இணையதளம் மூலம் நவீன புறம்பேசுதல் சமூக ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல..!
ராஜா முஹம்மத் (எ) முஹையத்தீன் பாட்ஷா
வலைதளம் மற்றும் ஈ-மெயில் குரூப்ஸ் மூலமாக எத்தனை எத்தனையோ நல்ல செயல்கள் உலத்தில் நடைபெறுகிறது, பேஸ்புக்.., மற்றும் பிளாக்குகள் முலமாக தான் எகிப்து மற்றும் துனிசியா போன்ற நாட்டு மக்களை ஒன்று கூட்டி அவ்வப்போது நிலைமைகளை எடுத்துச்சென்று மிகப்பெரிய ஆட்சி மாற்றத்தையே கூட நிகழ்த்த நல்லெண்ணம் மற்றும் சீறீய முற்போக்கு சிந்தனை கொண்ட இளைஞர்கள் காரணமாக இருந்தனர் என்பதை கண்டு உலகம் வியந்தது.
இதை சுட்டிக்காட்டிய அதே கனம் சமநிலை சமுதாயம் போன்ற அறிஞர்கள் போற்றும் பத்திரிக்கைகள், பல இஸ்லமிய சமூக கவலைக்கொண்ட சிந்தனைவாதிகள் எல்லாம் சமீப காலமாக நம் தமிழ் சகோதரர்கள் மார்கத்தின் பெயரால், தான் சார்ந்திருக்கு சொந்த கொள்கையின் பெயரால் மற்றும் ஏதேதோ காரணத்தால் கணினி முலமாக செய்யும் சச்சரவுகள் குறித்து வேதனையுறுவதை சொல்லி எதிர்காலம் குறித்தும் எதிர்கால சமூக பிளவுகள் குறித்தும், ஏற்படப்போகும் சமூக அமைதின்மை குறித்தும் எச்சரிக்காமல் இல்லை.
தவறான சிந்தனைகளை மக்களுக்கு ஊட்டி குழப்பங்களை ஏற்படுத்துவது, சமூக நல்லிணக்கத்திற்கு பங்கம் விளைவிப்பது, தனிப்பட்ட நபர்களின் மீது தாக்குதல் தொடுத்து பூசல்களுக்கு காரணமாய் இருப்பது, ஜாமாஅத் ஒற்றுமைக்கு எதிராக, பாரம்பரிய சிந்தனைகளுக்கு எதிராக மக்களிடையே தூபம் இட்டு அடிதடிகளுக்கு காரணமாய் இருப்பது போன்ற வேலைகளை எல்லாம் சிலர் தங்களின் பிலாக்குகள் மூலமாக செயல் படுத்தி வருகின்றனர். இதை மக்கள் அறியாமல் இல்லை, இவர்களை நினைத்து நல்ல உள்ளங்கள் எல்லாம் நொந்து தான் போகின்றனர்.]
தவறான சிந்தனைகளை மக்களுக்கு ஊட்டி குழப்பங்களை ஏற்படுத்துவது, சமூக நல்லிணக்கத்திற்கு பங்கம் விளைவிப்பது, தனிப்பட்ட நபர்களின் மீது தாக்குதல் தொடுத்து பூசல்களுக்கு காரணமாய் இருப்பது, ஜாமாஅத் ஒற்றுமைக்கு எதிராக, பாரம்பரிய சிந்தனைகளுக்கு எதிராக மக்களிடையே தூபம் இட்டு அடிதடிகளுக்கு காரணமாய் இருப்பது போன்ற வேலைகளை எல்லாம் சிலர் தங்களின் பிலாக்குகள் மூலமாக செயல் படுத்தி வருகின்றனர். இதை மக்கள் அறியாமல் இல்லை, இவர்களை நினைத்து நல்ல உள்ளங்கள் எல்லாம் நொந்து தான் போகின்றனர்.]
