Header Ads



மியன்மார் முஸ்லிம்களை கடலுக்குள் தள்ளும் பங்களாதேஷ் இராணுவம்



50க்கும் மேற்பட்டவர்களின் மரணத்திற்கு காரணமான வகுப்புவாத கலவரத்திற்கு பிறகு மியான்மரில் இருந்து ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் புலன்பெயர்ந்து வருகின்றனர்.

பெரும்பான்மை சமூகமான பெளத்தர்களின் தாக்குதலைத் தொடர்ந்து இவர்கள் தமது நாட்டைவிட்டு வெளியேற நேர்ந்துள்ளதாக அல்ஜஸீரா கூறுகிறது.

மியான்மரின் மேற்கு மாவட்டமான ராக்கேனில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது பெளத்தர்கள் தாக்குதலை கட்டவிழ்த்து விட்டனர். தமது பூர்வீக நாடான பங்களாதேஷிற்கு செல்ல அவர்கள் ரோஹிங்கியா முஸ்லிம்கள் முயன்றபொழுது பங்களாதேஷின் கடலோர காவல்படை அவர்களை உள்ளே நுழைய அனுமதிக்கவில்லை.

ரோஹிங்கியா அகதிகளை அங்கீகரிக்க பங்களாதேஷுக்கு ஐ.நா கோரிக்கை விடுத்த போதிலும் தண்ணீரும், உணவும் அளித்துவிட்டு அவர்களை மீண்டும் கடலுக்கு ராணுவத்தினர் திருப்பி அனுப்புவதாக அல்ஜஸீரா கூறுகிறது. தூது

1 comment:

  1. இராணுவ உடைக்குள் மனிதாபிமானம் ரெம்பவும் குறைவுதான்.அந்த உடைக்கு அவ்வளவு மகிமை.
    பாதிக்கப்பட்டவர் எவராயினும் எல்லா நாட்டு அரசினதும் கடமை என்பதை ஆட்சி செய்பவர்களுக்கு,அமெரிக்காவும்,ஐரோப்பாவும் சொல்லி கொடுக்கவில்லை போலும்.
    Meraan

    ReplyDelete

Powered by Blogger.