Header Ads



தேசிய சமூக ஒருமைப்பாட்டு வாரம் - மக்களின் தேவைகள் நிவர்த்திக்கப்படும்..!


தேசிய சமூக ஒருமைப்பாட்டு வாரத்தை பிரகடனம் செய்ய தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சு தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் ஜூலை மாதம் 16ம் திகதி முதல், 22ம் திகதி வரை இந்த வாரம் அனுஷ்டிக்கப்படவுள்ளதாகவும் இதன் மூலம் யுத்தம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் சமூகத்தில் புறந்தள்ளப்பட்டுள்ள நபர்களை மீண்டும் சமூகத்துடன் இணைத்தல் உட்பட பல சமூகப் பணிகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிறப்பத்தாட்சி பத்திரம், திருமணச் சான்றிதழ், தேசிய அடையாள அட்டைகள் உள்ளிட்ட அன்றாடம் தேவைப்படும் ஆவணங்கள் இன்றி சமூகத்தில் பிற்படுத்தப்பட்டிருக்கும் நபர்களுக்கு தேவையான ஆவணங்களை வழங்குதல், விதவைகளுக்கு சுயதொழில் முயற்சிக்கான உதவிகளை வழங்குதல், யுத்தம் மற்றும் ஏனைய காரணங்களினால் பெற்றோரை இழந்துள்ள பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் இந்த சமூக ஒருமைப்பாட்டு வாரத்தில் மேற்கொள்ளப்பட உள்ளன.
 
 இதனை தவிர போதிய பண வசதி இல்லாத காரணத்தால் சட்ட ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள முடியாதுள்ள வறிய மக்களுக்கு இலவசமாக சட்ட ஆலோசனைகளையும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.