காப்பாற்றூங்கள்..காப்பாற்றுங்கள்.. என்று ஒரு பெண்ணின் அலரல் குரல் மிக பலமாக கேட்க அந்த வழியே சென்ற ஒருவர் மிகவும் திடுக்கிட்டு ஐய்யகோ! யாரோ ஒரு பெண்ணை பலவந்தம் செய்கிறார் போலும் என்று நினைத்து சற்று பக்கத்தில் யாரும் தென்படுகிறாரா என பதறிக்கொண்டே பார்க்க, வந்த ஒருவரிடம் இதோ இந்த வீட்டிலிருந்து ஒரு பெண்ணின் அலரல் சத்தம் கேட்கிறது எனச்சொல்ல அவரும் ஆமாம் ஏதோ ஒரு கொடுமை நடக்கிறது என நினைத்து அவ்வீட்டைக் கடக்கும் பாதையில் தெரியும் ஒரு திறப்பு வழி இருவரும் தூரத்திலிருந்து பார்த்தனர், அங்கு ஒரு பெண்ணை ஒருவன் கத்தியால் குத்த முயற்சிப்பதையும் அவள் அதிலிருந்து தப்ப வீட்டிலிருந்து அங்கும் இங்கும் ஓடி காப்பாற்றுங்கள்.. காப்பாற்றுங்கள்..என அலறிக்கூச்சலிடுவதையும் கண்டு மனவேதனைப்பட்டு உடனே ஊர்வாசிகள் அனைவரையும் கூட்டி அதை நிறுத்த வேண்டும் என எண்ணி இருவரும் தெருவில் நின்று கத்த எல்லோரும் கூடி விட்டனர், பின் இருவரும் நிலைமையை எடுத்துச்சொல்ல வீட்டை முற்றுகை இட்ட ஊரார்கள் உள்ளே சென்று பார்க்க அனைவரும் திடுக்கிட்டனர், வீட்டின் உள்ளே ஒருவரல்ல ஒரு கும்பலே நிற்கிறதாம். பிறகேன் இருவரையும் இப்படி துரத்தவும்..ஓடவும்..கத்தவும்.. விட்டு வேடிக்கை பார்கின்றனர் என எண்ணியவர்கள் அவர்களிடமே விசாரித்த போது தான் விசயமே தெரிந்தாம் அது வெறும் நாடக ஒத்திகை என்று.
இப்படித்தான் எதைப்பற்றியும் விபரமே தெரியாமல் தங்களுக்கு முற்றும் சம்பந்தம் இல்லாத விசயங்களில், தெளிவும், அறிவும் இல்லாமல், அவர்களுடைய உள்ளங்கையிலேயே சீல் வடிய அதையெல்லாம் பொருட் -படுத்தாமல் மற்றவர்களின் விசயத்தில் அது அப்படி இருக்குமோ அல்லது இப்படி இருக்குமோ என்ற தனது மனம் சொல்லும் வெற்றுக் கற்பனைகளுக்கு கை, கால்கள் வைத்து சோடித்து சுற்றவிடுபவர்கள் இவர்கள், அவர்களாகவே சமூகத்தில் தங்களின் அந்தஸ்தை மிககீழ் படுத்திக்கொள்கின்றனர் மட்டுமல்லாது இறையவனின் முனிவுக்கும், சாபத்திற்கும் தங்களை மட்டுமல்ல தங்களின் ஒட்டுமொத்த சந்ததியினரையும் ஆட்படுத்திக்கொள்கின்றனர்.
ஆம், முன்பு கிடைக்கும் இடத்திலெல்லாம் அங்கும் இங்குமாய் பிறர் பற்றியே பேசிக்கொண்டும், தங்களுக்கென்று தனிப்பட்ட கொள்கைகள் நல்ல சிந்தனைகள் ஏதும் இல்லாது பிறரின் குற்றங்குறைகள் என்று தான் விரும்பியவற்றையெல்லாம் விரும்பாதவர்கள் மீது பலியாக.. இட்டுக்கட்டி பேசி நரம்பில்லா நாவை சுழற்றி.. சுழற்றி சுகங்கண்ட சுரணையற்ற பிறவிகள் இப்போது நவீன காலத்தில் கண்ணியை வைத்து கலகம் செய்து சுகம் காண களம் இறங்கி இருக்கிறார்கள்.. தன்னை.., தன் குடும்பத்தை.., தன் சுற்றத்தை சற்றும் நினைத்துக்கூட பாராமல்.., தன் முதுகை கொஞ்சமும் பார்க்க துணியாத பார்க்கவும் திராணியில்லாத கேவலங்கள் பிறரின் முதுகை பற்றியே எப்போதும் குறை கூறித்திரியும் கொல்லிகளாகவே மாறிவிட்டார்கள்! அந்தோ இது எத்தகைய பிறவி ஈணம்..! இது இந்த உலகத்தில் இவர்களுக்கு இறைவன் கொடுக்கும் மிக இழிவான நரகம்..!
