தெஹிவளையிலிருந்து முஸ்லிம்களை வெளியேற்ற சதி - ரவி கருணாநாயக்கா எம்.பி.
GTN
தெஹிவளையில் வாழும் 23000 முஸ்லிம்களை வெளியேற்ற அரசாங்கத்தின் கடும்போக்குடைய சக்திகள் முயற்சித்து வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
மத வழிபாட்டுத் தளங்கள் மீது ஆளும் கட்சியின் கடும் போக்குடைய தரப்பினர் அடக்குமுறைகளைப் பிரயோகித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தெஹிவளையில் பல தலைமுறைகளாக முஸ்லிம்கள் வாழ்ந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். எனினும், இந்த அரசாங்கத்தின் சில தரப்பினர் முஸ்லிம்களை வெளியேற்றும் முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
கடும்போக்குடைய குழுவினர் தெஹிவளை பள்ளிவாசலுக்கு எதிரில் கூடி தொழுகைகளை நிறுத்துமாறு எச்சரிக்கை விடுத்தமை ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இவ்வாறான நடவடிக்கைகள் இன நல்லிணக்கத்தை மோசமாக பாதிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Thank you sir,
ReplyDeleteபாருங்க, நீங்கள் மட்டும் தான் எங்கள் மீது மிகுந்த அக்கறையாய் உள்ளீர்கள், அப்பிடி நடக்காம பார்த்துக்கோங்க, அடுத்த தேர்தலில் நாங்க எல்லாம் உங்களுக்கே வாக்கு தாறோம். . lol
Mr Ravi you are not a creepy politician at all
ReplyDeleteWell done
Tks for your voice from on behalf of Muslim community....