Header Ads



சீன இராணுவம் எந்தவேளையிலும் இலங்கைக்கு உதவ தயாராக உள்ளதாம்

சீன இராணுவம் எந்த சந்தர்ப்பத்திலும் இலங்கைக்கு உதவ தயாராக இருப்பதாக சீன இராணுவத் தளபதி இலங்கை இராணுவத் தளபதி லெப்டினட் ஜெனரல் ஜகத் ஜயசூரியவிடம் வாக்குறுதியளித்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.

சீனாவுக்கு விஜயம் செய்துள்ள இலங்கை இராணுவத் தளபதி சீன இராணுவத் தளபதியை சந்தித்து இருதரப்பு விடயங்கள் குறித்து நேற்று  பேச்சு நடத்தியுள்ளார். இரண்டு நாடுகளுக்கும் இடையிலான இராணுவப் பயிற்;சிகள் மற்றும் தொழிற்நுட்ப உதவிகளை தொடர்ந்தும் வழங்க இதன் போது இணக்கம் தெரிவிக்கப்பட்டதாக இராணுவப் பேச்சாளர் மேலும் கூறியுள்ளார்.

1 comment:

  1. உலக நாடுகளுடன் நாங்கள்(ஹெலம உறுமய,ஜேவிபி) போராட தயார்.உலகின் பெரிய புத்த நாடு எங்களுடன் இருக்கிறார்கள்.
    Meraan

    ReplyDelete

Powered by Blogger.