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கை நெறிப்பிரகாரம் ஒரு மனிதன் அண்டை அயலாருக்கு உதவி புரிந்தால் கூட அதை தவறான பார்வையில் பார்க்கும் கீழான சமூக அவலத்தை நான் என்னென்று செல்ல.. நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியபடி அடுத்தவன் மீது அபாண்டமாக புறங்கூறித் திரியும் இவர்கள் மலத்தை திண்ணும் கேவலமானவர்கள்.., இவர்கள் உணவு.. உணவு என்று நாளை மறுமையில் கேட்கும் போது எரியும் கங்குகளை கொடுத்து உணவாக உண்ணுங்கள் என்று சொல்லப்படுமாம். என்ன செய்வது எல்லோருமா மேன்மை அடைய முடியும்.., ஊருக்கு ஊர் இப்படியும் சில ஜென்மங்களை அல்லாஹ் உலவ விட்டுத்தானே வைத்திருப்பான்.
வளைதளங்களை, ஈ-மெயில் குரூப்ஸ்-களை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தலாம், அதில் என்ன செய்தியை வேண்டுமானாலும் எழுதலாம், அனுப்பலாம், யாரைப் பற்றி வேண்டுமானாலும் தான் நினைத்தபடி வாந்தி எடுக்கலாம் என்று சில காலமாய் நம்மிடையேயும் அறிவுணர்ச்சி இல்லாத சிலர் உலா வருகின்றனர் என்பதை..,
* அறிவுக்கும் தங்களுக்கும் இடையே ஒரு தொடர்பு கூட இல்லை, அறிவு விசயத்தில் தங்களுக்கு மிருகங்கள் கூட ஒரு படி அல்ல பல படிகள் மிக மேலானது என்பதை உலகுக்கு காட்டும் இவர்களின் பேச்சு, எழுத்து மற்றும் செயல்பாடுகள்..,
* எந்நிலையிலும் நல்ல விசயங்கள் தங்கள் மூலமாய் நடந்தேறக் கூடாது என்பதில் அவர்களுக்கு இருக்கும் அக்கரை..,
* சமூகத்தில் ஊரில் யாரும் நிம்மதியாய், நல்லவிதாய் யாரும் இருந்து விடக்கூடாது என்பதில் அவர்கள் காட்டும் முனைப்பு..,
போன்ற இவைகளால் எல்லாம் இடைப்பட்டக் காலங்களில் அவர்களே தங்களை தாங்கள் எப்படிப்பட்ட இழிநிலையில் இருப்பவர்கள் என்று காட்டிக்கொள்ள.., நாம் அவர்களை எல்லோரும் கண்டுகொள்ளாமல் இல்லை, இது அவர்களுடைய மிக மோசமான மனநிலையை வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது.., சமூகத்தில் இருப்பவர்கள் அவர்களின் மீது அதீதமாக வெறுப்பு கொள்ள அவர்களே காரணமாகிறார்கள்.., ஒருவரின் மனம் விரும்பினால் நாத்தீகத்தைக்கூட பின்பற்ற அல்லது அதைப்பற்றி பேசவோ அல்லது எழுதவோ செய்யலாம் என்ற நிலை இருக்க, தாங்கள் பின்பற்றும் அதே கொள்கைக் கோட்பாடுகளைத்தான் எல்லோரும் பின்பற்ற வேண்டும் என நிர்பந்திப்பது எந்த விதத்தில் சரியாகும், அவ்வாறு ஒருவர் ஒரு கொள்கையில் இருக்கிறார் அதைப்பற்றி சில கருத்துகள் எழுதிகிறார் எனும் பட்சத்தில் அந்தக்கருத்தை நேருக்கு நேர் எதிர்கொள்ள துணிவில்லாத அசூசை தூசுகள் தனிநபர் தாக்குதலில் ஈடுபட்டால் நிறுத்திக்கொள்வார்கள் என நினைக்கிறார்கள் போலும்.பாபம் இந்த பிரிவினர் இவ்வளவும் செய்து விட்டு இஸ்லாம்.., தவ்ஹீது.., என்றெல்லாம் தம்பட்டம் அடித்தால் யார் தான் நம்புவார்கள் அவர்களுக்கும் இஸ்லாத்திற்கும் சம்பந்தம் இருப்பதாக..!
