Header Ads



இலங்கையில் பன்றிக் காய்ச்சலா..? இருவர் அடையாளம் காணப்பட்டனர்

AD

அங்கொட தேசிய மனநல வைத்திய நிலையத்தின் 9ம் வாட்டில் சேவையாற்றும் இருவருக்கு இன்புலுவென்சா AH1N1 எனப்படும் பன்றிக்காய்ச்சல் வைரஸ் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த வாட்டில் உள்ள சேவையாளர்களுக்கு அண்மையில் திடீர் சுகயீனம் ஏற்பட்டதால் அந்த வாடு தற்காலிகமாக மூடப்பட்டது.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இரு சேவையாளர்களுக்கு இன்புலுவென்சா AH1N1 எனப்படும் பன்றிக்காய்ச்சல் வைரஸ் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதென தொற்று நோய் பிரிவின் பணிப்பாளர் டொக்டர் பபா பலிகவடன தெரிவித்தார்.

இந்த வைரஸ் தற்போது சாதாரண வைரஸாக அடையாளம் காணப்பட்டுள்ளதால் அநாவசியமாக அச்சம் கொள்ளத் தேவையில்லை என டொக்டர் பபா பலிகவடன குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.