Header Ads



கிழக்கு பல்கலைக்கழக விவகாரம் - பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவின் விளக்கம்

KI

கிழக்கு பல்கலைக்கழகத்தின் பேரவைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினரின் பெயரை ஏற்கனவே பிரதியமைச்சர் விநாயக மூர்த்தி முரளிதரன் பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்கழுவிற்கு சிபாரிசு செய்திருந்தார். அதன் பின்னர் என்னிடமும் கேட்கப்பட்ட போது நானும் புதிய உறுப்பினரின் பெயரை சிபாரிசு செய்திருந்தேன் என சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்தார்.

கிழக்கு பல்கலைக்கழக பேரவையில் புதிய உறுப்பினராக டாக்டர் எம்.எஸ்.ஜாபீர் என்பவரின்  நியமனம் தொடர்பாக ஏற்பட்டுள்ள சர்ச்சை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா மேற்கண்டவாறு கூறினார்.

மேற்படி புதிய உறுப்பினர் டாக்டரின் ஜாபீரின் பெயரை பேரவை ஆரம்பிக்கும் போதே பிரதியமைச்சர் விநாயக மூர்த்தி முரளிதரன் சிபாரிசு செய்திருந்தார்.

தற்போது கிழக்கு பல்கலைக்கழக விவகாரங்களில் பிரதியமைச்சர் விநாயக மூர்த்தி முரளிதரன் கூடுதலான அக்கறை எடுத்து செயற்பட்டு வருகின்றார். அவரே கிழக்கு பலக்லைக்கழக விவகாரங்களில் தற்போது கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றார். பின்னர் அதில் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு டாக்டர் ஜாபீர் கிழக்கு பல்கலைக்கழக பேரவை உறப்பினராக நியமிக்கப்பட்டார்.

இவரது பெயர் அன்மையில் எற்பட்ட கிழக்கு பல்கலைக்கழக பேரவை உறப்பினர்  வெற்றிடத்தின் போது சிபாரிசு செய்யப்படவில்லை. இவரின் பெயர் ஏற்கனவே சிபாரிசு செய்யப்பட்டிருந்தது.
 எனக்கு அங்கு வெற்றிடம் ஏற்பட்ட விடயம் தெரியாது அதில் மரணித்த கௌரவ சிறிதரன் சில்வஸ்டர் உறுப்பினராக இருந்த விடயம் என்பது தொடர்பாகவும் எனக்கு தெரியாது.

ஆனால் நானும் டாக்டர் ஜாபீரின் பெயரை பின்னர் சிபரிரிசு செய்திருந்தேன். இவரின் நியமனம் தொடர்பாக ஏற்பட்டுள்ள சர்ச்சை தொடர்பில் உயர் கல்வியமைச்சரை சந்தித்து வினவினேன். எந்தவொரு பல்கலைக்கழகமும் இன ரிதியான பல்கலைக்கழகமல்ல. அவ்வாறு இன ரீதியாக இயங்கவும் முடியாது.

புதிதாக நியமிக்கப்பட்ட கிழக்கு பல்கலைக்கழக பேரவை உறுப்பினர் ஜாபீரின் பெயரை நீக்க முடியாது. எனவும் இன ரீதியாக இதை யாரும் பார்க்கத்தேவையில்லை என உயர் கல்வியமைச்சர் என்னிடம் தெரிவித்தார்.

இந் நிலையில்  இன ரீதியான கருத்தக்களை விதைத்து தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்த சிலர் முயலுகின்றனர். இவற்றுக்கு அரசாங்கம் ஒரு போதும் ஆதரவளிக்காது.

மாணவர்களை இது விடயத்தில் தூண்டிவிட்டு சில அரசியல் வாதிகள் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். இதில் மாணவர்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும். கிழக்கு பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடத்தை கொண்டு வருவதற்கு காரணமாக இருந்தவன் நான்தான்.

2000ம் ஆண்டு ஜனாதிபதியாக சந்திரிக்கா பண்டார நாயக்க குமாரதுங்க இருக்கும் போது அவர் தலைமயிலான அமைச்சரவைக்கு நான்  விடுத்த வேண்டுகோளின் பேரில் அப்போதய கல்வியமைச்சர் றிச்சட் பத்திரண சமர்ப்பித்த பிரேரணையின் அடிப்படையில் கிழக்கு பலக்லைக்கழகத்திற்கு மருத்தவ பீடம் கொண்டு வரப்பட்டது எனவும் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா மேலும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.