வளைதளங்களை, ஈ-மெயில் குரூப்ஸ்-களை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தலாம், அதில் என்ன செய்தியை வேண்டுமானாலும் எழுதலாம், அனுப்பலாம், யாரைப் பற்றி வேண்டுமானாலும் தான் நினைத்தபடி வாந்தி எடுக்கலாம் என்று சில காலமாய் நம்மிடையேயும் அறிவுணர்ச்சி இல்லாத சிலர் உலா வருகின்றனர் என்பதை..,
* அறிவுக்கும் தங்களுக்கும் இடையே ஒரு தொடர்பு கூட இல்லை, அறிவு விசயத்தில் தங்களுக்கு மிருகங்கள் கூட ஒரு படி அல்ல பல படிகள் மிக மேலானது என்பதை உலகுக்கு காட்டும் இவர்களின் பேச்சு, எழுத்து மற்றும் செயல்பாடுகள்..,
* எந்நிலையிலும் நல்ல விசயங்கள் தங்கள் மூலமாய் நடந்தேறக் கூடாது என்பதில் அவர்களுக்கு இருக்கும் அக்கரை..,
* சமூகத்தில் ஊரில் யாரும் நிம்மதியாய், நல்லவிதாய் யாரும் இருந்து விடக்கூடாது என்பதில் அவர்கள் காட்டும் முனைப்பு..,
போன்ற இவைகளால் எல்லாம் இடைப்பட்டக் காலங்களில் அவர்களே தங்களை தாங்கள் எப்படிப்பட்ட இழிநிலையில் இருப்பவர்கள் என்று காட்டிக்கொள்ள.., நாம் அவர்களை எல்லோரும் கண்டுகொள்ளாமல் இல்லை, இது அவர்களுடைய மிக மோசமான மனநிலையை வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது.., சமூகத்தில் இருப்பவர்கள் அவர்களின் மீது அதீதமாக வெறுப்பு கொள்ள அவர்களே காரணமாகிறார்கள்.., ஒருவரின் மனம் விரும்பினால் நாத்தீகத்தைக்கூட பின்பற்ற அல்லது அதைப்பற்றி பேசவோ அல்லது எழுதவோ செய்யலாம் என்ற நிலை இருக்க, தாங்கள் பின்பற்றும் அதே கொள்கைக் கோட்பாடுகளைத்தான் எல்லோரும் பின்பற்ற வேண்டும் என நிர்பந்திப்பது எந்த விதத்தில் சரியாகும், அவ்வாறு ஒருவர் ஒரு கொள்கையில் இருக்கிறார் அதைப்பற்றி சில கருத்துகள் எழுதிகிறார் எனும் பட்சத்தில் அந்தக்கருத்தை நேருக்கு நேர் எதிர்கொள்ள துணிவில்லாத அசூசை தூசுகள் தனிநபர் தாக்குதலில் ஈடுபட்டால் நிறுத்திக்கொள்வார்கள் என நினைக்கிறார்கள் போலும்.பாபம் இந்த பிரிவினர் இவ்வளவும் செய்து விட்டு இஸ்லாம்.., தவ்ஹீது.., என்றெல்லாம் தம்பட்டம் அடித்தால் யார் தான் நம்புவார்கள் அவர்களுக்கும் இஸ்லாத்திற்கும் சம்பந்தம் இருப்பதாக..!
