'வேற்றுமையில் ஒற்றுமை' - முஸ்லிம் இளைஞர்களுக்கான சோபித தேரரின் சொற்பொழிவு
இலங்கையில் அண்மைக் காலமாக இனங்களுக்கிடையில் முரண்பாடுகள் அதிகரித்து வருகின்றமை யாவரும் அறிந்ததே. இதன் காரணமாக, எமது தாய்த் திருநாடு ஒரு ஆரோக்கியமற்ற சூழலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையை மாற்றி, இந்நாட்டில் அனைத்து மக்களும் ஒற்றுமையாகவும் புரிந்துணர்வுடனும் வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்துவதற்கான காத்திரமான பங்களிப்புகளை மேற்கொள்வது முஸ்லிம்களாகிய எமது கடமையாகும்.
இதை உணர்ந்த முஸ்லிம் இளைஞர் மன்றத்தை சேர்ந்த நாம், “வேற்றுமையில் ஒற்றுமை” எனும் தலைப்பில் மாற்று மதத் தலைவர்கள், பிரமுகர்களைக் கொண்டு நடத்தும் மாதாந்த சொற்பொழிவுத் தொடர் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளோம்.
இதன் முதல் சொற்பொழிவு, இன்ஷா அல்லாஹ், இன்று செவ்வாய்க்கிழமை ( ஜூன் மாதம் 26 ஆம் திகதி) மாலை 4.30 முதல் 6 மணி வரை இலக்கம் 201, டி.ஆர் விஜயவர்த்தன மாவத்தை , கொழும்பு 10 இல் அமைந்துள்ள முஸ்லிம் மகளிர்களுக்கான கற்கை மன்றத்தில் (Muslim Ladies Study Circle) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் கோட்டே ஸ்ரீ நாக விகாரையின் விகாராதிபதி மதுளுவாவே சோபித தேரர் நிகழ்த்துகின்றமை குரிப்பிடத்தக்கது.
உரையாற்றுபவர்: கெளரவ மதுளுவாவே சோபித தேரர் (கோட்டே ஸ்ரீ நாக விகாரையின் விகாராதிபதி)
காலம்: ஜூன் 26 ஆம் திகதி, செவ்வாய்க்கிழமை
நேரம்: மாலை, 4.30 முதல் 6 மணி வரை
இடம்: Muslim Ladies Study Circle கேட்போர் கூடம், இல201, டீ.ஆர். விஜயவர்த்தன மாவத்தை,கொழும்பு 10
இதில் கலந்து சிறப்பிக்குமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.
முஸ்லிம் இளைஞர் மன்றம்
Post a Comment