இஹ்வானுல் முஸ்லிம்களுக்கு உதவ தயார் - சர்வதேச நாணய நிதியம் அறிவிப்பு
எகிப்து ஜனாதிபதி முகம்மது முர்சிக்கு உதவ ஐ.எம்.எப்., தயார் என அதன் தலைவர் கிறிஸ்டியன் லகார்டே தெரிவித்துள்ளதாக ஐ.எம்.எப்., செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து நேற்று லகார்டே, முர்சியிடம் போனில் பேசியபோது, அவருக்கு வாழ்த்து தெரிவித்ததோடு தேவையான உதவியையும் செய்வதாக கூறினார். மேலும் கெய்ரோ வளர்ச்சிக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம் என்றார்.
அப்போது ஏற்கனவே கெய்ரோ மேம்பால அமைப்பிற்கு 3.2 பில்லியன் டாலர் உதவி அளிக்க ஆலோசனை நடத்தப்பட்டதாகவும் அப்போது நிலையான அரசு அமையாததால் அப்படியே நின்று விட்டதாகவும் தற்போதைய சூழ்நிழையில் அதை மறு பரிசீலனை செய்து உதவி அளிப்பதாக கூறியதாக செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
Post a Comment