இது மிகவும் வருந்தத்தக்க அடியோடு அகற்றப்பட வேண்டிய ஒன்று என்பதை நல்லெண்ணம் கொண்ட எல்லோரும் ஒன்றுபட்டு உரைக்கின்றனர், அல்லவை என்றுமே புறந்தள்ளப்படும். அல்லாஹ் அதற்கு அருள்வானாக!
பேஸ்புக், ஈ-மெயில் குரூப்ஸ் மற்றும் பிளாக்குகள் வழியாக அதேசமயம் இவற்றுக்கு மாறாக சமூக மக்களுக்கு நல்ல அதிர்வலைகளை ஏற்படுத்தி, இளைய சமூகத்திற்கு தன்னம்பிக்கை தொழில் ஆர்வம், எதைவும் எதிர்கொள்ளும் துணிவு, நடுநிலை சிந்தனை இவைகளை கொடுத்து எதையும் நல்ல அணுகுமுறையோடு சிந்திப்பது போன்ற உயர்வானவைகளை நல்ல இளைஞர் பட்டாளங்களும் இருக்கத்தான் செய்கிறது, இவர்களுக்கு மேற்கூறப்பட்ட எந்த தீந்தொழிலும் தெரியாது,.இவர்கள் ஒவ்வொரு கணமும் சமூக ஒற்றுமை குறித்தும், சமூக நல்லிணக்கம் குறித்தும், சமூக அமைதி குறித்தும், சமூக மேம்பாடு குறித்தும் தான் இவர்களது சிந்தனைகள் இருக்கும். இவ்வாறான சன்மார்க்க இளைஞர்கள் இயற்கையாகவே நல்ல இயல்பிணர்கள்.. இறையவனின் செயல் கருவிகளாக பங்காற்றுபவர்கள்..
ஆக நல்ல வலைதளங்களை அடையாளம் கண்டு தவறான, சமூக ஒற்றுமையை குலைக்கும், தனிநபர் தாக்குதல் புரியும், இழிவான சிந்தனைகளை முன்வைக்கும், புறங்கூறி தரந்தாழ்ந்த வேலைகளை செய்யும், இளைய சமூகத்தின் நற்சிந்தனையை நாசப்படுத்தும் தீய பேய்களின் வலைதளங்களை புறக்கணிப்போம்.
சில நாட்களுக்கு முன் ஒரு கவிதையின் மூலம் தனது கருத்துக்களை சமுகத்திற்கு சொல்ல வந்த காரணத்தால் அந்த தனிநபர் மீது எந்த ஒரு முகாந்திரமும் இல்லாது அதை கொள்கை ரீதியில் அரோக்கியத்தோடு வாதிட வராமல் மிகவும் கீழ் ரகமாக போய் அடுக்கடுக்கான அசூசை வார்த்தைகளை கையாண்டு முற்றிலும் உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிடும் செயலை சிலர் அரங்கேற்றி அசிங்கப்பட்டனர் ஆனாலும் ஏன் நல்லவர்கள் பெரும்பாலும் நிதானம் காக்கிறார்கள் என்றால் 'கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே, சங்கு சுட்டாலும் வெண்மை தரும்’ என்பது தான்.
மனித மனங்களை அறிந்தவர்கள் அல்ல நீங்கள், உங்கள் உள்ளத்தை தூய்மையாக்க இறையவனிடம் மன்றாடுங்கள்..!
அல்லாஹ் இந்த சமூகத்தை என்றென்றும் மேற்கூறப்பட்ட தீங்குகளிலிருந்து காத்தருள்வானாக!
சமூக விடிவை இறையவனிடம் வேண்டி..!
