களாக மரணிக்க வேண்டும் எனவும் அவ்வறிக்கை தெரிவிக்கிறது.
musleemkalukku musleem conggracil thahithiyana thalaivarhal illai anpathai musleemkal unarthu irukkinrarhal
ReplyDelete