Header Ads



பிரித்தானிய வாழ் இலங்கை முஸ்லிம்கள் ஜனாதிபதி மஹிந்தவை சந்தித்தனர் (படங்கள்)

தகவலை அனுப்பிவைத்தது - SLMDI.UK

பிரித்தானியாவிலுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் புலம் பெயர்ந்தோர் அமைப்பு  புதன் கிழமை (06 .06 .2012 ) லண்டன் பார்க் லேனில் உள்ள ஹில்டன் ஹோட்டலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்து ,கலந்துரையாடல் ஒன்றை நடாத்தியது.

இதில் ஜனாதிபதி, "முஸ்லிம் புலம் பெயர்ந்தோர் அமைப்பு" அண்மைக் காலமாக தாய் நாட்டுக்கு செய்து வருகின்ற முக்கிய பங்களிப்புகளுக்காக தனது மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொண்டதுடன் தொடர்ந்தும் இவ்வமைப்பின் உதவியும் ஒத்தாசையும் நமது தாய் நாட்டை சுவீட்சப் பாதையில் கட்டியெழுப்ப அவசியம் தேவை என்றார்.

இறுதியில், இந்தப் புலம் பெயர்ந்த அமைப்பின் உறுப்பினர்கள், தமது எதிர்கால திட்டங்கள் பற்றியும் இலங்கையிலுள்ள முஸ்லிம்கள் சமகாலத்தில் எதிர்நோக்கும் முக்கியமான பிரச்சினைகள் பற்றியும் எடுத்துக் கூறினர். இச்சத்திப்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரித்தானியக் கிளையும் கலந்து கொண்டது.




5 comments:

  1. நன்றாக போட்டோவுக்கு போஸ் கொடுக்கிறார்கள்
    Meraan.

    ReplyDelete
  2. எவ்வளவு அடித்தாலும் தாங்குகிறார்கள் ரொம்பவும் நல்லவர்கள் முஸ்லிம்கள் ????என்று சொல்லியிருப்பாரே ஜனாதிபதி ,,,,,,,,,,,,,,,,,

    ReplyDelete
  3. Yes really its good news that our muslim brothers met President and proof we are muslims not a traitors.

    I know that some of us not like the President met london but this goodness muslims brotherhood teach us more and we will get more benefits later and they will keep us more trustable,Alhamdurillah!

    From Sweden

    ReplyDelete
  4. please put what they talk with president and what president promise??

    ReplyDelete
  5. இலங்கையில் தமிழர்களை போன்று ஒரு நாள் முஸ்லிம் மக்களும் அடிமை படலாம் ......................

    ReplyDelete

Powered by Blogger.