கட்டுரையாளர் என்ன சொல்லவருகிறார்.தவறு செய்கிறவன்,மார்க்கவிரோத செயலில் ஈடுபடுகிறவன்,தன்னையும்
ReplyDeleteதன் சமுகத்தை மாற்று மதத்தவனுக்கு அடகு வைப்பதையும்,இஸ்லாமிய ஷரியாவை ரத்து செய்ய வேண்டுமென (தூக்கு தண்டனை)தன்னுடைய அரசியல் கோமாளித்தனத்துக்காக சில புலிப் பினாமிகளுடன் சேர்ந்து மேடைபோட்டு பேசுவதையும் பார்த்துக்கொண்டு நமக்கென்ன என்று சும்மா இருக்கச் சொல்கிறாரா?யாரு சொன்னாலும் கேட்பார்கள் தவ்ஹீத்காரன் சொன்னால் உங்களுகெல்லாம் பிடிக்காதே.கடுகளாவாவது ஈமான் இருந்தால் இப்படிஒரு கட்டுரை எழுத தோன்றியிருக்காது.முதலில் முஸ்லிமாகவும்,எந்த ஊரில் பிறந்தோமோ அந்த நாட்டுக்காரனாகவும் , ஊர்க்காரனாகவும்
இருப்போம்.எந்த ஜமாத்தில் சேர்ந்தால் உலக ஆதாயம்,எந்த ஜமாத்தில் சேர்ந்தால் மறுமையில் ஆதாயம் என்பதை தேர்ந்தெடுப்போம்.
சத்தியத்தை சொல்லும் போது இதுமாதிரி பல அவதுறுகள் வரத்தான் செய்யும்.
Meraan
.
உங்களில் எவரேனும் ஒரு தீமையை கண்டால்
ReplyDeleteகையால் தடுங்கள்
வாயால் தடுங்கள் அதற்கும் இயலாவிட்டால்
மனதால் வெறுத்து ஒதுங்கி விடுங்கள்.
யாழ் குருவி
Very Good article Mr. Rajaa Mohamed
ReplyDeleteIt is timely requirement. When Islam says there is no force in religion, some people force others in an un-islamic way to follow them.
The whole ummah should wake up against these elements
Jansin
இந்தக் கட்டுரையை எழுதியது உண்மையான முஸ்லிமா? அல்லது முஸ்லிம் பெயரில் யூத அடிவருடியா?
ReplyDelete''ஒருவரின் மனம் விரும்பினால் நாஸ்திகத்தைப் பின்பற்ற, பேச, எழுத செய்யலாம்'' என்று அல்லாஹ்வை நம்பும் ஒரு முஸ்லிம் நியாயம் காண்பானா?
யாழ் முஸ்லிம் ஆசிரியர் கட்டுரையை முழுமையாக வாசித்துவிட்டுத்தான் பிரசுரித்தாரா?
நல்ல விடையத்தை சொல்லுவது போல நடித்து,வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல கட்டுரை இஸ்லாத்திற்கு முரணான கருத்தை நாசுக்காக புகுத்துகின்றது.
கட்டுரையாளர் தந்து சொந்தப் பண்புகளையும், மன வக்கிரமங்களையும் வேறு ஒருவரினுடையதாய் கற்பனை வடித்து கட்டுரை எழுதியுள்ளாரா?
கட்டுரை இஸ்லாமிய பிரச்சாரத்தை, குறிப்பாக, ''நன்மையை ஏவி, தீமையை தடுக்கும்'' வேலையை குறை கூறுவதகாவும்,
நாஸ்திகம் பேசினாலும், நாஸ்திகம் பின்பற்றப் பட்டாலும், பிரச்சாரம் செய்யப் பட்டாலும், அதே போல நாச்தீகத்தை விட கெட்ட கொள்கைகள் பிரச்சாரம் செய்யப் பட்டாலும் முஸ்லிம்கள் அதனை எதிர்க்காமல் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்ற கட்டுரை இது.
குறிப்பாக, முஸ்லிம் சமூகத்தின் மொத்த நோய் எதிர்ப்பு சக்தியையும் இல்லாமலாக்கும் நோக்குடன் எழுதப் பட்டுள்ளது.
யாழ் முஸ்லிம் இதனை, இதன் வஞ்சக நோக்கம் தெரியாமல் பிரசுரித்தது எப்படி?
இந்த கட்டுரை யய் நீக்கி விடுங்கள்.முட்டள்தனமான கட்டுரை
ReplyDeleteகட்டுரைக்கு போடப்பட்டுள்ள புகைப்படங்கள் அருவருப்பாக உள்ளது.
ReplyDeleteசாப்பாட்டு நேரத்தில் இந்த புகைப்படங்கள் மனதில் வந்து தொலைக்காமல் இருக்க வேண்டும்.
யாழ் முஸ்லிம், தயவு செய்து நல்ல புகைப்படங்களை மட்டும் போடுங்கள்.
வாசகர்களை அரவருக்கச் செய்யும் புகைப்படங்களை ஏன் அதிகமாக தெரிவு செய்கின்றீர்கள்?
புகைப்படங்களை விடவும் கட்டுரையின் கருத்துக்கள் மிகவும் அருவருப்பாக உள்ளன.
சலீம் மொஹிடீன் சொல்வது போல கட்டுரையை நீக்கி விட்டாலும் தப்பில்லை.
No one has a right to tell the moderator of this site to remove this article. The narrow mind people can digest this. Please don't use this sit for fight between Muslims like other sites as you aware of that sits .
ReplyDeletePlease guide the Muslim society to think broad and don't make them a frog in a well in the name of Quran & Sunnah. actually this is trick of enemies. We learned a good lesson from Egypt.
மேடை,இணைய ,பத்திரிகை ஊடாக விமர்சித்தால் கட்டுரை எழுதியவர் பாராட்டப்படுவார்.சென்ற 24 /06 /12 இல்
ReplyDeleteநடந்த கூட்டத்தை வைத்து, PJ என்ற தனி நபரின் வெறுப்பினால் இந்த கட்டுரை எழுதியவரை எல்லோரும் விமர்சிக்கிறார்கள்.எந்த ஜமாத்தையும் சேராத சமூகத்தின் மேல் உள்ள அக்கறையுள்ளவர்கள் அந்த கூட்ட நிகழ்ச்சியை
கேட்டுப்பார்த்தால் அங்கு பேசியதை சரி காண்பார்கள்.
நன்மையை ஏவி தீமையை தடுக்கும் ஒரு கூட்டம் உங்களில் இருக்கட்டும் என நபி (ஸல்) நவின்றுள்ளார்கள்.
இந்த கட்டுரையை நீக்க வேண்டாம் ஏனெனில் கட்டுரையாளரின் மார்க்கத்தை விளங்காத தன்மையை எல்லோரும் அறிந்து கொள்ள ஏதுவாக இருக்கும்.எப்பவுமே சமுகத்தின் மீது அக்கறையுடன் இருப்பவர்களுக்கு அல்லாஹ்வின்
உதவி ஏதாவது ரூபத்தில் வந்து கொண்டே இருக்கும்.
ஊடகவியலாளர் எப்பவுமே தன் மன இச்சைப்படி வாழமுடியாது,வாழாவும் கூடாது.உங்களைப் போன்றவர்களை
உலகம் நடு நிலையாலர்கலாகத்தான் பார்க்கிறது.கேவலமான வார்த்தைகளுடன் வரக்கூடிய விமர்சனங்களை
தவிர்த்து விட்டு நியாயமான கருத்துகளை நிச்சயமாக பிரசுரிக்கத்தான் வேண்டும்.
யாழ் ஒலி
ஆங்கிலத்தில் குறிப்பு எழுதியிருப்பவரை எண்ணிப் பார்த்தால், பாவம் கவலையாக இருக்கின்றது.
ReplyDeleteகுர் ஆன் ஹதீஸின் பெயரால் முஸ்லிம்களை கிணற்றுத் தவளை ஆக்க வேண்டாமாம்.
இவரின் பெயர் சல்மான் ரூஷ்தியா என அறிய விரும்புகின்றோம்.
யாழ் முஸ்லிம் எப்படி சல்மான் ருஷ்தித் தனமான கருத்துக்களை அனுமதிக்கின்றது?
குர் ஆன் ஹதீஸ் என்றாலே சல்மான் ருஷ்துகளுக்கும் யூதரளுக்கும் பிடிக்காதே.